மூன்று புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம்: ராயல் என்ஃபீல்டுக்கு நெருக்கடி!

ஜாவா 42 மோட்டார்சைக்கிள் ரூ.1.55 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், ஜாவா மோட்டார்சைக்கிள் மாடல் ரூ.1.64 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் வந்துள்ளன. ஜாவா பெரக் என்ற பாபர் ஸ்டைலிலான கஸ்டம் மாடலுக்கு ரூ.1.89 லட

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புதிய தலைமுறை ஜாவா மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்தியாவில் இன்று மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு நேரடி போட்டியாக வந்திருக்கும் இந்த புதிய மாடல்கள் குறித்த விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மூன்று புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம்: ராயல் என்ஃபீல்டுக்கு நெருக்கடி!

புத்துயிர் பெற்ற ஜாவா

பாரம்பரியம் மிக்க ஜாவா பிராண்டில் புதிய தலைமுறை மோட்டார்சைக்கிள் மாடல்களை மஹிந்திரா குழுமத்தின் அங்கமாக செயல்படும் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஜாவா, ஜாவா 42 மற்றும் ஜாவா பெராக் ஆகிய மூன்று புதிய மோட்டார்சைக்கிள்கள் இன்று இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

மூன்று புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம்: ராயல் என்ஃபீல்டுக்கு நெருக்கடி!

விலை விபரம்

ஜாவா 42 மோட்டார்சைக்கிள் ரூ.1.55 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும், ஜாவா மோட்டார்சைக்கிள் மாடல் ரூ.1.64 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் வந்துள்ளன. ஜாவா பெராக் என்ற பாபர் ஸ்டைலிலான கஸ்டம் மாடலுக்கு ரூ.1.89 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வருகிறது. இதில், ஜாவா பெரக் கஸ்டம் மாடலானது வரும் ஜனவரியில் விற்பனைக்கு கொண்டுவரப்பட இருக்கிறது.

மூன்று புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம்: ராயல் என்ஃபீல்டுக்கு நெருக்கடி!

வண்ணங்கள்

ஜாவா 42 மோட்டார்சைக்கிள் ஹாலிஸ் டீல், கெலக்டிக் க்ரீன், ஸ்டார்லைட் புளூ, லூமோஸ் லைம், நெபுலா புளூ மற்றும் காமட் ரெட் ஆகிய 6 வண்ணங்களிலும், ஜாவா மோட்டார்சைக்கிளானது ஜாவா பிளாக், ஜாவா மெரூந் மற்றும் ஜாவா க்ரே ஆகிய மூன்று வண்ணங்களிலும் கிடைக்கும்.

மூன்று புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம்: ராயல் என்ஃபீல்டுக்கு நெருக்கடி!

புத்தம் புதிய எஞ்சின்

ஜாவா 42 மற்றும் ஜாவா மோட்டார்சைக்கிளில் 293சிசி சிங்கிள் சிலிண்டர் அமைப்புடைய லிக்யூடு கூல்டு DOHC எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 27 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சின் பாரத் ஸ்டேஜ் -6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானது. இரட்டை புகைப்போக்கி குழல் இதன் முக்கிய அம்சமாக இருக்கும்.

மூன்று புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம்: ராயல் என்ஃபீல்டுக்கு நெருக்கடி!

பெரக் எஞ்சின் விபரம்

ஜாவா பெராக் மோட்டார்சைக்கிளில் 334சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சினின் பவர் வெளிப்படுத்தும் திறன் உள்ளிட்ட விபரம் குறித்து தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. எனினும், 30 பிஎச்பி பவரையும், 31 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும்.

மூன்று புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம்: ராயல் என்ஃபீல்டுக்கு நெருக்கடி!

பாரம்பரிய தோற்றம்

பழைய ஜாவா மோட்டார்சைக்கிள்களில் காணப்பட்ட வட்ட வடிவிலான ஹெட்லைட், பக்கவாட்டில் இருக்கும் டூல் பாக்ஸ், க்ரோம் பூச்சுடன் கூடிய இரட்டை புகைப்போக்கி குழாய்கள், அகலமான பின்புற மட்கார்டு ஆகியவை புதிய ஜாவா 42 மாடலிலும் தக்கவைக்கப்பட்டு இருப்பது பாரம்பரியத்தை உணர்த்தும் விஷயமாக இருக்கிறது.

வட்ட வடிவிலான சிறிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், சிறிய மின்னணு திரை மூலமாக தகவல்களை பெறுவதற்கான வசதியுடன் இடம்பெற்றுள்ளது.

மூன்று புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம்: ராயல் என்ஃபீல்டுக்கு நெருக்கடி!

ஏபிஎஸ் பிரேக்

முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் கேஸ் சார்ஜ்டு இரட்டை ஷாக் அப்சார்பர்களும் பொருத்தப்பட்டுள்ளன. முன்புறத்தில் 280 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 153 மிமீ டிரம் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக கொடுக்கப்பட்டுள்ளது.

மூன்று புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம்: ராயல் என்ஃபீல்டுக்கு நெருக்கடி!

உற்பத்தி ஆலை

ஜாவா 42 மற்றும் ஜாவா மோட்டார்சைக்கிள் மாடல்கள் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாடலுடன் நேரடியாக போட்டி போடும். மத்திய பிரதேச மாநிலம் பீதம்பூரில் உள்ள மஹிந்திரா நிறுவனத்தின் ஆலையில் ஜாவா மோட்டார்சைக்கிள்கள் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன.

மூன்று புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம்: ராயல் என்ஃபீல்டுக்கு நெருக்கடி!

டீலர் நெட்வொர்க்

மஹிந்திரா இருசக்கர வாகனப் பிரிவின் கீழ் நாடு முழுவதும் 105 பிரத்யேக டீலர்கள் வாயிலாக ஜாவா மோட்டார்சைக்கிள்களின் விற்பனை துவங்கப்பட இருக்கிறது. பின்னர், டீலர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட இருக்கிறது.

மூன்று புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம்: ராயல் என்ஃபீல்டுக்கு நெருக்கடி!

டெலிவிரி பணிகள்

ரூ.2 கோடி முன்பணத்துடன் டீலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முதல்கட்டமாக 64 டீலர்கள் வர்த்தக செயல்பாடுகளை துவங்குவதற்கு தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வரும் பிப்ரவரி மாதம் முதல் டீலர்களில் டெஸ்ட் டிரைவ் மற்றும் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்று புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம்: ராயல் என்ஃபீல்டுக்கு நெருக்கடி!

கிளாசிக் லெஜென்ட்ஸ் பற்றி...

ஜாவா மோட்டார்சைக்கிள்களின் வர்த்தகத்தை கையாள இருக்கும் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனத்தை மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, தொழிலதிபர் அனுபம் தரேஜா மற்றும் ரியல் எஸ்டேட் அதிபர் போமன் இரானி ஆகியோர் கூட்டாக துவங்கி இருக்கின்றனர். கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனத்தில் மஹிந்திரா நிறுவனம் 60 சதவீத பங்கு முதலீட்டை வைத்திருக்கிறது.

இரண்டு ராயல் என்பீல்டு 650 பைக்குகள் அறிமுகமானது..! விலையை கேட்டால் இன்னிக்கே புக் பண்ணிடுவீங்க..!

தற்போது ஜாவா 300 ரகத்தில் 3 பைக்குகள் அறிமுகமாகியுள்ள நிலையில், ராயல் என்பீல்டு நிறுவனம் நேற்று 650 ரகத்தில் இன்டர்செப்டார், மற்றும் கான்டினென்டல் ஜிடி என்ற இரண்டு பைக்குளை அறிமுகப்படுத்தியது. இது குறித்து பார்க்கலாம் வாருங்கள்.

இரண்டு ராயல் என்பீல்டு 650 பைக்குகள் அறிமுகமானது..! விலையை கேட்டால் இன்னிக்கே புக் பண்ணிடுவீங்க..!

இந்தியாவில் உள்ள ராயல் என்பீல்டு ரசிகர்கள் நீண்ட நாள் எதிர்பார்த்த ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய பைக்குகள் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த பைக்குகள் முறையே ரூ.2.50 லட்சம் மற்றும் ரூ.2.65 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளன.

இரண்டு ராயல் என்பீல்டு 650 பைக்குகள் அறிமுகமானது..! விலையை கேட்டால் இன்னிக்கே புக் பண்ணிடுவீங்க..!

இந்த இரண்டு பைக்குகளும் மார்டன்-கிளாசிக் லுக்குகளை கொண்டுள்ளது. கான்டினென்டல் ஜிடி 650 பைக் கஃபே ரேஸர் தீமை பெற்றுள்ளது. இன்டர்செப்டார் 650 ஸ்கிரம்பிளர் ஸ்டைல் கிளாசிக் டிசைனை பெற்றுள்ளது.

இரண்டு ராயல் என்பீல்டு 650 பைக்குகள் அறிமுகமானது..! விலையை கேட்டால் இன்னிக்கே புக் பண்ணிடுவீங்க..!

டிசைன்:

ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பைக்கின் டிசைனை பொறுத்தவரை ஐகானிக் 60ஸ் இன்டர்செப்டார் பைக்கையும், பிரிட்டிஷ் ரோடு ரோடுஸ்டர் பைக்கையும் அடிப்படையாக கொண்டு டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கில் கிளின் லைன், கிளாசிக் டியர் டிராப் வடிவிலான பியூயல் டேங்க், பிரேஸ்டு ஹேண்டில் பார், டையமேண்ட் குலிட் பேட்டர்ன் டுவின் சீட்கள் உள்ளன.

இரண்டு ராயல் என்பீல்டு 650 பைக்குகள் அறிமுகமானது..! விலையை கேட்டால் இன்னிக்கே புக் பண்ணிடுவீங்க..!

ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி 650 பைக்கை பொறுத்தவரை கஃபே ரேஸர் டிசைனை பெற்றுள்ளது. இந்த பைக் 1950களில் கஃபே கலாச்சாரத்தில் வந்த கான்டினென்டல் ஜிடி250 பைக் டிசைனை பெற்றுள்ளது.

இரண்டு ராயல் என்பீல்டு 650 பைக்குகள் அறிமுகமானது..! விலையை கேட்டால் இன்னிக்கே புக் பண்ணிடுவீங்க..!

கான்டினென்டல் ஜிடி 650 பைக்கில் ஸ்கல்ப்டெட் பெட்ரோல் டேங்க், வெயிட்-பார்வேர்டு ஸ்டேன்ஸ், ரியர் சீட் பூட் பெக்ஸ், ஹேண்டில் பாரில் கிளிப்ஸ் ஆகியன பொருத்தப்பட்டுள்ளன.

இரண்டு ராயல் என்பீல்டு 650 பைக்குகள் அறிமுகமானது..! விலையை கேட்டால் இன்னிக்கே புக் பண்ணிடுவீங்க..!

விலை மற்றும் புக்கிங் விபரங்கள்:

ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 பைக்குகளுக்கான புக்கிங் இந்தியாவில் உள்ள ராயல் என்பீல்டு டீலர்களிடம் தற்போது துவங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பைக்குகளும் ரூ.5 ஆயிரம் என்ற முன்பணத்துடன் புக்கிங் செய்யப்படுகிறது.

இரண்டு ராயல் என்பீல்டு 650 பைக்குகள் அறிமுகமானது..! விலையை கேட்டால் இன்னிக்கே புக் பண்ணிடுவீங்க..!

இந்த ரயால் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 பைக்கின் விலைகளை கீழே காணுங்கள்.

Ex Showroom Price
Continenta GT 650 (Standard) 2,65,000
Continenta GT 650 (Custom) 2,72,500
Continenta GT 650 (Chrome) 2,85,000
Interceptor 650 (Standard) 2,50,000
Interceptor 650 (Custom) 2,57,500
Interceptor 650 (Chrome) 2,70,000
இரண்டு ராயல் என்பீல்டு 650 பைக்குகள் அறிமுகமானது..! விலையை கேட்டால் இன்னிக்கே புக் பண்ணிடுவீங்க..!

இன்ஜின் மற்றும் தொழிற்நுட்ப விபரங்கள்:

ராயல் என்பீல்டு 650 ரகத்தில் வரும் இந்த இரண்டு பைக்குளும் 649 சிசி ஏர்/ஆயில் கூல்டு பேரலல் டுவின் இன்ஜின் உடன் வருகிறது. இது 47 பிஎச்பி பவரையும், 52 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இதன் இன்ஜின் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் ஸ்டாண்டர்டாக ஸ்லிப்பரி கிளட்ச் பொருத்தப்பட்டுள்ளது.

இரண்டு ராயல் என்பீல்டு 650 பைக்குகள் அறிமுகமானது..! விலையை கேட்டால் இன்னிக்கே புக் பண்ணிடுவீங்க..!

இந்த இரண்டு பைக்குகளிலும் முன்புறத்தில் 41மிமி டெலஸ்கோபிக் ஃபோர்க்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. பின்புறம் 110மிமி காயில் கவர் ஷாக்ஸ்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இரண்டு பைக்குகளும் 18 இன்ச் 36 ஸ்போக் அலுமினியம் அலாய்வீல்கள் பெரேலி பாந்தோம் ஸ்போர்ட்காம்ப் டயர்களுடன் வருகிறது.

இரண்டு ராயல் என்பீல்டு 650 பைக்குகள் அறிமுகமானது..! விலையை கேட்டால் இன்னிக்கே புக் பண்ணிடுவீங்க..!

இன்டர்செப்டார் மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 பைக்கின் பிரேக்கை பொறுத்தவரை முன்புறம் 320 மிமி மற்றும் பின்புறம் 240 மிமி டிக்ஸ் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இரண்டு பைக்குகளிலும் டுயல் சேனல் ஏபிஎஸ் ஸ்டாண்டர்டு அம்சமாக வருகிறது.

இரண்டு ராயல் என்பீல்டு 650 பைக்குகள் அறிமுகமானது..! விலையை கேட்டால் இன்னிக்கே புக் பண்ணிடுவீங்க..!

கலர்கள்:

ராயல் என்பீல்டு பைக்குகள் தற்போது இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளதால் அவர்களுக்கு பிடித்தமான கலர்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கான்டினென்டல் ஜிடி 650 பைக்கை பொறுத்தவரை 5 கலர் ஆப்ஷன்களும், இன்டர்செப்டார் 650 பைக்கை பொறுத்தவரை 7 கலர் ஆப்ஷன்களும் உள்ளது.

இரண்டு ராயல் என்பீல்டு 650 பைக்குகள் அறிமுகமானது..! விலையை கேட்டால் இன்னிக்கே புக் பண்ணிடுவீங்க..!

ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 கலர்கள்: மார்க் திரி, கிளிட்டர்&டஸ்ட், ஆரஞ்சு கிரஷ், ரேவிஷிங் ரெட், வென்ச்யூரா ப்ளூ, சில்வர் ஸ்பெக்டர் மற்றும் பேக்கர் எக்ஸ்பிரஸ்.

இரண்டு ராயல் என்பீல்டு 650 பைக்குகள் அறிமுகமானது..! விலையை கேட்டால் இன்னிக்கே புக் பண்ணிடுவீங்க..!

ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி 650 கலர்கள்: பிளாக் மேஜிக், வென்ச்யூரா ப்ளூ, மிஸ்டர் கிளின், டாக்டர் மேஹம் மற்றம் ஐஸ் குயின்.

இரண்டு ராயல் என்பீல்டு 650 பைக்குகள் அறிமுகமானது..! விலையை கேட்டால் இன்னிக்கே புக் பண்ணிடுவீங்க..!

ராயல் என்பீல்டு 650 டுவின்ஸ் (இன்டர்செப்டார் மற்றும் கான்டினென்டல் ஜிடி) பைக்குகள் பைக் ரசிகர்கள் மத்தியில் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்தது. தற்போது இந்த பைக்குகள் வெளியாகியுள்ளது ரசிகர்களுக்கு குஷியை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு ராயல் என்பீல்டு 650 பைக்குகள் அறிமுகமானது..! விலையை கேட்டால் இன்னிக்கே புக் பண்ணிடுவீங்க..!

மேலும் இதன் விலையும் கொடுக்கும் காசுக்கு மோசமில்லா அம்சங்கள், வசதிகள் மற்றும் தரத்துடன் வருகிறது. இந்த பைக்குகளை பார்க்கும் போது ஹார்லி டேவிட்சன் ஸ்டிரீட் 750 மற்றும் டிரையம்ப் போனவில்லே ஸ்டிரீட் டுவின் பைக்கை போன்ற வடிவத்திலேயே இருக்கிறது.

Most Read Articles
English summary
The new Jawa Motorcycles India-prices have been set competitively to define a market of their own. The entry-level Jawa 42 costs Rs 1.55 lakh (as mentioned before) while the Jawa model comes with a price tag of Rs 1.65 lakh. All prices are ex-showroom (Mumbai). The bobber-style Jawa Perak has just been unveiled and will be available in the Indian market at a later stage.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X