புதிய ராயல் என்ஃபீல்டு 650சிசி மோட்டார்சைக்கிள்களுக்கு ரகசிய முன்பதிவு!

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இன்டர்செப்டார் மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 மோட்டார்சைக்கிள்களுக்கு நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட டீலர்களில் ரகசிய முன்பதிவு செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவ

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இன்டர்செப்டார் மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 மோட்டார்சைக்கிள்களுக்கு நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட டீலர்களில் ரகசிய முன்பதிவு செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய ராயல் என்ஃபீல்டு 650சிசி மோட்டார்சைக்கிள்களுக்கு ரகசிய முன்பதிவு!

கடந்த ஆண்டு இத்தாலியில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய இரண்டு புதிய மோட்டார்சைக்கிள் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அந்நிறுவனத்தின் முதல் இரண்டு சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல்கள் என்பதுடன், சக்திவாய்ந்த மாடல்களாகவும் வருவது ராயல் என்ஃபீல்டு ரசிகர்கள் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தியது.

புதிய ராயல் என்ஃபீல்டு 650சிசி மோட்டார்சைக்கிள்களுக்கு ரகசிய முன்பதிவு!

இந்த புதிய மோட்டார்சைக்கிள் மாடல்கள் அண்மையில் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, தாயகமான இந்தியாவிலும் அடுத்த மாதம் இந்த புதிய மோட்டார்சைக்கிள்களை களமிறக்க ராயல் என்ஃபீல்டு முடிவு செய்துள்ளது. கோவாவில் நடைபெற இருக்கும் ராயல் என்ஃபீல்டு ரைடர் மானியா திருவிழாவில் இந்த புதிய மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

புதிய ராயல் என்ஃபீல்டு 650சிசி மோட்டார்சைக்கிள்களுக்கு ரகசிய முன்பதிவு!

இந்த புதிய மோட்டார்சைக்கிள்களின் அறிமுக தேதியும், முன்பதிவு விபரமும் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் சில அங்கீகரிக்கப்பட்ட டீலர்களில் இந்த புதிய மாடல்களுக்கு ரகசியமாக முன்பதிவு செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய ராயல் என்ஃபீல்டு 650சிசி மோட்டார்சைக்கிள்களுக்கு ரகசிய முன்பதிவு!

இந்த புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களில் 648சிசி ட்வின் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 47 எச்பி பவரையும், 52 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கள் மாடல்கள் லிட்டருக்கு 25.5 கிமீ மைலேஜ் தரும் என்று வேர்ல்டு மோட்டார்சைக்கிள் டெஸ்ட் சைக்கிள் சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.

புதிய ராயல் என்ஃபீல்டு 650சிசி மோட்டார்சைக்கிள்களுக்கு ரகசிய முன்பதிவு!

இந்த புதிய ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களில் சக்கரங்களில் ட்வின் பிஸ்டன் காலிபர்கள் கொண்ட டிஸ்க் பிரேக்குகள் இரண்டு சக்கரங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக வழங்கப்படுகிறது.

புதிய ராயல் என்ஃபீல்டு 650சிசி மோட்டார்சைக்கிள்களுக்கு ரகசிய முன்பதிவு!

இந்த மோட்டார்சைக்கிள்களில் 130 செக்ஷன் பின்புற டயர்கள், 36 ஸ்போக் அலுமினியம் அலாய் ரிம்கள், ஸ்லிப்பர் க்ளட்ச் ஆகியவை முக்கிய அம்சங்கள். இந்த மோட்டார்சைக்கிள்கல் ஸ்டீல் டியூபிலர் ஃப்ரேமில் கட்டமைக்கப்பட்டுள்ளன. 174 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

புதிய ராயல் என்ஃபீல்டு 650சிசி மோட்டார்சைக்கிள்களுக்கு ரகசிய முன்பதிவு!

இந்த மோட்டார்சைக்கிள் மாடல்கள் அதிகபட்சமாக மணிக்கு 160 கிமீ வேகம் வரை செல்லும் திறனை பெற்றிருக்கின்றன. இதில், 12.5 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளன.

புதிய ராயல் என்ஃபீல்டு 650சிசி மோட்டார்சைக்கிள்களுக்கு ரகசிய முன்பதிவு!

ரூ.3 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய மோட்டார்சைக்கிள் மாடல்கள் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றன. பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் மற்றும் கேடிஎம் ட்யூக் 390 உள்ளிட்ட பைக் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். மேலும், குறைவான விலை 650சிசி மாடல்களாகவும் வருவதால் வாடிக்கையாளர் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Most Read Articles

English summary
New Royal Enfield Interceptor 650, Continental GT 650 bookings open in India.
Story first published: Wednesday, October 24, 2018, 11:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X