சுஸூகி வி-ஸ்டோர்ம் 650 பைக் விரைவில் அறிமுகமாகிறது

சுஸூகி நிறுவனம் வி-ஸ்டோர்ம் 650 என்ற பைக்கை இந்தியாவில் இந்தாண்டே அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. குறிப்பாக வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

By Balasubramanian

கடந்த பிப்., மாதம் நடந்த ஆட்டோ எஸ்போவில் சுஸூகி நிறுவனம் இந்த வி-ஸ்டோர்ம் 65 பைக்கை முதல் முதலாக அறிமுகப்படுத்தியது. இந்த பைக் முதலில் 2019ம் ஆண்டு இரண்டாம் பாதியில் அறிமுகப்படுத்தபடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த பைக் இந்த ரக செக்மெண்டில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுஸூகி வி-ஸ்டோர்ம் 650 பைக் விரைவில் அறிமுகமாகிறது

தற்போது இந்த பைக்கிற்கு போட்டியாக கவாஸகி வெர்சஸ் 650 என்ற பைக் உள்ளது. சுஸூகி நிறுவனம் இந்த பைக் உடன் போட்டி போட வேண்டும் என்றால் அதன் விலையை சுமார் ரூ 6.50 லட்சத்தில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுஸூகி வி-ஸ்டோர்ம் 650 பைக் விரைவில் அறிமுகமாகிறது

இந்த பைக்கின் இன்ஜினை பொருத்தவரை 645 சிசி லிக்யூட் கூல்டு, 4ஸ்டோக், 90 டிகிரி, வி-டுவின் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 8,800 ஆர்பிஎம்மில் 70 பிஎச்பி பவரையும், 66 என்எம் டார்க் பவரையும் வெளிப்படுத்தும்.

சுஸூகி வி-ஸ்டோர்ம் 650 பைக் விரைவில் அறிமுகமாகிறது

இந்த சுஸகி வி-ஸ்டோர்ம் 650 பைக் 2 வேரியன்ட்களில் வெளியாகவுள்ளது. வி-ஸ்டோர்ம் 650 மற்றும் வி-ஸ்டோர்ம் 650எக்ஸ்டி ஆகிய இரண்டு விதமாக வேரியன்ட்களில் வெளியாகிறது. இதில் எக்ஸ்டி வேரியன்ட் உடனடியாக வெளியாகாது என தெரிகிறது.

சுஸூகி வி-ஸ்டோர்ம் 650 பைக் விரைவில் அறிமுகமாகிறது

இந்த பைக்கில் உள்ள அம்சங்களை பொருத்தவரை வி-ஸ்டோர்ம் 650 பைக்கில் அலுமனியம் வீலும் பிரிட்ஜ் ஸ்டோன் பேட்டில்விங் டயர் பொருத்தப்பட்டுள்ளது. இது ஆஃப் ரோட்டிற்கு சிறந்து விளங்கும். வி-ஸ்டோர்ம் எக்ஸ்டி பைக்கை பொருத்தவரை அலுமினியம் ரிம்ஸ் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பொருத்தப்படுகிறது.

சுஸூகி வி-ஸ்டோர்ம் 650 பைக் விரைவில் அறிமுகமாகிறது

டாப் - எண்ட் மாடலான வி-ஸ்டோர்ம் 650 எக்ஸ்டி பைக்கை பொருத்தவரை சில பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பிளாஸ்டிக் ஹேண்ட்கார்டு, இன்ஜின் மற்றம் அதில் இருந்து வரும் பைப்களுக்கான பிளாஸ்டிக் பாதுகாப்பு, வழங்கப்படுகிறது. இந்த பாதுகாப்பு அம்சங்கள் அந்த பைக்கின் ஸ்டாண்டர்டு அம்சமாகவே வருகிறது.

சுஸூகி வி-ஸ்டோர்ம் 650 பைக் விரைவில் அறிமுகமாகிறது

இன்று தான் சுஸூகி நிறுவனம் பர்க்மேன் என்ற ஸ்கூட்டரை வெளியிட்டது. அதற்குள் அந்நிறுவனம் அடுத்த பைக்கை விற்பனைக்கு கொண்டு வர தயாராகி விட்டது. மேலும் தற்போது ராயல் என்பீல்டின் மீது மோகத்தில் உள்ள இளைஞர்கள் அடுத்ததாக 650 சிசி ரக பைக்குகளிள் தான் தங்கள் கவனத்தை திருப்புவார்கள் அவர்களுக்கு இந்த பைக் விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  1. நடமாடும் சர்வீஸ் மைய சேவையை அறிமுகப்படுத்தியது மெர்சிடிஸ் பென்ஸ்!!
  2. 2030க்குள் பெட்ரோல், டீசல் வாகனங்கள் காணாமல் போகுமா?
  3. ராயல் என்பீல்டை விடுங்க பாஸ்.. சிம்பு-மஞ்சிமா போல் காதலியுடன் லாங் டிரிப் அடிக்க இந்த பைக்குகள் ஓகே
  4. ரூ.68,000 விலையில் புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!
  5. ஸிப்ட் காரை விட ஃபோர்டு ஃபிகோ காரின் விலை குறைந்தது
Most Read Articles
English summary
2018 Suzuki V-Strom 650 To Be Launched In India This Year. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X