மர்மமான முறையில் பைக் விலையை திடீரென உயர்த்திய யமஹா.. இளைஞர்களை வாட்டும் சோகம்..

புதிய ஆர்15 வெர்ஷன் 3.0 (R15 3.0) மோட்டார் சைக்கிளின் விலையை யமஹா நிறுவனம் திடீரென உயர்த்தியுள்ளது. விலை உயர்வுக்கு என்ன காரணம்? என்பது மர்மமாகவே உள்ளது.

By Arun

புதிய ஆர்15 வெர்ஷன் 3.0 (R15 3.0) மோட்டார் சைக்கிளின் விலையை யமஹா நிறுவனம் திடீரென உயர்த்தியுள்ளது. விலை உயர்வுக்கு என்ன காரணம்? என்பது மர்மமாகவே உள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

யமஹா பைக் விலை உயர்வு

இந்தியாவில் உள்ள இளைஞர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கும் யமஹா நிறுவனத்தின் புதிய ஆர்15 வெர்ஷன் 3.0 (R15 3.0) மோட்டார் சைக்கிள், கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டது.

யமஹா பைக் விலை உயர்வு

ஆர்15 மோட்டார் சைக்கிளின் மூன்றாம் தலைமுறை மாடலான இது, 1.25 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் லான்ச் செய்யப்பட்டது. யமஹா நிறுவனத்தின் பிரபலமான மோட்டார் சைக்கிள்களில் ஒன்றான இது, இளைஞர்களை எளிதில் கவரக்கூடியதாக திகழ்கிறது.

யமஹா பைக் விலை உயர்வு

இந்த சூழலில் யமஹா நிறுவனம், புதிய ஆர்15 வெர்ஷன் 3.0 மோட்டார் சைக்கிளின் விலையை சப்தமே இல்லாமல் 2,000 ரூபாய் வரை உயர்த்தியுள்ளது. இந்த திடீர் விலை உயர்வுக்கு என்ன காரணம்? என்பது குறித்த தெளிவான தகவலை யமஹா நிறுவனம் வெளியிடவில்லை.

யமஹா பைக் விலை உயர்வு

எனவே விலை உயர்வு ஏன்? என்பது மர்மமாகவே உள்ளது. எனினும் இந்த மோட்டார் சைக்கிளின் விலை உயர்ந்திருக்கும் தகவலை யமஹா நிறுவனத்தின் டீலர்கள் சிலர் உறுதி செய்துள்ளனர். எனவே இந்த பைக் இனி இந்தியாவில் 1.27 லட்ச ரூபாய் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படும்.

யமஹா பைக் விலை உயர்வு

உற்பத்தி செலவு அதிகரிப்பு காரணமாக, யமஹா நிறுவனம் விலையை உயர்த்தியிருக்கலாம் என கூறப்படுகிறது. விலை உயர்த்தப்பட்டிருந்தாலும் கூட, கொடுக்கும் பணத்திற்கு தரமான மோட்டார் சைக்கிளாகதான் இது இருக்கிறது.

யமஹா பைக் விலை உயர்வு

புதிய சூப்பர் ஸ்போர்ட்ஸ் மாடல் மோட்டார் சைக்கிளான இதில், 155 சிசி, லிக்யூட் கூல்டு, 4 ஸ்ட்ரோக் ப்யூயல் இன்ஜெக்டட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த இன்ஜின் அதிகபட்சமாக 19.3 எச்பி பவர் மற்றும் 15 என்எம் டார்க் திறனை வழங்கும் வல்லமை வாய்ந்தது.

யமஹா பைக் விலை உயர்வு

இந்த பைக் நகர பகுதிகளில் கூட, ஒரு லிட்டருக்கு 48.75 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர பெரும்பாலான 150 சிசி, 160 சிசி பைக்குகளை காட்டிலும், நகர பகுதிகளில் இதன் மைலேஜ் மிக சிறப்பாக இருப்பதாகவே கருதப்படுகிறது.

யமஹா பைக் விலை உயர்வு

இந்த பைக்கின் நீளம் 1990 எம்எம். அகலம் 725 எம்எம். உயரம் 1135எம்எம். இதன் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 170 எம்எம். வீல் பேஸ் 1325 எம்எம். 11 லிட்டர் எரிபொருள் டேங்க் வழங்கப்பட்டுள்ளது. குண்டும், குழியுமான சாலைகளில் கூட சௌகரியமாக பயணிக்கும் வகையில், இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது.

யமஹா பைக் விலை உயர்வு

டிவின்-எல்இடி ஹெட்லைட்ஸ் (Twin-LED headlights) மற்றும் ஆல் டிஜிட்டல் டிஸ்ப்ளே (All-digital display), ஆகியவற்றை இந்த பைக் பெற்றுள்ளது. இதுபோன்ற காரணங்களால்தான் இளைஞர்கள் மத்தியில் இந்த பைக் மிகவும் பிரபலமாக விளங்குகிறது.

யமஹா பைக் விலை உயர்வு

இதனிடையே ஒரு வருடத்திற்கு 40 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரையிலான YZF-R15 (வெர்ஷன் 3.0) மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்து வருவதாக யமஹா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 150 சிசி செக்மெண்டில் கிடைக்கும் மிக சிறப்பான பெர்ஃபார்மென்ஸ் சார்ந்த பைக்காக ஒய்இஸட்எப்-ஆர்15 வெர்ஷன் 3.0 திகழ்கிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
New Yamaha R15 Version 3.0 Price Increased by Rs 2,000. Read in Tamil
Story first published: Tuesday, August 7, 2018, 11:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X