மோடியை கதற விடும் தமிழர்கள்.. பெட்ரோல் விலையை குறைக்காவிட்டால் இனி இந்தியா முழுவதும் இது நடக்கலாம்..

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிக்கும் மற்றும் கிண்டலடிக்கும் வகையிலான தமிழர்களின் செயல்பாடுகள் நாட்டையே திரும்பி பார்க்க வைப்பதாக உள்ளன.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிக்கும் மற்றும் கிண்டலடிக்கும் வகையிலான தமிழர்களின் செயல்பாடுகள் நாட்டையே திரும்பி பார்க்க வைப்பதாக உள்ளன.

பெட்ரோல் விலை உயர்வு.. மோடியை கிண்டல் அடிக்க மருமகனுக்கு வித்தியாசமான சீதனம் வழங்கிய மாமனார்..

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவையே இதற்கு மிக முக்கிய காரணங்களாக உள்ளன.

பெட்ரோல் விலை உயர்வு.. மோடியை கிண்டல் அடிக்க மருமகனுக்கு வித்தியாசமான சீதனம் வழங்கிய மாமனார்..

இதுதவிர பெட்ரோல், டீசல் மீது மத்திய மற்றும் மாநில அரசுகள் மிக அதிகமான வரிகளை விதித்து வருகின்றன. பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை மிக அதிகப்படியான விலையில் விற்பனையாகி கொண்டிருப்பதற்கு இதுவும் மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

பெட்ரோல் விலை உயர்வு.. மோடியை கிண்டல் அடிக்க மருமகனுக்கு வித்தியாசமான சீதனம் வழங்கிய மாமனார்..

பெட்ரோல் மற்றும் டீசல் மீது தற்போது மத்திய அரசின் கலால் வரி, மாநில அரசுகளின் வாட் வரி என பல்வேறு வரிகள் விதிக்கப்பட்டு வருகின்றன. எனவே பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.

பெட்ரோல் விலை உயர்வு.. மோடியை கிண்டல் அடிக்க மருமகனுக்கு வித்தியாசமான சீதனம் வழங்கிய மாமனார்..

ஏனெனில் ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டு வரப்படும் பட்சத்தில், பெட்ரோல் மற்றும் டீசலுக்கு ஒரே ஒரு வரி மட்டுமே விதிக்கப்படும். எனவே பெட்ரோல் மற்றும் டீசலின் விலை வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல் விலை உயர்வு.. மோடியை கிண்டல் அடிக்க மருமகனுக்கு வித்தியாசமான சீதனம் வழங்கிய மாமனார்..

தற்போதைய நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை ஜிஎஸ்டி வரம்பிற்குள் வந்தால், அதன் விலை லிட்டருக்கு 20-30 ரூபாய் வரை குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் வரிகள் மூலம் கிடைக்கும் வருவாயை இழந்து விடக்கூடாது என மத்திய, மாநில அரசுகள் நினைக்கின்றன.

பெட்ரோல் விலை உயர்வு.. மோடியை கிண்டல் அடிக்க மருமகனுக்கு வித்தியாசமான சீதனம் வழங்கிய மாமனார்..

எனவே பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சாமானிய மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். குறிப்பாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மீதுதான் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது.

பெட்ரோல் விலை உயர்வு.. மோடியை கிண்டல் அடிக்க மருமகனுக்கு வித்தியாசமான சீதனம் வழங்கிய மாமனார்..

பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னையானது, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் கடுமையாக எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெட்ரோல் விலை உயர்வு.. மோடியை கிண்டல் அடிக்க மருமகனுக்கு வித்தியாசமான சீதனம் வழங்கிய மாமனார்..

வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்ப முடியாததால் இனி சைக்கிளில்தான் பயணம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் பேசி வருகின்றனர். இது தொடர்பான மீம்ஸ்களும் சமூக வலை தளங்களில் அதிகம் உலா வருகின்றன.

பெட்ரோல் விலை உயர்வு.. மோடியை கிண்டல் அடிக்க மருமகனுக்கு வித்தியாசமான சீதனம் வழங்கிய மாமனார்..

இந்த சூழலில் திருமண நிகழ்ச்சியின்போது, மாமனார் ஒருவர் தனது மருமகனுக்கு சைக்கிளை சீதனமாக வாங்கி கொடுத்து அசத்தியுள்ளார். நாகை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள கோமல் என்ற கிராமத்தில் திருமணம் ஒன்று சமீபத்தில் நடைபெற்றது.

பெட்ரோல் விலை உயர்வு.. மோடியை கிண்டல் அடிக்க மருமகனுக்கு வித்தியாசமான சீதனம் வழங்கிய மாமனார்..

அப்போது மணப்பெண்ணின் தந்தை மேடை மீது ஏறினார். பின்னர் யாரும் எதிர்பார்க்காத வகையில் மணமகனுக்கு சைக்கிள் ஒன்றை அவர் சீதனமாக வழங்கினார். அப்போது மணப்பெண்ணின் உறவினர்களும் உடனிருந்தனர்.

பெட்ரோல் விலை உயர்வு.. மோடியை கிண்டல் அடிக்க மருமகனுக்கு வித்தியாசமான சீதனம் வழங்கிய மாமனார்..

இதுகுறித்து மணப்பெண் வீட்டார் கூறுகையில், ''பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. எனவேதான் மணமகனுக்கு சைக்கிளை சீதனமாக வழங்கினோம். இதன்மூலம் பெட்ரோலுக்கான செலவை மிச்சம் பிடிக்கலாம்.

பெட்ரோல் விலை உயர்வு.. மோடியை கிண்டல் அடிக்க மருமகனுக்கு வித்தியாசமான சீதனம் வழங்கிய மாமனார்..

அத்துடன் தற்போது உடற்பயிற்சி செய்வதற்கு யாருக்கும் போதிய நேரம் இருப்பதில்லை. எனவே சைக்கிள் ஓட்டினால் உடற்பயிற்சி செய்தது போலவும் இருக்கும்'' என்றனர். மணமகனுக்கு சைக்கிள் சீதனமாக வழங்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பெட்ரோல் விலை உயர்வு.. மோடியை கிண்டல் அடிக்க மருமகனுக்கு வித்தியாசமான சீதனம் வழங்கிய மாமனார்..

ஆனால் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கிண்டல் அடிக்கும் வகையிலான இத்தகைய வித்தியாசமான சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெறுவது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் விலை உயர்வு.. மோடியை கிண்டல் அடிக்க மருமகனுக்கு வித்தியாசமான சீதனம் வழங்கிய மாமனார்..

கடலூர் மாவட்டம் குமராட்சி என்ற இடத்தில், இளஞ்செழியன்-கனிமொழி ஆகியோரின் திருமணம், கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. அப்போது திருமணத்திற்கு வந்திருந்த, மணமகன் இளஞ்செழியனின் நண்பர்கள் சிலர், 5 லிட்டர் பெட்ரோலை திருமண பரிசாக வழங்கினர்.

பெட்ரோல் விலை உயர்வு.. மோடியை கிண்டல் அடிக்க மருமகனுக்கு வித்தியாசமான சீதனம் வழங்கிய மாமனார்..

அந்த படங்களும் பேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலாக பரவின. அதை வைத்து மீம்ஸ்களும் உருவாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏற்படுத்திய தாக்கமாகவே இந்த சம்பவங்கள் பார்க்கப்படுகின்றன.

பெட்ரோல் விலை உயர்வு.. மோடியை கிண்டல் அடிக்க மருமகனுக்கு வித்தியாசமான சீதனம் வழங்கிய மாமனார்..

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கிண்டலடிக்கும் வகையில் இது போன்ற வித்தியாசமான செயல்பாடுகள் இந்தியாவில் வேறு எங்கும் அவ்வளவாக நடைபெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழர்களுக்குதான் குசும்பு அதிகம் போல!!

Most Read Articles

மஹிந்திரா இ2ஓ ப்ளஸ் எலெக்ட்ரிக் காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

English summary
Petrol, Diesel Price Hike: Groom Receives Cycle As Wedding Gift From Father-in-law. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X