சாதாரண பைக்கில் வந்தவருக்கு அபராதம்.. விலை உயர்ந்த பைக்கிற்கு ராஜ மரியாதை.. போலீசாரின் வீடியோ லீக்..

விலை உயர்ந்த பென்னலி டிஎன்டி 300 பைக்கில் மிக வேகமாக பயணித்து கொண்டிருந்தவரை மடக்கிய போலீசார், அவரிடம் எவ்வித ஆவணங்களையும் கேட்காமல், ராஜ மரியாதை கொடுத்து அனுப்பி வைத்தனர்.

By Arun

விலை உயர்ந்த பென்னலி டிஎன்டி 300 பைக்கில் மிக வேகமாக பயணித்து கொண்டிருந்தவரை மடக்கிய போலீசார், அவரிடம் எவ்வித ஆவணங்களையும் கேட்காமல், ராஜ மரியாதை கொடுத்து அனுப்பி வைத்தனர். அதே நேரத்தில் சாதாரண பைக்கில் வந்தவருக்கு அபராதம் விதித்தனர். அந்த வீடியோ வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சாதாரண பைக்கில் போனால் அபராதம்.. சூப்பர் பைக்கிற்கு ராஜ மரியாதை.. போலீசாரின் வீடியோ லீக்..

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீ நகர் மற்றும் இந்திய தலைநகர் டெல்லி ஆகிய நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை, போக்குவரத்து முக்கியத்தும் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பென்னலி டிஎன்டி 300 (Benelli TNT 300) பைக் ரைடர் ஒருவர் சமீபத்தில் இந்த நெடுஞ்சாலையில் பயணித்து கொண்டிருந்தார்.

சாதாரண பைக்கில் போனால் அபராதம்.. சூப்பர் பைக்கிற்கு ராஜ மரியாதை.. போலீசாரின் வீடியோ லீக்..

டெல்லி நகரை நோக்கி மிக வேகமாக விரைந்து கொண்டிருந்த அவரை, வழியில் போலீசார் சிலர் மடக்கினர். எந்தவொரு வாகனத்தை நிறுத்தினாலும், லைசென்ஸ், இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை கேட்பதுதானே போலீசாரின் வழக்கம். ஆனால் இங்கு நடந்த கதையே வேறு.

சாதாரண பைக்கில் போனால் அபராதம்.. சூப்பர் பைக்கிற்கு ராஜ மரியாதை.. போலீசாரின் வீடியோ லீக்..

எப்போதுமான வழக்கத்திற்கு மாறாக, பென்னலி டிஎன்டி 300 பைக்கை, போலீசார் அனைவரும் ஒன்றாக சூழ்ந்து கொண்டனர். பின்னர் பென்னலி டிஎன்டி 300 பைக்கை ஆச்சரியத்துடன் கண்டு களித்தனர். அந்த பைக் தொடர்பான தங்கள் சந்தேகங்களையும் வரிசையாக கேட்க தொடங்கினர்.

சாதாரண பைக்கில் போனால் அபராதம்.. சூப்பர் பைக்கிற்கு ராஜ மரியாதை.. போலீசாரின் வீடியோ லீக்..

அந்த பைக்கின் விலை என்ன? என்பது போலீசாரின் முக்கியமான சந்தேகங்களில் ஒன்றாக இருந்தது. போலீசாரின் இந்த கேள்விக்கு, அந்த பைக் ரைடர் அளித்த பதில் 4 லட்ச ரூபாய். போலீசாரின் ஆர்வத்தை புரிந்து கொண்ட அந்த ரைடர், பென்னலி டிஎன்டி 300 எவ்வளவு சக்தி வாய்ந்தது? என்பதை விவரித்தார்.

சாதாரண பைக்கில் போனால் அபராதம்.. சூப்பர் பைக்கிற்கு ராஜ மரியாதை.. போலீசாரின் வீடியோ லீக்..

அத்துடன் நீண்ட தூர பயணங்களுக்கு, பென்னலி டிஎன்டி 300 பைக் எவ்வாறு உகந்தது? என்பது குறித்தும், போலீசாருக்கு ஸ்பெஷல் க்ளாஸ் எடுத்தார். பென்னலி டிஎன்டி 300 பைக்கில், டிவின் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது என பெருமிதத்துடன் கூறிய அவரை, போலீசார் ஆச்சரியமாக பார்த்தனர்.

சாதாரண பைக்கில் போனால் அபராதம்.. சூப்பர் பைக்கிற்கு ராஜ மரியாதை.. போலீசாரின் வீடியோ லீக்..

பென்னலி டிஎன்டி 300 பைக்கின் பிரம்மாண்டமான டைமன்சன், போலீசார் அனைவரையும் வெகுவாக கவர்ந்து விட்டது என்றே சொல்லலாம். அதனால்தான் அந்த பைக் குறித்த தகவல்கள் அனைத்தையும் விலாவரியாக கேட்டு கொண்டிருந்தனர்.

சாதாரண பைக்கில் போனால் அபராதம்.. சூப்பர் பைக்கிற்கு ராஜ மரியாதை.. போலீசாரின் வீடியோ லீக்..

பின்னர் அந்த பைக் ரைடர், ''நான் டெல்லி நோக்கி சென்று கொண்டிருக்கிறேன். அங்கு எனது பைக்கை சர்வீஸ் செய்ய வேண்டியுள்ளது. அதன்பின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக் பகுதிக்கு செல்ல திட்டமிட்டிருக்கிறேன்'' என போலீசாரிடம் தெரிவித்தார்.

சாதாரண பைக்கில் போனால் அபராதம்.. சூப்பர் பைக்கிற்கு ராஜ மரியாதை.. போலீசாரின் வீடியோ லீக்..

போலீசார் அனைவரும் பென்னலி டிஎன்டி 300 பைக்கின் பால் ஈர்க்கப்பட்டு, முழுக்க முழுக்க அதனையே ரசித்து கொண்டிருந்தனர். அதனால்தான் என்னவோ, பென்னலி டிஎன்டி 300 பைக் ரைடரிடம், லைசென்ஸ், இன்சூரன்ஸ் என எந்தவிதமான ஆவணங்களையும் சோதனை செய்து பார்க்கவில்லை போல.

சாதாரண பைக்கில் போனால் அபராதம்.. சூப்பர் பைக்கிற்கு ராஜ மரியாதை.. போலீசாரின் வீடியோ லீக்..

இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் இதுதான். அதற்கு முன்பாக மற்றொரு பைக்கில், நம்பர் பிளேட் ஒழுங்கற்ற முறையில் இருந்ததற்காக, போலீசார் அபராதம் விதித்து, ரசீதை வழங்கினர். ஆனால் பென்னலி டிஎன்டி 300 பைக் ரைடரிடம், எவ்வித ஆவணங்களையும் கேட்காமல் வழியனுப்பி வைத்தனர். அந்த வீடியோவை கீழே காணலாம்.

உண்மையில் பென்னலி டிஎன்டி 300 போன்ற ஒரு சில பைக்குகளை இந்திய சாலைகளில் பார்ப்பது என்பதே அரிதான விஷயம்தான். எனவே அத்தகைய சூப்பர் பைக்குகளை பார்க்கும் போலீசார், அந்த பைக் குறித்த தங்களின் சந்தேகங்களை, அதனை ஓட்டி வருபவர்களிடம் கேட்பது வாடிக்கையான ஒன்றாகவே உள்ளது.

சாதாரண பைக்கில் போனால் அபராதம்.. சூப்பர் பைக்கிற்கு ராஜ மரியாதை.. போலீசாரின் வீடியோ லீக்..

விலை உயர்ந்த அட்வென்ஜர் மற்றும் ஹை எண்ட் பைக்குகளில் விறுவிறுவென பயணித்து கொண்டிருக்கும், ரைடர்களை மடக்கி, போலீசார் தங்கள் சந்தேகங்களை வினவிய பல சம்பவங்கள் நடந்ததுண்டு. ஆனால் பெரும்பாலும் அவர்களிடம் எவ்வித ஆவணங்களையும் கேட்காமல் போலீசார் அனுப்பி விடுகின்றனர்.

சாதாரண பைக்கில் போனால் அபராதம்.. சூப்பர் பைக்கிற்கு ராஜ மரியாதை.. போலீசாரின் வீடியோ லீக்..

ஒரு சில போலீசாரோ, அந்த பைக்குகளை வாங்கி சிறிது தூரம் ஓட்டி விட்டு வருவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். சாதாரண பைக்குகளில் வருபவர்களிடம் ஒரு விதமாகவும், விலை உயர்ந்த பைக்குகளில் வருபவர்களிடம் வேறு விதமாகவும் சில போலீசார் நடந்து கொள்வதாக புகார்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சாதாரண பைக்கில் போனால் அபராதம்.. சூப்பர் பைக்கிற்கு ராஜ மரியாதை.. போலீசாரின் வீடியோ லீக்..

இனி பென்னலி டிஎன்டி 300 பைக் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இந்திய மார்க்கெட்டில் கிடைக்கும் மிகவும் மலிவான டிவின் சிலிண்டர் பைக்குகளில் ஒன்று பென்னலி டிஎன்டி 300. இந்த பைக்கின் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை சுமார் 3.83 லட்ச ரூபாய்.

சாதாரண பைக்கில் போனால் அபராதம்.. சூப்பர் பைக்கிற்கு ராஜ மரியாதை.. போலீசாரின் வீடியோ லீக்..

பென்னலி டிஎன்டி 300 பைக்கில், 300 சிசி, டிவின் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 37.73 பிஎச்பி பவர் மற்றும் 26.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தி, சாலைகளில் சீறிப்பாயும் வல்லமை வாய்ந்தது. 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனை இந்த பைக் பெற்றுள்ளது.

Source: INDIARIDER AMIT

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Police Leave Benelli Bike Rider Without Asking any Documents. Read in Tamil
Story first published: Wednesday, August 1, 2018, 14:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X