இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்க ஆன செலவு இவ்வளவுதான்... சீனாவுக்கு சவால் விடும் இந்திய இளைஞர்...

மிகவும் குறைவான செலவில், இந்திய இளைஞர் ஒருவர் உருவாக்கியுள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், ஏராளமான சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மிகவும் குறைவான செலவில், இந்திய இளைஞர் ஒருவர் உருவாக்கியுள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், ஏராளமான சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மிகவும் குறைந்த செலவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கிய இந்திய இளைஞர்... சீனாவுக்கே சவால் விடலாம்

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருட்களின் விலை மிக அதிகமாக உள்ளது. இதுதவிர பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் அனைத்தும், காற்றை அதிகம் மாசுபடுத்துகின்றன. இதனால் பெரும்பாலான இந்திய நகரங்கள் தற்போது காற்று மாசுபாட்டில் சிக்கி தவித்து வருகின்றன.

மிகவும் குறைந்த செலவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கிய இந்திய இளைஞர்... சீனாவுக்கே சவால் விடலாம்

இவ்விரு பிரச்னைகளுக்கும் எலெக்ட்ரிக் வாகனங்கள் சிறந்த தீர்வாக இருக்கும். எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்தினால், பெட்ரோல், டீசலுக்கு செலவிடும் தொகையை மிச்சம் பிடிக்கலாம். அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களை குறைந்த செலவில், மிக எளிதாக சார்ஜ் செய்து கொள்ளலாம்.

மிகவும் குறைந்த செலவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கிய இந்திய இளைஞர்... சீனாவுக்கே சவால் விடலாம்

அத்துடன் பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களை போல், எலெக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச்சூழலை ஒருபோதும் பாதிக்காது. இவை சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்தவை. இதுபோன்ற காரணங்களால், வாடிக்கையாளர்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்கள் வேகமாக புகழ்பெற்று வருகின்றன.

மிகவும் குறைந்த செலவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கிய இந்திய இளைஞர்... சீனாவுக்கே சவால் விடலாம்

முன்பெல்லாம் இந்திய சாலைகளில் எலெக்ட்ரிக் வாகனங்களை பார்ப்பது என்பதே அரிதான விஷயமாக இருக்கும். ஆனால் தற்போது அதிகப்படியான எலெக்ட்ரிக் வாகனங்கள் உலா வர தொடங்கியுள்ளன. எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரித்து வருவதையே இது காட்டுகிறது.

மிகவும் குறைந்த செலவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கிய இந்திய இளைஞர்... சீனாவுக்கே சவால் விடலாம்

வாடிக்கையாளர்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஆர்வம் அதிகரித்து கொண்டே வருவதால், டாடா, மஹிந்திரா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் அனைத்தும், போட்டி போட்டி கொண்டு எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்து வருகின்றன.

மிகவும் குறைந்த செலவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கிய இந்திய இளைஞர்... சீனாவுக்கே சவால் விடலாம்

இந்த சூழலில், பஞ்சாப் மாநிலம் பதன்கோட் நகரை சேர்ந்த பிரின்ஸ் என்ற இளைஞர், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை, சுயமாகவே உருவாக்கியுள்ளார். ஏராளமான சிறப்பம்சங்கள் நிறைந்த இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மிகவும் குறைந்த செலவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கிய இந்திய இளைஞர்... சீனாவுக்கே சவால் விடலாம்

பெட்ரோலில் இயங்க கூடிய ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரைதான், அவர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக மாற்றம் செய்துள்ளார் என்பது முதல் சிறப்பம்சம். செயல்பாடற்ற நிலையில் இருந்த ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் ஒன்றை, 4 ஆயிரம் ரூபாய்க்கு பிரின்ஸ் வாங்கினார்.

மிகவும் குறைந்த செலவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கிய இந்திய இளைஞர்... சீனாவுக்கே சவால் விடலாம்

அதைதான் முழுக்க முழுக்க தனது திறமைகளை பயன்படுத்தி, தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக அவர் மாற்றம் செய்துள்ளார். இந்த பணிகளையும் எல்லாம் முடிக்க 5 ஆண்டுகள் ஆகியுள்ளது. என்றாலும் இந்த ஸ்கூட்டரில் அதற்கு ஏற்ற வகையில், ஏராளமான சிறப்பம்சங்கள் உள்ளன.

மிகவும் குறைந்த செலவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கிய இந்திய இளைஞர்... சீனாவுக்கே சவால் விடலாம்

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 65 கிலோ மீட்டர்கள். இதில், பாதுகாப்பு அம்சங்களுக்கும் பஞ்சமில்லை. இந்த ஸ்கூட்டரில் உள்ள சோக்கை வெளியே இழுத்து விட்டால், உடனடியாக ஸ்கூட்டர் சேப்டி மோடுக்கு சென்று விடும்.

மிகவும் குறைந்த செலவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கிய இந்திய இளைஞர்... சீனாவுக்கே சவால் விடலாம்

சேப்டி மோடில், ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 35 கிலோ மீட்டர்கள் மட்டுமே. இந்த வேகத்திற்கு மேல் ஸ்கூட்டர் பயணிக்காது. அதே சமயம், சோக்கை உள்ளே அழுத்தி விட்டால், வழக்கமான டாப் ஸ்பீடான மணிக்கு 65 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தில் ஸ்கூட்டர் பயணிக்கும்.

மிகவும் குறைந்த செலவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கிய இந்திய இளைஞர்... சீனாவுக்கே சவால் விடலாம்

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் சாம்சங் லித்தியம் இயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால், 85 கிலோ மீட்டர்கள் வரை தாராளமாக பயணம் செய்ய முடியும் என இந்த ஸ்கூட்டரை உருவாக்கிய பிரின்ஸ் கூறியுள்ளார்.

மிகவும் குறைந்த செலவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கிய இந்திய இளைஞர்... சீனாவுக்கே சவால் விடலாம்

50 A வரையிலான அதிக சக்தி வாய்ந்த சார்ஜர்களை பயன்படுத்தினால், ஒன்றரை மணி நேரத்தில், பேட்டரி முழுவதும் சார்ஜ் ஆகி விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் சில காஸ்மெடிக் மாற்றங்களையும் பிரின்ஸ் செய்துள்ளார்.

மிகவும் குறைந்த செலவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கிய இந்திய இளைஞர்... சீனாவுக்கே சவால் விடலாம்

இதன்படி ஆக்டிவாவின் உண்மையான ஹெட்லைட் மற்றும் இன்டிகேட்டர்கள் நீக்கப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக, செவ்வக வடிவ எல்இடி யூனிட் ஹெட்லைட்டாக பொருத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஹேண்டில்பாரின் இரு முனைகளிலும் இன்டிகேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.

மிகவும் குறைந்த செலவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கிய இந்திய இளைஞர்... சீனாவுக்கே சவால் விடலாம்

அத்துடன் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்யும் முறையும் மாற்றப்பட்டுள்ளது. சாவியை போட்ட பின்பு, வலது பக்க பிரேக் லிவரை அழுத்தினால், ஸ்கூட்டர் தானாக ஸ்டார்ட் ஆகிவிடுகிறது. இப்படி ஏராளமான சிறப்பம்சங்கள் நிறைந்த ஸ்கூட்டரை உருவாக்க 56 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மிகவும் குறைந்த செலவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கிய இந்திய இளைஞர்... சீனாவுக்கே சவால் விடலாம்

பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய் இறக்குமதியை வெகுவாக குறைக்க வேண்டும், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட காரணங்களால், எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

மிகவும் குறைந்த செலவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கிய இந்திய இளைஞர்... சீனாவுக்கே சவால் விடலாம்

வரும் 2030ம் ஆண்டிற்குள், இந்தியாவில் இயங்கும் அனைத்து வாகனங்களும், எலெக்ட்ரிக் வாகனங்களாகவே இருக்க வேண்டும் என மத்திய அரசு முதலில் இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால் இது சாத்தியமில்லை என்பதால், 100 சதவீதம் என்ற இலக்கை, மத்திய அரசு தற்போது 30 சதவீதமாக மாற்றி கொண்டுள்ளது.

மிகவும் குறைந்த செலவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கிய இந்திய இளைஞர்... சீனாவுக்கே சவால் விடலாம்

அதாவது வரும் 2030ம் ஆண்டிற்குள், இந்தியாவில் இயங்கும் மொத்த வாகனங்களில், 30 சதவீத வாகனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மிக தீவிரமாக எடுத்து வருகிறது.

மிகவும் குறைந்த செலவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கிய இந்திய இளைஞர்... சீனாவுக்கே சவால் விடலாம்

இதன் ஒரு பகுதியாக, இத்தகைய திறமை வாய்ந்த இளைஞர்களை அடையாளம் கண்டறிந்து ஊக்குவித்தால், இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளை காட்டிலும், வெகு வேகமாக அதிகரிக்கும் என்பது நிச்சயம்.

மிகவும் குறைந்த செலவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கிய இந்திய இளைஞர்... சீனாவுக்கே சவால் விடலாம்

இத்தகைய திறமை வாய்ந்த இளைஞர்களுக்கு அரசின் உதவிகள் கிடைத்தால், அவர்களால் இன்னும் மிக குறைவான செலவில், அதிநவீன வசதிகளுடன் கூடிய எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்து, பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ImageSource:BLC Biker

Most Read Articles
English summary
Punjab Youngster Converts Honda Activa Into Electric. Read in Tamil
Story first published: Saturday, December 29, 2018, 17:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X