டிவிஎஸ், ஹோண்டாவை கலங்கடித்த சுஸுகி.. வெறும் 12 நாட்களில் 11,000 பர்க்மேன் ஸ்கூட்டர் விற்பனை!

By Arun

இந்தியாவில் லான்ச் செய்யப்பட்ட முதல் 12 நாட்களில், 11,000 பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர்களை விற்பனை செய்து சுஸுகி நிறுவனம் அசத்தியுள்ளது. சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டருக்கு நல்ல ஓபனிங் கிடைக்க என்ன காரணம்? என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

டிவிஎஸ், ஹோண்டாவை கலங்கடித்த சுஸுகி.. வெறும் 12 நாட்களில் 11,000 பர்க்மேன் ஸ்கூட்டர் விற்பனை!

வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர், கடந்த ஜூலை 19ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டருக்கு சிறப்பான ஓபனிங் கிடைத்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

டிவிஎஸ், ஹோண்டாவை கலங்கடித்த சுஸுகி.. வெறும் 12 நாட்களில் 11,000 பர்க்மேன் ஸ்கூட்டர் விற்பனை!

லான்ச் செய்யப்பட்ட முதல் 12 நாட்களில் (ஜூலை 30 வரை), 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டருக்கு, இந்திய வாடிக்கையாளர்கள் அமோக ஆதரவு வழங்கியிருப்பது நிரூபணமாகியுள்ளது.

டிவிஎஸ், ஹோண்டாவை கலங்கடித்த சுஸுகி.. வெறும் 12 நாட்களில் 11,000 பர்க்மேன் ஸ்கூட்டர் விற்பனை!

சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர், மேக்ஸி ரக ஸ்டைலில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்டமான இந்த மேக்ஸி ரக ஸ்டைல்தான், சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டரின் அட்டகாசமான ஓபனிங்கிற்கு மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது என ஆட்டோமொபைல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

டிவிஎஸ், ஹோண்டாவை கலங்கடித்த சுஸுகி.. வெறும் 12 நாட்களில் 11,000 பர்க்மேன் ஸ்கூட்டர் விற்பனை!

சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125தான், இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்படும் பெரிய அளவிலான ஸ்கூட்டர். நீண்ட தூர பயணங்களை கூட இந்த ஸ்கூட்டரில் மேற்கொள்ள முடியும். அதற்கேற்ற வகையில், சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டிவிஎஸ், ஹோண்டாவை கலங்கடித்த சுஸுகி.. வெறும் 12 நாட்களில் 11,000 பர்க்மேன் ஸ்கூட்டர் விற்பனை!

ஆனால் இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்படும் மற்ற ஆட்டோமெட்டிக் ஸ்கூட்டர்களில் நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வது கடினமே. அதற்கேற்ப அவை டிசைன் செய்யப்படவில்லை. இந்தியாவில் தற்போது உங்களால் வாங்க முடியும் ஒரே மேக்ஸி ஸ்கூட்டர் சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 மட்டுமே.

டிவிஎஸ், ஹோண்டாவை கலங்கடித்த சுஸுகி.. வெறும் 12 நாட்களில் 11,000 பர்க்மேன் ஸ்கூட்டர் விற்பனை!

இந்தியா கடைசியாக கைனடிக் பிளாசே வடிவத்தில் மேக்ஸி ரக ஸ்கூட்டரை பார்த்திருந்தது. ஆனால் கைனடிக் பிளாசே குறிப்பிடத்தகுந்த அளவில் விற்பனையாகவில்லை. கைனடிக் பிளாசேவின் தோல்வி, அதன் சேல்ஸ் ரிப்போர்ட்டில் எதிரொலித்தது.

டிவிஎஸ், ஹோண்டாவை கலங்கடித்த சுஸுகி.. வெறும் 12 நாட்களில் 11,000 பர்க்மேன் ஸ்கூட்டர் விற்பனை!

உலகம் முழுவதும் சுஸுகி நிறுவனம் விற்பனை செய்து வரும் சில மேக்ஸி ரக ஸ்கூட்டர்கள் 600 சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்டவையாக உள்ளன. அந்த வகையில் பார்த்தால், பர்க்மேன் ஸ்ட்ரீட் 125தான் சிறிய இன்ஜினை கொண்டது.

டிவிஎஸ், ஹோண்டாவை கலங்கடித்த சுஸுகி.. வெறும் 12 நாட்களில் 11,000 பர்க்மேன் ஸ்கூட்டர் விற்பனை!

சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டரில், 125 சிசி, ஏர் மற்றும் ஃபேன் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதே இன்ஜின்தான் சுஸுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 8.5 பிஎச்பி பவர் மற்றும் 10.2 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது.

டிவிஎஸ், ஹோண்டாவை கலங்கடித்த சுஸுகி.. வெறும் 12 நாட்களில் 11,000 பர்க்மேன் ஸ்கூட்டர் விற்பனை!

சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டரின் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை 68 ஆயிரம் ரூபாய். சுஸுகி நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் மிக விலை உயர்ந்த ஸ்கூட்டர் இதுதான். இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஒரு சில 125 ஸ்கூட்டர்களை காட்டிலும் இது விலை அதிகமானதுதான்.

டிவிஎஸ், ஹோண்டாவை கலங்கடித்த சுஸுகி.. வெறும் 12 நாட்களில் 11,000 பர்க்மேன் ஸ்கூட்டர் விற்பனை!

இந்தியாவில் டிவிஎஸ் என்டார்க் 125, ஹோண்டா க்ரேஸியா 125 உள்ளிட்ட ஸ்கூட்டர்களுடன், சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர் போட்டியிடும். இந்த ஸ்கூட்டர்களை காட்டிலும் கூட, சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டரின் விலை அதிகம்தான்.

டிவிஎஸ், ஹோண்டாவை கலங்கடித்த சுஸுகி.. வெறும் 12 நாட்களில் 11,000 பர்க்மேன் ஸ்கூட்டர் விற்பனை!

ஏனெனில் டிவிஎஸ் என்டார்க் 125 ரூ.61,875 (எக்ஸ் ஷோரூம்), ஹோண்டா க்ரேஸியா 125 ரூ.58,810-ரூ.63,182 (எக்ஸ் ஷோரூம்) விலைகளில் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. எனினும் வாடிக்கையாளர்களை கவரக்கூடிய வகையில் பல வசதிகளை சுஸுகி நிறுவனம் வழங்குகிறது.

டிவிஎஸ், ஹோண்டாவை கலங்கடித்த சுஸுகி.. வெறும் 12 நாட்களில் 11,000 பர்க்மேன் ஸ்கூட்டர் விற்பனை!

எல்இடி ஹெட்லேம்ப், டெயில் லேம்ப், முன் பகுதியில் விண்டு ஸ்க்ரீன், டிஜிட்டல் க்ளாக் உடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், ஆயில் மாற்றம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டால் எச்சரிக்கும் இன்டிகேட்டர் உள்ளிட்ட வசதிகள் சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ளன.

டிவிஎஸ், ஹோண்டாவை கலங்கடித்த சுஸுகி.. வெறும் 12 நாட்களில் 11,000 பர்க்மேன் ஸ்கூட்டர் விற்பனை!

சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டரில் இடம்பெற்றிருக்கும் மல்டி ஃபங்ஷன் கீ ஸ்லாட் அமைப்பு, மொபைல் சார்ஜ் செய்து கொள்ளும் வசதி ஆகியவையும் முக்கிய அம்சங்களாக பார்க்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  1. ரூ.51 கோடி மதிப்பிலான சூப்பர் கார், பைக் புல்டோசர் ஏற்றி அழிப்பு.. வருமானம் பார்க்க விரும்பாத அதிபர்
  2. மாருதிக்கு என்ன ஆச்சு? டொயோட்டா ஜோராச்சு..
  3. ராயல் என்பீல்டு வாடிக்கையாளர்களை தங்கள் வசம் ஈர்க்க நினைக்கும் ஹார்லி டேவிட்சனுக்கு 'ஜூலை' அதிர்ச்சி
Most Read Articles

மேலும்... #சுஸுகி #suzuki
English summary
Reason Behind Success of Suzuki Burgman 125 Scooter. Read in Tamil
Story first published: Thursday, August 2, 2018, 13:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X