சில நூறு ரூபாய் செலவில் பெகாசஸ் எடிசனாக மாற்றப்பட்ட ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500!!

ராஜஸ்தானை சேர்ந்த ஸ்டிக்கர் கடைக்காரர் ஒருவர், ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 மோட்டார்சைக்கிளை பெகாசஸ் 500 எடிசனாக மாற்றிக் காட்டி அசத்தி இருக்கிறார். பெட்ரோல் டேங்க், சைடு பாக்ஸில் உள்ள கிளாசிக் 500 ம

ராயல் என்ஃபீல்டு பெகாசஸ் 500 எடிசன் மோட்டார்சைக்கிளை வாங்கிய உரிமையாளர்கள் கடும் கோபத்திலும், ஏமாற்றத்திலும் உள்ளனர். குப்பையில் வீசி எறிந்து உரிமையாளர்கள் எதிர்ப்பை காட்டிய நிகழ்வுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சில நூறு ரூபாய் செலவில் கிளாசிக் 500 மாடலை பெகாசஸ் 500 எடிசனாக மாற்றிய விஷயம் அவர்களை மேலும் வெறுப்பேற்றி உள்ளது.

சில நூறு ரூபாய்களில் ராயல் என்ஃபீல்டு பெகாசஸ் 500 எடிசன் ரெடி!!

ஆம், ராஜஸ்தான் மாநிலம், சிகாரை சேர்ந்த Vwraps என்ற ஸ்டிக்கர் நிறுவனத்தை சேர்ந்தவரின் கைவண்ணத்தில், சிறிய அளவிலான ஸ்டிக்கர் வேலைப்பாடுகள் மூலமாக ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 மோட்டார்சைக்கிளை பெகாசஸ் 500 எடிசனாக மாற்றிக் காட்டி இருக்கிறார்.

சில நூறு ரூபாய்களில் ராயல் என்ஃபீல்டு பெகாசஸ் 500 எடிசன் ரெடி!!

பெட்ரோல் டேங்க், சைடு பாக்ஸில் உள்ள கிளாசிக் 500 மோட்டார்சைக்கிளின் ஸ்டிக்கர்களை அகற்றிவிட்டு, பெகாசஸ் 500 எடிசன் மோட்டார்சைக்கிளில் இருக்கும் விசேஷ ஸ்டிக்கர்கள் மற்றும் வரிசை எண்ணை சாதாரண கிளாசிக் 500 மாடலில் ஒட்டி அசத்தலாக மாற்றி இருக்கிறார்.

சில நூறு ரூபாய்களில் ராயல் என்ஃபீல்டு பெகாசஸ் 500 எடிசன் ரெடி!!

அரை மணிநேரத்தில் கிளாசிக் 500 மோட்டார்சைக்கிள் பெகாசஸ் 500 எடிசனாக மாற்றி இருக்கிறார். பெகாசஸ் எடிசன் மாடலின் பெட்ரோல் டேங்க்கில் இருக்கும் விசேஷ முத்திரை சின்னங்கள் மற்றும் வரிசை எண்ணை இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்து, அந்த டிசைனிலான ஸ்டிக்கரை கிளாசிக் 500 மோட்டார்சைக்கிளில் ஒட்டுகிறார்.

சில நூறு ரூபாய்களில் ராயல் என்ஃபீல்டு பெகாசஸ் 500 எடிசன் ரெடி!!

சட்டென பார்க்கும்போது, அது பெகாசஸ் 500 எடிசன் மாடலை போலவே தோன்றுகிறது. விஷயம் தெரிந்தவர்கள் அல்லது கூர்ந்து கவனிப்பவர்கள் மட்டுமே, அது கிளாசிக் 500 டெசர்ட் ஸ்ட்ரோம் மோட்டார்சைக்கிளில் பெகாசஸ் 500 எடிசன் போன்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருப்பது தெரியும்.

சில நூறு ரூபாய்களில் ராயல் என்ஃபீல்டு பெகாசஸ் 500 எடிசன் ரெடி!!

ஏனெனில், உண்மையான ராயல் என்ஃபீல்டு பெகாசஸ் 500 எடிசன் மாடலானது சர்வீஸ் பிரவுன் மற்றும் டிராப் க்ரீன் ஆகிய இரண்டு வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. அதில், சர்வீஸ் பிரவுன் வண்ணம் மட்டுமே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அடர் பழுப்பு வண்ணம் பழுப்பு வண்ணத்தில் இருக்கிறது. நீங்கள் படத்தில் பார்ப்பது கிளாசிக் 500 மோட்டார்சைக்கிளின் டெசர்ட் ஸ்ட்ரோம் வண்ணத்தின் அடிப்படையில் பெகாசஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கிறது

ஆனால், டெசர்ட் ஸ்ட்ரோம் பாலைவன மணலை பிரதிபலிக்கும் நிறத்தில் இருக்கிறது. மேலும், பெகாசஸ் 500 எடிசன் மோட்டார்சைக்கிளில் கேன்வாஸ் துணியால் ஆன பயனீர் பைகள், பித்தளையால் ஆன பக்கிள் கொண்ட பெல்ட்டுகள் ஆகியவை கொடுக்கப்படுகின்றன. எனினும், தோற்றத்தில் கிட்டத்தட்ட பெகாசஸ் 500 எடிசனாகவே மாறி இருக்கிறது என்று கருதலாம்.

சில நூறு ரூபாய்களில் ராயல் என்ஃபீல்டு பெகாசஸ் 500 எடிசன் ரெடி!!

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 அடிப்படையிலான பெகாசஸ் 500 எடிசன் மாடல் ரூ.2.40 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதேநேரத்தில், அதே சிறப்பம்சங்களை பிரதிபலிக்கும் விதத்தில், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் வந்த கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் மாடல் ரூ.1.62 லட்சம் விலையில் சந்தைக்கு வந்துள்ளது. பெகாசஸ் 500 எடிசன் விலை கிட்டத்தட்ட ரூ.70,000 ரூபாய்க்கும் அதிகம்.

சில நூறு ரூபாய்களில் ராயல் என்ஃபீல்டு பெகாசஸ் 500 எடிசன் ரெடி!!

ஆனால், இந்த ஸ்டிக்கர் கடைக்காரர் வெறும் அரை மணிநேரத்தில் சில நூறு ரூபாய் செலவில் பெகாசஸ் 500 எடிசனாக மாற்றி காட்டி இருக்கிறார். இது ராயல் என்ஃபீல்டு பெகாசஸ் 500 எடிசன் வாங்கியவர்களை மேலும் வெறுப்பேற்றும் விதத்தில் அமைந்துள்ளது.

சில நூறு ரூபாய்களில் ராயல் என்ஃபீல்டு பெகாசஸ் 500 எடிசன் ரெடி!!

கடந்த ஜூலை மாதம் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 மோட்டார்சைக்கிளின் ஸ்பெஷல் எடிசன் மாடலாக பெகாசஸ் 500 எடிசன் அறிமுகம் செய்யப்பட்டது. ஜூலை 10ந் தேதி ஆன்லைனில் புக்கிங் துவங்கிய நிலையில், அதற்கான இணையப்பக்கம் ஸ்தம்பித்ததால், மீண்டும் ஜூலை 25ந் தேதி புக்கிங் செய்யப்பட்டது.

சில நூறு ரூபாய்களில் ராயல் என்ஃபீல்டு பெகாசஸ் 500 எடிசன் ரெடி!!

புக்கிங் துவங்கிய 178 வினாடிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 250 பெகாசஸ் 500 மோட்டார்சைக்கிள்களுக்கும் புக்கிங் முடிந்துவிட்டது. அரிய வகை மோட்டார்சைக்கிள் சேகரிப்பாளர்களுக்கான மாடலாக சொல்லப்பட்டது. எனவே, இது அதி எதிர்பார்ப்புடன் இது தனித்துவமான மாடலாக கருதி புக்கிங் செய்தவர்கள் தற்போது மிகுந்த ஏமாற்றத்தில் ஆழ்ந்துள்ளனர்..

சில நூறு ரூபாய்களில் ராயல் என்ஃபீல்டு பெகாசஸ் 500 எடிசன் ரெடி!!

இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்து வான்படையினர் பயன்படுத்திய மோட்டார்சைக்கிள் மற்றும் அதன் விசேஷ அம்சங்களை பிரதிபலிக்கும் விதத்தில், ராயல் என்ஃபீல்டு பெகாசஸ் 500 மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது. அதேநேரத்தில், கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் மாடல் இந்திய வான் படையினர் மற்றும் ராணுவத்தின் அடையாளங்கள் மற்றும் சின்னங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.

சில நூறு ரூபாய்களில் ராயல் என்ஃபீல்டு பெகாசஸ் 500 எடிசன் ரெடி!!

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 சிக்னல்ஸ் மாடலில் தனித்துவமான வரிசை எண், ராணுவ சின்னங்கள் பொறிக்கப்பட்டு இருப்பதுடன், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. சாதாரண மாடலைவிட ரூ.15,000 மட்டுமே கூடுதல் விலையில் வந்துள்ளது.

சில நூறு ரூபாய்களில் ராயல் என்ஃபீல்டு பெகாசஸ் 500 எடிசன் ரெடி!!

ஆனால், ராயல் என்ஃபீல்டு பெகாசஸ் 500 எடிசன் மாடல் விலை மிக அதிகமாக இருந்தும், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இல்லை என்பது வாடிக்கையாளர்களுக்கு தற்போது பெரும் ஏமாற்றமாக மாறி இருக்கிறது. இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன.

இந்த வித்தியாசங்களை பார்த்து அதிர்ந்து போன பெகாசஸ் 500 எடிசன் வாடிக்கையாளர் ஒருவர், அண்மையில் மத்திய போக்குவரத்து அமைச்சகத்துக்கு, ராயல் என்ஃபீல்டு பெகாசஸ் 500 எடிசனில் ஏபிஎஸ் இல்லாமல் அறிமுகம் செய்யப்பட்டிருப்பது குறித்து கேள்விகளை எழுப்பி பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதற்கு என்ன விடை கிடைக்கும் என்பது தெரியவில்லை.

சில நூறு ரூபாய்களில் ராயல் என்ஃபீல்டு பெகாசஸ் 500 எடிசன் ரெடி!!

கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்தியாவில் 125சிசி திறனுக்கும் அதிகமான எஞ்சின் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்களில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயமாக்கப்பட்டது. அதன்பிறகு உற்பத்தி செய்யப்படும் புதிய இருசக்கர வாகனங்களில் ஏபிஎஸ் அவசியம்.

சில நூறு ரூபாய்களில் ராயல் என்ஃபீல்டு பெகாசஸ் 500 எடிசன் ரெடி!!

ஆனால், ஏற்கனவே இருக்கும் மாடல்களில் ஸ்டிக்கர் வேலைப்பாடுகளை செய்து, வாடிக்கையாளர்களுக்கு ஸ்பெஷல் எடிசன் மாடல் போலவும், அரசாங்க விதிகளின்படி, பழைய மாடலில் புதிய வேரியண்ட் போலவும் காட்டி அறிமுகம் செய்கின்றனர். ஆனால், இதுகுறித்து அரசாங்கம் தெளிவான வரையறுகளை வகுக்க வேண்டும் அல்லது தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வாடிக்கையாளர்களிடமிருந்து எழுந்துள்ளது.

Most Read Articles

அட்டகாசமான அமசங்களுடன் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுத்து வரும் புதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் மோட்டார்சைக்கிளின் படங்களை மேலே உள்ள கேலரியில் காணலாம். இந்த மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள், விலையை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

English summary
Royal Enfield Classic 500 Gets Pegasus 500 Treatment. Here are some interesting details in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X