ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பெகாஸஸ் பைக் அறிமுகமானது...! இதன் விலை ரூ 2.49 லட்சமாம்

இரண்டாம் உலகபோரில் பயன்படுத்தபட்ட பைக்கில் இருந்த வசதிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ள ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பெகாஸஸ் லிமிட்டட் எடிசன் பைக் இன்று அறிமுகமாக அதற்கான புக்கிங் துவங்கியுள்ளது.

By Balasubramanian

இரண்டாம் உலகபோரில் பயன்படுத்தபட்ட பைக்கில் இருந்த வசதிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ள ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பெகாஸஸ் லிமிட்டட் எடிசன் பைக் இன்று அறிமுகமாக அதற்கான புக்கிங் துவங்கியுள்ளது. இந்தியாவிற்கு வெறும் 250 பைக்குகள் தான் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பைக் ரூ 2.49 லட்சத்திற்கு இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.

ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பெகாஸஸ் பைக் அறிமுகமானது...! இதன் விலை ரூ 2.49 லட்சமாம்

இரண்டாம் உலகப்போரில் பிரிட்ஷ் ராணுவ வீரர்கள் பயன்படுத்துவதற்காக ஆர்இ/டபிள்யூடி 125 என்ற இரண்டு ஸ்டோக் இன்ஜின் பயன்படுத்தப்பட்டது. இதை ராணுவ வீரர்கள் அதிகமாக விரும்பினர். அந்த பைக் அந்த காலத்தில் பெரிதும் பெயர் பெற்றது. இதற்கு முக்கிய காரணம் இந்த பைக்கின் லுக் தான்.

ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பெகாஸஸ் பைக் அறிமுகமானது...! இதன் விலை ரூ 2.49 லட்சமாம்

இதை நினைவு கூறும் விதமாக ராயல் என்பீல்டு நிறுவனம் இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட பைக்கின் லுக்கை தற்போது விற்பனையாகி வரும் கிளாசிக் 500 பைக்கில் புகுத்தி ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பெகாஸஸ் என்ற லிமிட்டன் வேரியன்டை அறிமுகம் செய்துள்ளது.

ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பெகாஸஸ் பைக் அறிமுகமானது...! இதன் விலை ரூ 2.49 லட்சமாம்

இந்த தகவல்கள் ஏற்கனவே நமக்கு வந்திருந்தாலும் அந்த பைக்கின் விலை தற்போது தெரியவந்துள்ளுது. இந்த பைக் மஹாராஷ்டிராவில் ரூ 2.49 லட்சம் என்ற விலையிலும், டில்லியில் ரூ 2.40 லட்சம் என்ற ஆன்ரோடு விலையிலும் விற்பனைக்கு வருகிறது.

ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பெகாஸஸ் பைக் அறிமுகமானது...! இதன் விலை ரூ 2.49 லட்சமாம்

இந்த பைக்கிற்கான புக்கிங்கை ஆன்லைனில் மட்டும் தான் செய்ய முடியும். இந்த ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பெகாஸஸ் பைக் உலக அளவில் மொத்தம் 1000 பைக்குகள் தான் தயார் செய்யப்படுகின்றன. இதை லண்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகளில் மட்டும் விற்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதில் இந்தியாவிற்காக 250 பைக்குகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.

ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பெகாஸஸ் பைக் அறிமுகமானது...! இதன் விலை ரூ 2.49 லட்சமாம்

இந்த பைக்கின் இன்ஜினை பொருத்தவரை கிளாசிக் 500 பைக்கில் உள்ள அதே இன்ஜின் ஆப்ஷன்கள் தான் இந்த பைக்கிலும் உள்ளது. இதில் 499 சிசி ஏர் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளுது. இது 5250 ஆர்பிஎம்மில் 27.2 பிஎச்பி பவரையும், 4000 ஆர்.பி.எம்மில் 41.3 என்.எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பெகாஸஸ் பைக் அறிமுகமானது...! இதன் விலை ரூ 2.49 லட்சமாம்

இந்த பைக்கின் முன் பகுதியில் டெலஸ்கோபிக் ஃபோக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. பின்பக்கத்தில் டுவின் ஷாக் அபஷர்பர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டு வீல்களிலும் டிஸ்க் பிரேக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பைக்கின் மொத்த எடை 194 கிலோ.

ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பெகாஸஸ் பைக் அறிமுகமானது...! இதன் விலை ரூ 2.49 லட்சமாம்

இந்த பைக் சர்வீஸ் பிரெளன் கலரில் இந்தியாவிற்கு விற்பனைக்கு வருகிறுது. சர்வதேச அளவில் ஆலிவ் கிரீன் டார்ப் கலர் ஆப்ஷனாக உள்ளது. இந்த பைக்கில் உள்ள சிறப்பம்சமே இந்த பைக்கின் டேங்கில் சிரீயல் நம்பர் ஒன்று பதிவு செய்யப்பட்டிருக்கும். இது ஒவ்வொரு பைக்கிற்குள் ஒரு ஒரு சீரியல் நம்பர் என்ற ரீதியில் வழங்கப்பட்டிருக்கும். இது இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட வழக்கம்.

ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பெகாஸஸ் பைக் அறிமுகமானது...! இதன் விலை ரூ 2.49 லட்சமாம்

இந்த பைக்கின் டேங்கில் பெகாஸஸ் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இதனால் தான் இந்த பைக்கிற்கு பெகாஸஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இது பெராசூட் ரெஜிமென்ட் இன்ஸெனியாவை குறிப்பிடுகிறது. மேலும் இந்த பைக்கில் பழைய ராயல் என்பீல்டு பேட்ஜ் பொறிக்கப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பெகாஸஸ் பைக் அறிமுகமானது...! இதன் விலை ரூ 2.49 லட்சமாம்

இதுமட்டும் இல்லாமல் பிரெளன் நில ஹேண்டில் பார் கிரிப்ஸ், லெதர் ஸ்டார்ப்ஸ், ஏர் பில்டர் அருகே பிராஸ் பக்கிள்ஸ், என பல அசம்ங்கள் உள்ளன. மேலும் சில ஹெட்லைட் பெஸில் உள்ளிட்ட சில இடங்களில் க்ரோம் பினிஷிங் செய்யப்பட்டுள்ளது. கிக் ஸ்டார்ட் லிவர், ரிம்களுடனானா வீல்கள், எக்ஸாட், கால் வைக்கும் இடம் என எல்லாம் கருப்பு நிற தீம்மில செய்யப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பெகாஸஸ் பைக் அறிமுகமானது...! இதன் விலை ரூ 2.49 லட்சமாம்

இது மட்டும் இல்லாமல் இந்த பைக்கின் பின்புறம் கேன்வாஸ் பெனியர் என்று சொல்லப்படக்கூடிய பைக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்டைல் பழைய ஆர்இ/டபிள்யூடி125 இரண்டு ஸ்டோக் பைக்கில் இருந்த டிசைன். இந்த பைக் இரண்டாம் உலகபோரில் பெரும் பங்காற்றியது. கிட்டத்தட்ட 4000 பைக்குகள் இரண்டாம் உலக போரில் பயன்படுத்தப்பட்டன.

ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பெகாஸஸ் பைக் அறிமுகமானது...! இதன் விலை ரூ 2.49 லட்சமாம்

இந்த பைக்கிற்கான புக்கிங் தற்போது ஆன்லைனில் துவங்கியுள்ளது. இந்தியாவிற்கு வெறும் 250 பைக்குகள் தான் வருவதால் இதற்கான புக்கிங்கிற்கு கடும் போட்டி நிலவுகிறது. நீங்கள் இதை படித்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அனைத்து பைக்குகளும் புக் ஆகியிருந்தாலும் ஆச்சரிப்படுவதற்கில்லை. இந்த லிமிட்ட் எடிஷன் மாடலுக்கு இந்தியா மக்கள் மத்தில் நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது.

டிரைவ் ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
English summary
Royal Enfield Classic 500 Pegasus Edition Launched In India, Priced At ₹ 2.49 Lakh.Read in Tamil
Story first published: Wednesday, May 30, 2018, 18:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X