இந்தியாவிற்கு 250 ராயல் என்பீல்டு பெகாஸஸ் 500 லிமிட்டட் எடிசன் பைக் வருகிறது

ராயல் என்பீல்டு நிறுவனம் கிளாசிக் 500 பைக்கில் இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட பைக்கில் உள்ள சில மாற்றங்களை புகுத்தி கிளாசிக் 500 பெகாஸஸ் என்ற லிமிடட் எடிசன் மாடல் பைக்கை வெளியிட்டுள்ளது.

By Balasubramanian

ராயல் என்பீல்டு நிறுவனம் கிளாசிக் 500 பைக்கில் இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட பைக்கில் உள்ள சில மாற்றங்களை புகுத்தி கிளாசிக் 500 பெகாஸஸ் என்ற லிமிடட் எடிசன் மாடல் பைக்கை வெளியிட்டுள்ளது.

ராயல் என்பீல்டு பெகாஸஸ் 500 லிமிட்டட் எடிசன் பைக் அறிமுகம்; இந்தியாவிற்கு 250 பைக்குகள் வருகிறது

ராயல் என்பீல்டு பைக் என்றாலே இன்றைய இளைஞர்கள் மத்தியில் பெரும் மவுசு இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்தில் பெரிய மனிதர்கள் கெத்தாக வரும் பைக் என சொல்லப்பட்ட இந்த பைக் இன்று இளைஞர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விட்டது என்றே சொல்லலாம்.

ராயல் என்பீல்டு பெகாஸஸ் 500 லிமிட்டட் எடிசன் பைக் அறிமுகம்; இந்தியாவிற்கு 250 பைக்குகள் வருகிறது

இந்த பைக் இளைஞர்களை கவர முக்கிய காரணம் இந்த பைக்கில் இருந்து வரும் சத்தம், இதன் மேன்லி லுக், என அதன் பல அம்சங்கள் இன்றைய இளைஞர்களை பெரிதாக கவர்ந்து விட்டது.

ராயல் என்பீல்டு பெகாஸஸ் 500 லிமிட்டட் எடிசன் பைக் அறிமுகம்; இந்தியாவிற்கு 250 பைக்குகள் வருகிறது

தற்போது ராயல் என்பீல்டு பைக் இந்தியாவில் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது.பலர் இந்த பைக்கை புக் செய்து விட்டு காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ராயல் என்பீல்டு நிறுவனம் கிளாசிக் 500 பெகாஸஸ் என்ற லிமிட்டட் எடிசனை தயாரித்துள்ளது.

ராயல் என்பீல்டு பெகாஸஸ் 500 லிமிட்டட் எடிசன் பைக் அறிமுகம்; இந்தியாவிற்கு 250 பைக்குகள் வருகிறது

ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பெகாஸஸ் பைக் உலகில் மொத்தம் 1000 பைக்குகள் தான் தயாரிக்கப்பட்டது. இதில் 250 பைக்குகளை இந்தியாவில் விற்பனை செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ராயல் என்பீல்டு பெகாஸஸ் 500 லிமிட்டட் எடிசன் பைக் அறிமுகம்; இந்தியாவிற்கு 250 பைக்குகள் வருகிறது

இந்த பைக்கிற்கு ஒரு பெரும் வரலாறே இருக்கிறது. இந்த பைக் இரண்டாம் உலக போரின் போது மிலிட்டரியில் உள்ளவர்கள் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட பிளையில் பிளே என்ற பைக்கின் டிசைனில் உள்ள சில அம்சங்களை தற்போது விற்பனையில் உள்ள கிளாசிக் 500 பைக்கில் புகுத்தி கிளாசிக் 500 பெகாஸஸ் என பெயரிட்டுள்ளனர்.

ராயல் என்பீல்டு பெகாஸஸ் 500 லிமிட்டட் எடிசன் பைக் அறிமுகம்; இந்தியாவிற்கு 250 பைக்குகள் வருகிறது

இந்த பைக்கில் உள்ள டேங்க் களில் ஒரு சிரியல் நம்பர் பொறிக்கப்பட்டிருக்கும். அந்த வகையில் ஒவ்வொரு பைக்கிற்கும் தனித்தனி சரியல் நம்பர் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த பழக்கம் பழைய பிளையின் பிளே பைக்கில் பயன்படுத்தபபட்ட பழக்கமாக உள்ளது.

ராயல் என்பீல்டு பெகாஸஸ் 500 லிமிட்டட் எடிசன் பைக் அறிமுகம்; இந்தியாவிற்கு 250 பைக்குகள் வருகிறது

மேலும் கிளாசிக் 500 பைக்கில்உள்ள சில அம்சங்கள் இதில் மாற்றப்பட்டுள்ளன. அதன் படி பிரெளன் ஹென்டில் கிரிப், லெதர் ஸ்ட்ராப், பிராஸ் பக்கிள்ஸ், மிரிட்டரி ஸ்டைல் பின்பக்கம் இருண்டு லெதர் பேக்குகள், சில காஸ்மெட்டிக் அம்சங்கள் இந்த பைக்கிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

ராயல் என்பீல்டு பெகாஸஸ் 500 லிமிட்டட் எடிசன் பைக் அறிமுகம்; இந்தியாவிற்கு 250 பைக்குகள் வருகிறது

இந்த கிளாசிக் 500 பெகாஸஸ் பைக்கில் மெக்கானிக்கல் பகுதியில் எந்த மாற்றமும் இல்லை. இது 499 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு, இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 5250 ஆர்.பி.எம்மில் 27.2 பிஎச்பி பவரையும், 4000 ஆர்.பி.எம்மில் 41.3 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது.

ராயல் என்பீல்டு பெகாஸஸ் 500 லிமிட்டட் எடிசன் பைக் அறிமுகம்; இந்தியாவிற்கு 250 பைக்குகள் வருகிறது

5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் சேஸிஸ், சஸ்பென்ஸன், பிரேக் என அனைத்தும் கிளாசிக் 500 பைக்கில் உள்ள அதே அம்சங்கள் தான் இதிலும் உள்ளது. இந்த பைக் சர்வீஸ் பிரெளன், ஆலிவ் டிராப் கிரீன் ஆகிய நிறங்களில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்தியாவிற்கு வரும் பைக்கில் ஆலிவ் கிரீன் நிற பைக் உள்ளதா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

ராயல் என்பீல்டு பெகாஸஸ் 500 லிமிட்டட் எடிசன் பைக் அறிமுகம்; இந்தியாவிற்கு 250 பைக்குகள் வருகிறது

ஐரோப்ப நாடுகளில் இந்த பைக் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ 4.5 லட்சம் என விற்பனை செய்யப்படுகிறது. அது அந்நாட்டில் விற்பனையாகும் கிளாசிக் 500 பைக்கை விட 6 சதவீதம் கூடுதல் தொகை, இந்தியாவில் இந்த பைக் ரூ 1.90 லட்சத்திற்கு விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
English summary
Royal Enfield Classic 500 Pegasus India Launch Details Revealed
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X