ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் லிமிடேட் எடிசன் அறிமுகம்!

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 மோட்டார்சைக்கிளின் புதிய லிமிடேட் எடிசன் மாடல் இங்கிலாந்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

By Saravana Rajan

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 மோட்டார்சைக்கிளின் புதிய லிமிடேட் எடிசன் மாடல் இங்கிலாந்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் இந்தியாவிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் லிமிடேட் எடிசன் அறிமுகம்!

இரண்டாம் உலகப்போரின்போது இங்கிலாந்து வான் படையினர் பயன்படுத்திய ராயல் என்ஃபீல்டு WD/RE என்ற 125 மோட்டார்சைக்கிளின் அம்சங்களுடன் இந்த புதிய கிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் மாடல் வந்துள்ளது. போர் நடக்கும் பகுதிகளில் விமானத்திலிருந்து இந்த மோட்டார்சைக்கிளை கீழே இறக்கி படை வீரர்கள் பயன்படுத்தினர். குறிப்பாக, தகவல் பரிமாற்றத்திற்கு பெரிதும் உதவியது.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் லிமிடேட் எடிசன் அறிமுகம்!

தவிரவும், இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்து பயன்படுத்திய பாரசூட்டுகளில் கிரேக்க புராணக் கதைகளில் வீராதி வீரனான பெல்லரோபான், பறக்கும் குதிரை மீது அமர்ந்திருக்கும் படம் சின்னமாக பயன்படுத்தப்பட்டது. இதே சின்னம் தற்போது வந்திருக்கும் கிளாசிஸ் 500 பெகாசஸ் எடிசன் மோட்டார்சைக்கிளும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் லிமிடேட் எடிசன் அறிமுகம்!

பெட்ரோல் டேங்க்,எஞ்சின் மற்றும் புகைப்போக்கி குழாய் உள்ளிட்ட பல இடங்களில் பெகாசஸ் குதிரை சின்னம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதுதான் இந்த ஸ்பெஷல் எடிசனுக்கு வலுசேர்க்கும் முக்கிய அம்சமாக இருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் லிமிடேட் எடிசன் அறிமுகம்!

ராணுவ மோட்டார்சைக்கிளில் பயன்படுத்துவது போன்றே, கேன்வாஸ் துணியால் ஆன பயனீர் பைகள் மற்றும் பித்தளை பக்கிள்ஸ் கொண்ட பெல்ட்டுகளுடன் மிகவும் தனித்துவமாக தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பெகாசஸ் எடிசனின் ஒவ்வொரு மோட்டார்சைக்கிளின் பெட்ரோல் டேங்கிலும் தயாரிப்பு அடிப்படையில் தனித்துவமான வரிசை எண் கொடுக்கப்பட இருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் லிமிடேட் எடிசன் அறிமுகம்!

புதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் மோட்டார்சைக்கிளானது ஆலிவ் டிராப் க்ரீன் மற்றும் சர்வீஸ் பிரவுன் ஆகிய இரண்டு வண்ணங்களில் வர இருக்கிறது. இதில், சர்வீஸ் பிரவுன் வண்ண மாடல் மட்டும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் லிமிடேட் எடிசன் அறிமுகம்!

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் மோட்டார்சைக்கிளில் 499சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 27.2 பிஎச்பி பவரையும், 41.3 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் லிமிடேட் எடிசன் அறிமுகம்!

முன்புறத்தில் 35மிமீ டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் அட்ஜெஸ்ட்டபிள் வசதி கொண்ட இரட்டை ஷாக் அப்சார்களும் உள்ளன. முன்சக்கரத்தில் 2 காலிபர்கள் கொாண்ட 280மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் ஒற்றை காலிபர் கொண்ட 240மிமீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் லிமிடேட் எடிசன் அறிமுகம்!

புதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் மோட்டார்சைக்கிள் மொத்தமாக 1,000 யூனிட்டுகள் மட்டுமே தயாரிக்கப்பட இருக்கின்றன. இதில், 250 யூனிட்டுகள் இந்தியாவில் லிமிடேட் எடிசனாக விற்பனை செய்யப்பட இருக்கின்றன.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் லிமிடேட் எடிசன் அறிமுகம்!

இங்கிலாந்தில் 4,999 பவுண்ட் விலையில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு செல்கிறது. இந்திய மதிப்பில் ரூ.4.5 லட்சம் மதிப்பு கொண்ட இந்த மோட்டார்சைக்கிள் விண்டேஜ் மோட்டார்சைக்கிள் பிரியர்களையும், சேகரிப்பாளர்களையும் வெகுவாக கவரும்.

Most Read Articles
English summary
Royal Enfield has revealed a new limited edition motorcycle inspired by the World War II model which was used by the British paratroopers, the Flying Flea. The limited edition model is named as the Royal Enfield Classic 500 Pegasus. The limited edition model is based on the iconic RE/WD 125 motorcycle.
Story first published: Tuesday, May 22, 2018, 17:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X