வாடிக்கையாளர்களை ஏமாற்றியதால் நேர்ந்த கதி.. குப்பைக்கு வர தொடங்கிய ராயல் என்பீல்டு பைக்குகள்

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மோசமான நடவடிக்கைகளால் ஆத்திரம் அடைந்த உரிமையாளர்கள், ரூ.2.40 லட்சம் மதிப்பிலான தங்கள் பைக்குகளை, குப்பையில் வீச தொடங்கியுள்ளனர்.

By Arun

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மோசமான நடவடிக்கைகளால் ஆத்திரம் அடைந்த உரிமையாளர்கள், ரூ.2.40 லட்சம் மதிப்பிலான தங்கள் பைக்குகளை, குப்பையில் வீச தொடங்கியுள்ளனர். வெற்று எச்சரிக்கை என எதிர்பார்க்கப்பட்டதற்கு மாறாக, பைக்குகள் குப்பைக்கு வந்ததன் மூலம், ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு கடுமையான எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை காணலாம்.

வாடிக்கையாளர்களை ஏமாற்றியதால் நேர்ந்த கதி.. குப்பைக்கு வர தொடங்கிய ராயல் என்பீல்டு பைக்குகள்

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று ராயல் என்பீல்டு. ராயல் என்பீல்டு நிறுவன மோட்டார் சைக்கிள்களுக்கு இந்தியா மட்டுமல்லாது, உலகின் பல்வேறு நாடுகளிலும் ரசிகர்கள் பட்டாளம் இருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

வாடிக்கையாளர்களை ஏமாற்றியதால் நேர்ந்த கதி.. குப்பைக்கு வர தொடங்கிய ராயல் என்பீல்டு பைக்குகள்

ராயல் என்பீல்டு நிறுவனமானது, கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் என்ற மோட்டார் சைக்கிளை, கடந்த வாரம் இந்தியாவில் லான்ச் செய்தது. இந்திய ராணுவத்துடனான ராயல் என்பீல்டு நிறுவனத்தின் நீண்ட கால உறவை போற்றும் வகையில் இந்த மோட்டார் சைக்கிள்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

வாடிக்கையாளர்களை ஏமாற்றியதால் நேர்ந்த கதி.. குப்பைக்கு வர தொடங்கிய ராயல் என்பீல்டு பைக்குகள்

அதுமட்டுமின்றி முப்படையினரின் சேவையை கௌரவிக்கும் வகையிலான அம்சங்களும், கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் மோட்டார் சைக்கிள்களில் இடம்பெற்றுள்ளன. இதுதவிர ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் எனப்படும் ஏபிஎஸ் வசதி, இந்த மோட்டார் சைக்கிள்களில் ஸ்டாண்டர்டாக வழங்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களை ஏமாற்றியதால் நேர்ந்த கதி.. குப்பைக்கு வர தொடங்கிய ராயல் என்பீல்டு பைக்குகள்

ராயல் என்பீல்டு நிறுவனமானது, அமெரிக்கா உள்பட வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் தனது மோட்டார் சைக்கிள்களில், ஏபிஎஸ் பிரேக் வசதியை வழங்கி வருகிறது. எனினும் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களில் ஏபிஎஸ் வசதி கிடையாது.

வாடிக்கையாளர்களை ஏமாற்றியதால் நேர்ந்த கதி.. குப்பைக்கு வர தொடங்கிய ராயல் என்பீல்டு பைக்குகள்

அந்த குறையை நிவர்த்தி செய்த முதல் மோட்டார் சைக்கிள் என்ற பெருமையை கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் பெறுகிறது. ஆம், ஏபிஎஸ் பிரேக் வசதியுடன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமான முதல் ராயல் என்பீல்டு நிறுவன மோட்டார் சைக்கிள், கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன்தான்.

வாடிக்கையாளர்களை ஏமாற்றியதால் நேர்ந்த கதி.. குப்பைக்கு வர தொடங்கிய ராயல் என்பீல்டு பைக்குகள்

பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் மோட்டார் சைக்கிளின் எக்ஸ் ஷோரூம் விலை 1.62 லட்ச ரூபாய் மட்டுமே. அத்துடன் கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் மோட்டார் சைக்கிள்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகளையும் ராயல் என்பீல்டு உடனடியாக தொடங்கி விட்டது.

வாடிக்கையாளர்களை ஏமாற்றியதால் நேர்ந்த கதி.. குப்பைக்கு வர தொடங்கிய ராயல் என்பீல்டு பைக்குகள்

இந்த சம்பவங்கள் எல்லாம், ராயல் என்பீல்டு பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ராயல் என்பீல்டு பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள்களானது, இரண்டாம் உலகப்போர் எடிசன் பைக்குகள் என குறிப்பிடப்படுகின்றன.

வாடிக்கையாளர்களை ஏமாற்றியதால் நேர்ந்த கதி.. குப்பைக்கு வர தொடங்கிய ராயல் என்பீல்டு பைக்குகள்

இரண்டாம் உலக போர் நடைபெற்ற காலகட்டத்தில், இங்கிலாந்து நாட்டிற்காக, WD/RE 125 என்ற மோட்டார் சைக்கிள்களை ராயல் என்பீல்டு நிறுவனம் உற்பத்தி செய்தது. இங்கிலாந்து நாட்டு படை வீரர்கள், போர் முனையில், WD/RE 125 மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தினர்.

வாடிக்கையாளர்களை ஏமாற்றியதால் நேர்ந்த கதி.. குப்பைக்கு வர தொடங்கிய ராயல் என்பீல்டு பைக்குகள்

இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட WD/RE 125 மோட்டார் சைக்கிள்களை நினைவுபடுத்தும் வகையில்தான், பெகாசஸ் 500 எடிசன் உருவாக்கப்பட்டது. WD/RE 125 மோட்டார் சைக்கிளை அடிப்படையாக கொண்ட பாரம்பரிய டிசைன் அம்சங்கள் பெகாசஸ் 500 எடிசனில் இடம்பெற்றுள்ளன.

வாடிக்கையாளர்களை ஏமாற்றியதால் நேர்ந்த கதி.. குப்பைக்கு வர தொடங்கிய ராயல் என்பீல்டு பைக்குகள்

உலகம் முழுவதும் 1,000 பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என ராயல் என்பீல்டு அறிவித்தது. இதில், இந்தியாவிற்கு 250 மோட்டார் சைக்கிள்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டன. எனவே இந்த மோட்டார் சைக்கிளை சொந்தமாக்கி விட வாடிக்கையாளர்கள் பலப்பரீட்சை நடத்தினர்.

வாடிக்கையாளர்களை ஏமாற்றியதால் நேர்ந்த கதி.. குப்பைக்கு வர தொடங்கிய ராயல் என்பீல்டு பைக்குகள்

ராயல் என்பீல்டு பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிளுக்கான ஆன்லைன் முன்பதிவு கடந்த ஜூலை மாத கடைசியில் நடைபெற்றது. அப்போது இந்தியாவிற்கு என ஒதுக்கப்பட்ட 250 மோட்டார் சைக்கிள்களும் வெறும் 178 வினாடிகளில் விற்று தீர்ந்தன. இது ஒரு புதிய சாதனையாக கருதப்பட்டது.

வாடிக்கையாளர்களை ஏமாற்றியதால் நேர்ந்த கதி.. குப்பைக்கு வர தொடங்கிய ராயல் என்பீல்டு பைக்குகள்

ஆனால் பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்த ஒரு சில வாரங்களிலேயே, கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் மோட்டார் சைக்கிள்களை ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியாவில் லான்ச் செய்து விட்டது. அத்துடன் டெலிவரியையும் தொடங்கி விட்டது.

வாடிக்கையாளர்களை ஏமாற்றியதால் நேர்ந்த கதி.. குப்பைக்கு வர தொடங்கிய ராயல் என்பீல்டு பைக்குகள்

கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் மோட்டார் சைக்கிளானது, தோற்றத்தில் கிட்டத்தட்ட அப்படியே பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிளை போலவே உள்ளது. அதுதவிர கூடுதல் சிறப்பம்சமாக ஏபிஎஸ் பிரேக் வசதி வேறு வழங்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களை ஏமாற்றியதால் நேர்ந்த கதி.. குப்பைக்கு வர தொடங்கிய ராயல் என்பீல்டு பைக்குகள்

இதுதான் பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் மத்தியில் கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிளின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.2.40 லட்சம். ஆனால் கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசனின் எக்ஸ் ஷோரூம் விலை வெறும் ரூ.1.62 லட்சம் மட்டுமே.

வாடிக்கையாளர்களை ஏமாற்றியதால் நேர்ந்த கதி.. குப்பைக்கு வர தொடங்கிய ராயல் என்பீல்டு பைக்குகள்

அதாவது கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசனுடன் ஒப்பிடுகையில், பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிளின் விலை சுமார் 80 ஆயிரம் ரூபாய் அதிகம். எனவே கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் லான்ச் ஆனது முதலே பெகாசஸ் 500 எடிசன் உரிமையாளர்கள் மத்தியில் புகைச்சல் இருந்து கொண்டேதான் இருந்தது.

வாடிக்கையாளர்களை ஏமாற்றியதால் நேர்ந்த கதி.. குப்பைக்கு வர தொடங்கிய ராயல் என்பீல்டு பைக்குகள்

இதனால் ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு சிலர் கடிதம் எழுத தொடங்கினர். ஒரே மாதிரியாக உள்ள கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசனை லான்ச் செய்ததன் மூலம் பெகாசஸ் 500 எடிசன் உரிமையாளர்களை ராயல் என்பீல்டு நிறுவனம் ஏமாற்றி விட்டதாக அவர்கள் கடிதத்தில் குறிப்பிட்டனர்.

வாடிக்கையாளர்களை ஏமாற்றியதால் நேர்ந்த கதி.. குப்பைக்கு வர தொடங்கிய ராயல் என்பீல்டு பைக்குகள்

ஆனால் அவர்களுக்கு எந்த ஒரு தீர்வையும் ராயல் என்பீல்டு வழங்கவில்லை. எனவே ராயல் என்பீல்டு நிறுவனத்தை அவமதிக்கும் விதமாக, பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள்களை, உள்ளூர் நகராட்சிகளின் குப்பை அள்ளும் பணிக்கு வழங்க முடிவெடுத்திருப்பதாக சிலர் பகிரங்கமாக அறிவித்தனர்.

வாடிக்கையாளர்களை ஏமாற்றியதால் நேர்ந்த கதி.. குப்பைக்கு வர தொடங்கிய ராயல் என்பீல்டு பைக்குகள்

வெறும் முடிவோடு நின்று விடுவார்கள் என சிலர் நினைத்திருக்கலாம். ஆனால் இது வெறும் வெற்று எச்சரிக்கை அல்ல என்பதை க்ரூய்ஸர் மோட்டார் சைக்கிள் நிறுவனமான ராயல் என்பீல்டுக்கு நிரூபித்து காட்டியுள்ளார் ஒரு பெகாசஸ் 500 எடிசன் உரிமையாளர்.

வாடிக்கையாளர்களை ஏமாற்றியதால் நேர்ந்த கதி.. குப்பைக்கு வர தொடங்கிய ராயல் என்பீல்டு பைக்குகள்

ஆம், ரூ.2.40 லட்சம் மதிப்பிலான பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிளை உண்மையிலேயே குப்பையில் வீசி, ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார் உரிமையாளர் ஒருவர். பெகாசஸ் 500 எடிசன் குப்பையில் கிடக்கும் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

வாடிக்கையாளர்களை ஏமாற்றியதால் நேர்ந்த கதி.. குப்பைக்கு வர தொடங்கிய ராயல் என்பீல்டு பைக்குகள்

தீரஜ் ஜரூரா என்ற பெகாசஸ் 500 எடிசன் உரிமையாளர்தான், தனது பைக்கை குப்பையில் வீசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் லான்ச் ஆகியுள்ளதால், பெகாசஸ் 500 எடிசன் குப்பை போன்று பயனற்றதாக மாறிவிட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

வாடிக்கையாளர்களை ஏமாற்றியதால் நேர்ந்த கதி.. குப்பைக்கு வர தொடங்கிய ராயல் என்பீல்டு பைக்குகள்

பெகாசஸ் 500 மோட்டார் சைக்கிளானது லிமிடெட் எடிசன் மாடலாக மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது. வேறு எந்த மோட்டார் சைக்கிளிலும் இல்லாத பிரத்யேகமான அம்சங்கள் இதில் இடம்பெற்றிருப்பதாக ராயல் என்பீல்டு நிறுவனம் தெரிவித்தது.

வாடிக்கையாளர்களை ஏமாற்றியதால் நேர்ந்த கதி.. குப்பைக்கு வர தொடங்கிய ராயல் என்பீல்டு பைக்குகள்

ஆனால் அடுத்த ஒரு சில வாரங்களிலேயே, பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிளை போன்றே உள்ள கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசனை ராயல் என்பீல்டு லான்ச் செய்து விட்டது. அதுவும் சுமார் 80 ஆயிரம் ரூபாய் குறைவான விலையில். இதுதவிர ஏபிஎஸ் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

Recommended Video

ஏபிஎஸ் வசதியுடன் கூடிய முதல் ராயல் என்ஃபீல்டு பைக்காக கிளாசிக் 350 சிக்னல்ஸ் மாடல்கள் அறிமுகமானது.
வாடிக்கையாளர்களை ஏமாற்றியதால் நேர்ந்த கதி.. குப்பைக்கு வர தொடங்கிய ராயல் என்பீல்டு பைக்குகள்

எனவே 'தனித்துவம்', 'பிரத்யேகம்' என்ற பெயர்களில் ராயல் என்பீல்டு நிறுவனம் தங்களை ஏமாற்றி விட்டதாக பெகாசஸ் 500 எடிசன் உரிமையாளர்கள் கருதுகின்றனர். இது ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுக்க முடியாது.

வாடிக்கையாளர்களை ஏமாற்றியதால் நேர்ந்த கதி.. குப்பைக்கு வர தொடங்கிய ராயல் என்பீல்டு பைக்குகள்

போதாக்குறைக்கு வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்ட 750 பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள்களில் ஏபிஎஸ் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட 250 பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள்களில் ஏபிஎஸ் பிரேக் வசதி இல்லை. இந்த பிரச்னையை ராயல் என்பீல்டு எப்படி சமாளிக்க போகிறது? என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

Most Read Articles

நீங்கள் மேலே படித்த செய்தி ராயல் என்பீல்டு பெகாசஸ் 500 எடிசன் பைக்கை பற்றியது. ராயல் என்பீல்டு நிறுவனம் சமீபத்தில்தான், பெகாசஸ் 500 எடிசனை ரூ.2.40 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் அறிமுகம் செய்தது. இந்த சூழலில்தான், அதன் உரிமையாளர்கள் புகார் தெரிவிக்க தொடங்கியுள்ளனர். ராயல் என்பீல்டு பெகாசஸ் 500 எடிசனின் படங்கள் இங்கே ஆல்பமாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. அதனை பார்த்து விட்டு, அந்த பைக் குறித்தும், அந்த உரிமையாளர் செய்தது சரியா? என்பது குறித்தும், கமெண்ட் பாக்ஸில் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

English summary
Royal Enfield Classic 500 Pegasus Owner Throws Bike into Garbage. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X