மத்திய அரசின் அதிரடி நடவடிக்கையால் ஏபிஎஸ் மயமாகும் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்கள்..

மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை காரணமாக, ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்கள், அடுத்த மாதம் முதல் ஏபிஎஸ் மயமாகவுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

By Arun

ராயல் என்பீல்டு கிளாசிக் 500, தண்டர்பேர்டு 500, ஹிமாலயன் ஆகிய மோட்டார் சைக்கிள்களின் ஏபிஎஸ் (ABS) வேரியண்ட்கள் அடுத்த மாதம் லான்ச் செய்யப்படவுள்ளன. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தலைவர் ருத்ரதேஜ் சிங், இந்த தகவலை உறுதிபடுத்தியுள்ளார்.

மத்திய அரசின் அதிரடி நடவடிக்கையால் ஏபிஎஸ் மயமாகும் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்கள்..

இதுதவிர இதர ராயல் என்பீல்டு 350 சிசி மோட்டார் சைக்கிள்களும், அடுத்த 4 மாதங்களில், டியூயல் சேனல் ஏபிஎஸ் (Dual-Channel ABS) வசதியை பெறும் என ருத்ரதேஜ் சிங் அறிவித்துள்ளார். புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் அறிமுக விழாவில், இந்த தகவல்கள் வெளியிடப்பட்டது.

மத்திய அரசின் அதிரடி நடவடிக்கையால் ஏபிஎஸ் மயமாகும் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்கள்..

ராயல் என்பீல்டு நிறுவனமானது புதிய கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசனை நேற்று முன் தினம் (ஆகஸ்ட் 28) அறிமுகம் செய்தது. இதன் புனே எக்ஸ் ஷோரூம் விலை 1.62 லட்ச ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்துடனான நீண்ட கால உறவை போற்றும் வகையில், இந்த மாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் அதிரடி நடவடிக்கையால் ஏபிஎஸ் மயமாகும் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்கள்..

இதனிடையே அனைத்து ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களிலும், 2019 ஏப்ரல் மாதத்திற்கு முன்னதாக, டியூயல் சேனல் ஏபிஎஸ் வசதி வழங்கப்பட்டு விடும். ஏனெனில் 125 சிசிக்கு மேற்பட்ட அனைத்து மோட்டார் சைக்கிள்களிலும், ஏபிஎஸ் கட்டாயம் என்ற மத்திய அரசின் உத்தரவு, 2019 ஏப்ரல் 1 முதல் அமலாகிறது.

மத்திய அரசின் அதிரடி நடவடிக்கையால் ஏபிஎஸ் மயமாகும் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்கள்..

ராயல் என்பீல்டு நிறுவனமானது, நன்கு வளர்ச்சியடைந்த வெளிநாட்டு மார்க்கெட்களில், டியூயல் சேனல் ஏபிஎஸ் வசதியுடன் கூடிய மோட்டார் சைக்கிள்களை ஏற்கனவே விற்பனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம்.

மத்திய அரசின் அதிரடி நடவடிக்கையால் ஏபிஎஸ் மயமாகும் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்கள்..

டியூயல் சேனல் ஏபிஎஸ் வசதி வழங்கப்படுவதன் காரணமாக, ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களின் ஸ்டாண்டர்டு மாடல்களின் விலை 25,000 ரூபாய் வரை அதிகரிக்க கூடும். எனினும் ஏபிஎஸ் வசதி, மிகவும் பாதுகாப்பானது என்பதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு வரவேற்பையே பெற்றுள்ளது.

மத்திய அரசின் அதிரடி நடவடிக்கையால் ஏபிஎஸ் மயமாகும் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்கள்..

ராயல் என்பீல்டு கிளாசிக் 500 மோட்டார் சைக்கிளின் பேஸ் மாடலின் (Base model) எக்ஸ் ஷோரூம் விலை 1.85 லட்ச ரூபாய். அதே நேரத்தில் ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு 500 மோட்டார் சைக்கிளின் பேஸ் மாடல், 1.91 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மத்திய அரசின் அதிரடி நடவடிக்கையால் ஏபிஎஸ் மயமாகும் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்கள்..

மறுபக்கம் ராயல் என்பீல்டு ஹிமாலயன் மோட்டார் சைக்கிளின் எக்ஸ் ஷோரூம் விலை 1.68 லட்ச ரூபாய். ஏபிஎஸ் வசதி வழங்கப்படுவதால், வருங்காலத்தில், இந்த மோட்டார் சைக்கிள்களின் விலை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

மத்திய அரசின் அதிரடி நடவடிக்கையால் ஏபிஎஸ் மயமாகும் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்கள்..

இதுதவிர தண்டர்பேர்டு 500எக்ஸ் (Thunderbird 500X) மற்றும் கிளாசிக் 500 மோட்டார் சைக்கிள்களின் பல்வேறு ஸ்பெஷல் எடிசன் மாடல்களிலும், ஏபிஎஸ் வசதியை ராயல் என்பீல்டு நிறுவனம் வழங்கவுள்ளது. இதனால் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள் பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மத்திய அரசின் அதிரடி நடவடிக்கையால் ஏபிஎஸ் மயமாகும் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்கள்..

ராயல் என்பீல்டு நிறுவனமானது தற்போது இந்தியாவில், புல்லட் 350, புல்லட் இஎஸ், கிளாசிக் 350 மற்றும் 500, தண்டர்பேர்டு 350 மற்றும் 500, ஹிமாலயன் உள்ளிட்ட பைக்குகளை விற்பனை செய்து வருகிறது. இதுதவிர கிளாசிக் மற்றும் தண்டர்பேர்டு மோட்டார் சைக்கிள்களின் ஸ்பெஷல் எடிசன்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
English summary
Royal Enfield Classic 500, Thunderbird 500, Himalayan Bike's ABS Variants will be Launched September. Read in Tamil
Story first published: Thursday, August 30, 2018, 11:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X