பிரீமியம் பைக் செக்மெண்டில் ஆதிக்கம் செலுத்தும் ராயல் என்பீல்டு.. புதிய ஆதாரம் வெளியானது..

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டாப் 5 பிரீமியம் பைக்குகளின் பட்டியலில், 3 இடங்களை ராயல் என்பீல்டு நிறுவனம் பிடித்துள்ளது.

By Arun

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டாப் 5 பிரீமியம் பைக்குகளின் பட்டியலில், 3 இடங்களை ராயல் என்பீல்டு நிறுவனம் பிடித்துள்ளது. இதன்மூலம் பிரீமியம் பைக் செக்மெண்டில், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஆதிக்கம் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிரீமியம் பைக் செக்மெண்டில் ஆதிக்கம் செலுத்தும் ராயல் என்பீல்டு.. புதிய ஆதாரம் வெளியானது..

இந்தியாவின் பிரீமியம் பைக் செக்மெண்ட் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து கொண்டே செல்கிறது. பிரீமியம் பைக்குகளை வாங்கும் அளவிற்கு, மக்களின் பொருளாதார நிலை உயர்ந்திருப்பதே இதற்கு காரணம். எனவே பைக் உற்பத்தியாளர்கள், புதுப்புது பிரீமியம் பைக்குகளை அறிமுகம் செய்து கொண்டே வருகின்றனர்.

பிரீமியம் பைக் செக்மெண்டில் ஆதிக்கம் செலுத்தும் ராயல் என்பீல்டு.. புதிய ஆதாரம் வெளியானது..

எனவே தற்போது இந்தியாவின் பிரீமியம் பைக் செக்மெண்டில் ஏராளமான பைக்குகள் கிடைக்கின்றன. இதனால் எது சிறந்த பிரீமியம் பைக்? என்பதில், வாடிக்கையாளர்கள் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது. ஆனால் சிறிதளவும் குழப்பம் அடையவே வேண்டாம்.

பிரீமியம் பைக் செக்மெண்டில் ஆதிக்கம் செலுத்தும் ராயல் என்பீல்டு.. புதிய ஆதாரம் வெளியானது..

நிச்சயமாக ராயல் என்பீல்டுதான், இந்தியாவின் முதன்மையான பிரீமியம் பைக் விற்பனையாளர். பைக் விற்பனை எண்ணிக்கை அடிப்படையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரீமியம் பைக் செக்மெண்டில் அதிகம் விற்பனையாகும் டாப்-5 பைக்குகளின் பட்டியலில், 3 இடங்களை ராயல் என்பீல்டு பிடித்துள்ளது.

பிரீமியம் பைக் செக்மெண்டில் ஆதிக்கம் செலுத்தும் ராயல் என்பீல்டு.. புதிய ஆதாரம் வெளியானது..

ராயல் என்பீல்டு நிறுவனம், கடந்த ஜூலை மாதத்தில் மட்டும், 44,054 கிளாசிக் 350 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. இதன்மூலம் ஜூலை மாதத்தில் அதிகம் விற்பனையான பிரீமியம் செக்மெண்ட் பைக் என்ற பெருமையை, ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பெறுகிறது.

பிரீமியம் பைக் செக்மெண்டில் ஆதிக்கம் செலுத்தும் ராயல் என்பீல்டு.. புதிய ஆதாரம் வெளியானது..

இந்த பட்டியலில் 2வது இடமும் ராயல் என்பீல்டு நிறுவனத்துக்கே கிடைத்துள்ளது. இந்த பெருமையை ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு பெற்று தந்திருக்கும் பைக், புல்லட் 350. ஏனெனில் கடந்த ஜூலை மாதத்தில், 13,016 புல்லட் 350 பைக்குகளை ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

பிரீமியம் பைக் செக்மெண்டில் ஆதிக்கம் செலுத்தும் ராயல் என்பீல்டு.. புதிய ஆதாரம் வெளியானது..

ராயல் என்பீல்டு கிளாசிக் 350, புல்லட் 350 என 2 பைக்குகளிலும், 346 சிசி, லாங் ஸ்டிரோக் இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த 4 ஸ்டிரோக் மோட்டார், அதிகபட்சமாக 19.8 பிஎச்பி பவர், 28 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இந்த இன்ஜின் இணைக்கப்பட்டுள்ளது.

பிரீமியம் பைக் செக்மெண்டில் ஆதிக்கம் செலுத்தும் ராயல் என்பீல்டு.. புதிய ஆதாரம் வெளியானது..

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மற்றும் புல்லட் 350 ஆகிய 2 பைக்குகளையும் பராமரிப்பது மிக எளிதான விஷயமாக பார்க்கப்படுகிறது. எனவே 'லைப்ஸ்டைல்' பைக் வேண்டும் என எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில், இவை இரண்டும் புகழ்பெற்று விளங்குகின்றன.

பிரீமியம் பைக் செக்மெண்டில் ஆதிக்கம் செலுத்தும் ராயல் என்பீல்டு.. புதிய ஆதாரம் வெளியானது..

ராயல் என்பீல்டு இரட்டையர்களுக்கு பிறகு, சப்-200 சிசி பல்சர் ரேஞ்ச் மூலமாக, மூன்றாவது இடத்தை கைப்பற்றியுள்ளது பஜாஜ். ஆனால் அனைத்து 180 சிசி மற்றும் 200 சிசி பல்சர் மாடல்களின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையை கூட்டினாலும் கூட வெறும் 8,897 மட்டுமே வருகிறது.

பிரீமியம் பைக் செக்மெண்டில் ஆதிக்கம் செலுத்தும் ராயல் என்பீல்டு.. புதிய ஆதாரம் வெளியானது..

இருந்தாலும் பல்சர் 220 சிசி பைக் மூலம் 4வது இடத்தை கைப்பற்றியதால், மீண்டும் ஒரு முறை பட்டியலில் இடம்பிடிக்கிறது பஜாஜ். பட்டியலில் 5வது இடத்தை பிடித்திருப்பது ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு 350. கடந்த ஜூலை மாதத்தில் மொத்தம் 6,154 தண்டர்பேர்டு 350 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

பிரீமியம் பைக் செக்மெண்டில் ஆதிக்கம் செலுத்தும் ராயல் என்பீல்டு.. புதிய ஆதாரம் வெளியானது..

எப்படி பார்த்தாலும், பிரீமியம் பைக் செக்மெண்டில் ராயல் என்பீல்டு நிறுவனம்தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஏனெனில் டாப் 5 பட்டியலில் 3 இடங்களை ராயல் என்பீல்டு நிறுவனமே கைப்பற்றியுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
English summary
Royal Enfield Dominates in India’s Premium Bike Segment. Read in Tamil
Story first published: Friday, August 31, 2018, 17:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X