ஐ யம் பேக்.. யானை என கிண்டலடித்த பஜாஜ் டோமினாருக்கு முதல் முறையாக பதிலடி கொடுத்தது ராயல் என்பீல்டு

யானை என கிண்டல் செய்த பஜாஜ் டோமினார் பைக்கிற்கு, ராயல் என்பீல்டு நிறுவனம் முதல் முறையாக தக்க பதிலடி கொடுத்துள்ளது.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் அட்வென்ஜர்-டூரர் (Adventurer-tourer) மோட்டார் சைக்கிள் என்ற பெருமையை ஹிமாலயன் பெறுகிறது. அதே நேரத்தில் இன்றைய தேதியில், பஜாஜ் நிறுவனத்தில் இருந்து வெளிவரும் மிகவும் சக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிள் என்ற பெருமையை டோமினார் பெறுகிறது.

ஐ யம் பேக்.. யானை என கிண்டலடித்த பஜாஜ் டோமினாருக்கு முதல் முறையாக பதிலடி கொடுத்தது ராயல் என்பீல்டு

ராயல் என்பீல்டு ஹிமாலயன் மற்றும் பஜாஜ் டோமினார் ஆகிய 2 மோட்டார் சைக்கிள்களும், இந்திய மார்க்கெட்டில் கடந்த 2016ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டன. அப்போது முதலே இவ்விரு மோட்டார் சைக்கிள்களுக்கும் கடுமையான போட்டி நிலவி வருகிறது.

ஐ யம் பேக்.. யானை என கிண்டலடித்த பஜாஜ் டோமினாருக்கு முதல் முறையாக பதிலடி கொடுத்தது ராயல் என்பீல்டு

குறிப்பாக பஜாஜ் டோமினார் மோட்டார் சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டபோது, ராயல் என்பீல்டு நிறுவன மோட்டார் சைக்கிள்களை கிண்டலடிக்கும் வகையில் வரிசையாக விளம்பரங்கள் வெளியிடப்பட்டது நாம் அனைவரும் அறிந்ததே.

ஐ யம் பேக்.. யானை என கிண்டலடித்த பஜாஜ் டோமினாருக்கு முதல் முறையாக பதிலடி கொடுத்தது ராயல் என்பீல்டு

இதில், ராயல் என்பீல்டு நிறுவன மோட்டார் சைக்கிள்கள் யானைகளாக சித்தரிக்கப்பட்டிருந்தன. யானைகள் போல் மந்தமாக செயல்படும் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களை காட்டிலும் டோமினார் மோட்டார் சைக்கிள்களே மிக சிறந்தது என சொல்லாமல் சொல்லியது பஜாஜ் நிறுவனம்.

ஐ யம் பேக்.. யானை என கிண்டலடித்த பஜாஜ் டோமினாருக்கு முதல் முறையாக பதிலடி கொடுத்தது ராயல் என்பீல்டு

இதனால் ராயல் என்பீல்டு நிறுவன மோட்டார் சைக்கிள் ஆர்வலர்கள் கடுமையான ஆத்திரம் அடைந்தனர். அவர்களுக்கும், பஜாஜ் நிறுவன மோட்டார் சைக்கிள் ஆர்வலர்களுக்கும் இடையே பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் கருத்து மோதல்களும் உண்டாயின.

ஐ யம் பேக்.. யானை என கிண்டலடித்த பஜாஜ் டோமினாருக்கு முதல் முறையாக பதிலடி கொடுத்தது ராயல் என்பீல்டு

இது தொடர்பான மீம்ஸ்களும் றெக்கை கட்டி பறந்தன. அறிமுகம் செய்யப்பட்டபோது, ஒவ்வொரு மாதமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டோமினார் மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்ய முடியும் என பஜாஜ் நிறுவனம் கருதியது. ஆனால் அது நடக்கவில்லை.

ஐ யம் பேக்.. யானை என கிண்டலடித்த பஜாஜ் டோமினாருக்கு முதல் முறையாக பதிலடி கொடுத்தது ராயல் என்பீல்டு

மாதத்திற்கு சுமார் 2,200 டோமினார் மோட்டார் சைக்கிள்களை மட்டுமே பஜாஜ் நிறுவனத்தால் விற்பனை செய்ய முடிந்தது. ஒரு கட்டத்தில் இந்த எண்ணிக்கையானது வெறும் 1,500ஆகவும் குறைந்தது. இதனால் பஜாஜ் நிறுவனம் அதிர்ச்சியடைந்தது.

ஐ யம் பேக்.. யானை என கிண்டலடித்த பஜாஜ் டோமினாருக்கு முதல் முறையாக பதிலடி கொடுத்தது ராயல் என்பீல்டு

இந்த அதிர்ச்சியில் இருந்து பஜாஜ் நிறுவனம் மீள்வதற்குள் அதன் தலையில் அடுத்த பேரிடி இறங்கியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் வெறும் 1,095 டோமினார் மோட்டார் சைக்கிள்களை மட்டுமே பஜாஜ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

ஐ யம் பேக்.. யானை என கிண்டலடித்த பஜாஜ் டோமினாருக்கு முதல் முறையாக பதிலடி கொடுத்தது ராயல் என்பீல்டு

ஆனால் அதே மாதத்தில் 1,140 ஹிமாலயன் மோட்டார் சைக்கிள்களை ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை செய்துள்ளது. விற்பனை எண்ணிக்கையில் பஜாஜ் டோமினார் மோட்டார் சைக்கிளை, ராயல் என்பீல்டு ஹிமாலயன் முந்தியிருப்பது இதுவே முதல் முறை.

ஐ யம் பேக்.. யானை என கிண்டலடித்த பஜாஜ் டோமினாருக்கு முதல் முறையாக பதிலடி கொடுத்தது ராயல் என்பீல்டு

பஜாஜ் டோமினார் மோட்டார் சைக்கிளை முதல் முறையாக ஓவர் டேக் செய்திருப்பதால், ராயல் என்பீல்டு நிறுவனம் மகிழ்ச்சியடைந்துள்ளது. இந்த புள்ளி விபரங்களை, இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

ஐ யம் பேக்.. யானை என கிண்டலடித்த பஜாஜ் டோமினாருக்கு முதல் முறையாக பதிலடி கொடுத்தது ராயல் என்பீல்டு

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் அட்வென்ஜர்-டூரர் மோட்டார் சைக்கிள் என்பதால், ஹிமாலயனும் விற்பனையில் சக்கை போடு போடும் என்றுதான் ஆரம்பத்தில் அனைவராலும் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

ஐ யம் பேக்.. யானை என கிண்டலடித்த பஜாஜ் டோமினாருக்கு முதல் முறையாக பதிலடி கொடுத்தது ராயல் என்பீல்டு

ஆனால் உற்பத்தியில் தொடர்ச்சியாக நிலவிய சில பிரச்னைகள் காரணமாக, அதன் விற்பனை கணிசமாக குறைந்து விட்டது. என்றாலும் எப்படியோ ஒரு வழியாக போராடி, பஜாஜ் டோமினார் மோட்டார் சைக்கிளை முதல் முறையாக வீழ்த்தி சாதித்து காட்டியுள்ளது ராயல் என்பீல்டு ஹிமாலயன்.

ஐ யம் பேக்.. யானை என கிண்டலடித்த பஜாஜ் டோமினாருக்கு முதல் முறையாக பதிலடி கொடுத்தது ராயல் என்பீல்டு

ஆனால் ஹிமாலயன் மோட்டார் சைக்கிளின் உடன்பிறப்பான ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மோட்டார் சைக்கிளுக்கு நேரடி போட்டியாகதான் டோமினார் மோட்டார் சைக்கிளை பஜாஜ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஐ யம் பேக்.. யானை என கிண்டலடித்த பஜாஜ் டோமினாருக்கு முதல் முறையாக பதிலடி கொடுத்தது ராயல் என்பீல்டு

இந்த சூழலில், பஜாஜ் டோமினார் மோட்டார் சைக்கிளின் இந்த சரிவானது தற்காலிகமானதுதான் என ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். ஏனெனில் டோமினார் பைக்கின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை இந்திய மார்க்கெட்டில் களமிறக்கும் முயற்சிகளில் பஜாஜ் நிறுவனம் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஐ யம் பேக்.. யானை என கிண்டலடித்த பஜாஜ் டோமினாருக்கு முதல் முறையாக பதிலடி கொடுத்தது ராயல் என்பீல்டு

பஜாஜ் டோமினார் ஃபேஸ்லிஃப்ட் மோட்டார் சைக்கிள்களை சோதனை செய்வது போல் அவ்வப்போது வெளியான புகைப்படங்கள், அந்த தகவலை உறுதி செய்வது போல் உள்ளன. எனவே கூடிய விரைவில், அப்டேட் செய்யப்பட்ட புதிய பஜாஜ் டோமினார் மோட்டார் சைக்கிளை நாம் எதிர்பார்க்கலாம்.

ஐ யம் பேக்.. யானை என கிண்டலடித்த பஜாஜ் டோமினாருக்கு முதல் முறையாக பதிலடி கொடுத்தது ராயல் என்பீல்டு

புதிய பஜாஜ் டோமினார் மோட்டார் சைக்கிளில், ஏராளமான அப்டேட்கள் செய்யப்படுவதுடன், ட்யூயல் சேனல் ஏபிஎஸ், இரட்டை சைலென்சர் உள்ளிட்ட கூடுதல் வசதிகள் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டு வருகிறது.

ஐ யம் பேக்.. யானை என கிண்டலடித்த பஜாஜ் டோமினாருக்கு முதல் முறையாக பதிலடி கொடுத்தது ராயல் என்பீல்டு

ஆனால் இன்ஜின் மாற்றம் செய்யப்படாமல், அதே 373.3 சிசி, லிக்விட் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின்தான் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 34 பிஎச்பி பவர் மற்றும் 35 என்எம் டார்க் திறனை உருவாக்கும் சக்தி வாய்ந்தது.

ஐ யம் பேக்.. யானை என கிண்டலடித்த பஜாஜ் டோமினாருக்கு முதல் முறையாக பதிலடி கொடுத்தது ராயல் என்பீல்டு

ராயல் என்பீல்டு ஹிமாலயன் மற்றும் பஜாஜ் டோமினார் ஆகியவற்றுக்கு இடையே விற்பனையில் இப்படி கடுமையான போட்டி நிலவி வரும் சூழலில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜாவா, இந்திய மார்க்கெட்டில் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

ஐ யம் பேக்.. யானை என கிண்டலடித்த பஜாஜ் டோமினாருக்கு முதல் முறையாக பதிலடி கொடுத்தது ராயல் என்பீல்டு

ஜாவா நிறுவனத்தின் 300 சிசி மற்றும் 350 சிசி மோட்டார் சைக்கிள்கள் இந்தியாவில் வெகு விரைவாக லான்ச் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜாவா மோட்டார் சைக்கிள்களுக்கு டீலர்ஷிப்களில் ரகசியமாக முன்பதிவு நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐ யம் பேக்.. யானை என கிண்டலடித்த பஜாஜ் டோமினாருக்கு முதல் முறையாக பதிலடி கொடுத்தது ராயல் என்பீல்டு

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 மாடலை குறி வைத்தே புதிய ஜாவா மோட்டார் சைக்கிள்கள் களமிறக்கப்படுகின்றன. ஜாவாவின் ரீ என்ட்ரி, ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்.

Most Read Articles

2018 பஜாஜ் டோமினார் 400 பைக்கின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

English summary
Royal Enfield Himalayan Beats The Bajaj Dominar In Sales Figures For The First Time. Read in Tamil
Story first published: Friday, November 9, 2018, 19:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X