அப்படிபோடு... 830சிசி மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்துகிறது ராயல் என்ஃபீல்டு!

டிரையம்ஃப் பாபர் மோட்டார்சைக்கிள் ஸ்டைல் வடிவமைக்கப்பட்ட புத்தம் புதிய பிரம்மாண்ட க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிளை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பதாக ஆட்டோகார் புரோ தளம் செய்தி வெளியிட்டு இ

சில தினங்களில் 650சிசி மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்ய இருக்கும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம், அடுத்து 830சிசி மோட்டார்சைக்கிளையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

அப்படிபோடு... 830சிசி மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்துகிறது ராயல் என்ஃபீல்டு!

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் என்றாலே பிரம்மாண்டமான தோற்றம்தான் நினைவுக்கு வரும். இந்த நிலையில், பிரம்மாண்டத்திற்கு எல்லாம் பிரம்மாண்டமாக புதிய மோட்டார்சைக்கிள் மாடலை அந்நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அப்படிபோடு... 830சிசி மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்துகிறது ராயல் என்ஃபீல்டு!

டிரையம்ஃப் பாபர் மோட்டார்சைக்கிள் ஸ்டைல் வடிவமைக்கப்பட்ட புத்தம் புதிய பிரம்மாண்ட க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிளை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பதாக ஆட்டோகார் புரோ தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. மேலும், இந்த மோட்டார்சைக்கிளில் புத்தம் புதிய 830சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது.

அப்படிபோடு... 830சிசி மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்துகிறது ராயல் என்ஃபீல்டு!

இந்த புதிய 830சிசி எஞ்சினை அமெரிக்காவை சேர்ந்த போலரிஸ் நிறுவனத்துடன் இணைந்து ராயல் என்ஃபீல்டு உருவாக்கி இருப்பதாகவும் அந்த தகவல் கூறுகிறது. அதாவது, போலரிஸ் நிறுவனத்தின் கீழ் செயல்படும் இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் மாடல்களில் பயன்படுத்தப்படும் எஞ்சின் அடிப்படையில் இந்த எஞ்சன் உருவாக்கப்பட்டு இருக்கும் என கருதப்படுகிறது.

அப்படிபோடு... 830சிசி மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்துகிறது ராயல் என்ஃபீல்டு!

இங்கிலாந்தில் உள்ள போலரிஸ் மற்றும் ராயல் என்ஃபீல்டு நிறுவனங்களின் ஆராய்ச்சி மேம்பாட்ட மையங்கள் இணைந்து இந்த புதிய 834சிசி எஞ்சினை உருவாக்கி இருப்பதாகவும் தெரிகிறது. இந்த புதிய எஞ்சின் லிக்யூடு கூல்டு சிஸ்டத்தை பெற்றிருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 80 முதல் 90 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும்.

அப்படிபோடு... 830சிசி மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்துகிறது ராயல் என்ஃபீல்டு!

வரும் 8ந் தேதி இத்தாலியில் உள்ள மிலன் நகரில் துவங்க இருக்கும் இஐசிஎம்ஏ என்ற சர்வதேச மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் இந்த புதிய ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அப்படிபோடு... 830சிசி மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்துகிறது ராயல் என்ஃபீல்டு!

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஐஷர் மற்றும் போலரிஸ் நிறுவனங்கள் கூட்டணி அமைத்து மல்டிக்ஸ் என்ற வாகனத்தை தயாரித்து வந்தது. ஆனால், அதற்கு போதிய வரவேற்பு இல்லாததால், இந்த கூட்டணி முடிவுக்கு வந்தது.

அப்படிபோடு... 830சிசி மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்துகிறது ராயல் என்ஃபீல்டு!

எனினும், ராயல் என்ஃபீல்டு மற்றும் போலரிஸ் நிறுவனங்களுக்கு இடையிலான எஞ்சின் தயாரிப்பு திட்டம் தொடர்ந்து வெற்றிகரமாக அமைந்துள்ளதாகவும் கருதப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த இஐசிஎம்ஏ மோட்டார்சைக்கிள் கண்காட்சியில்தான் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் 650 மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

அப்படிபோடு... 830சிசி மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்துகிறது ராயல் என்ஃபீல்டு!

இந்த நிலையில், இந்த ஆண்டு 834சிசி திறன் கொண்ட தனது மிக சக்திவாய்ந்த மோட்டா்சைக்கிளை ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்ய இருப்பது பெரும் ஆவலைத் தூண்டி இருக்கிறது. இந்த புதிய மோட்டார்சைக்கிளும் உலக அளவில் விற்பனைக்கு செல்லும் மாடலாக இருக்கும்.

அப்படிபோடு... 830சிசி மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்துகிறது ராயல் என்ஃபீல்டு!

பிரிமீயம் ரகத்தில் விலை குறைவான மாடலாக நிலைநிறுத்துவதற்கான வாய்ப்புதள் உள்ளன. இந்த மோட்டார்சைக்கிள் உருவாக்கப் பணிகள் வெற்றிகரமாக அமைந்தால், அடுத்த ஆண்டு பிற்பாதியில் இந்தியாவில் எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
English summary
Royal Enfield to unveil 830cc Motorcycle at EICMA 2018
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X