இந்தியாவின் பல்சர் பைக் மூலம் பாகிஸ்தானை முட்டாளாக்கிய சீனா.. என்னடா இது எதிரிக்கு வந்த சோதனை..

இந்தியாவின் பஜாஜ் பல்சர் ஆர்எஸ் 200 பைக் மூலம் பாகிஸ்தான் மக்களை சீனா முட்டாளாக்கி வருகிறது. பாகிஸ்தானில் அரங்கேறி வரும் இந்த வேடிக்கையான சம்பவம் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

By Arun

இந்தியாவின் பஜாஜ் பல்சர் ஆர்எஸ் 200 பைக் மூலம் பாகிஸ்தான் மக்களை சீனா முட்டாளாக்கி வருகிறது. பாகிஸ்தானில் அரங்கேறி வரும் இந்த வேடிக்கையான சம்பவம் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் பல்சர் பைக் மூலம் பாகிஸ்தான் மக்களை முட்டாளாக்கிய சீனா.. இதை எல்லாமா நம்புவாங்க?

உலகம் முழுவதும் விற்பனையில் சக்கை போடு போட்டு வரும் கார் மற்றும் பைக்குகளை, சில சீன நிறுவனங்கள் அப்படியே காப்பி அடித்து, பல்வேறு நாடுகளில் விற்பனை செய்கின்றன. மாருதி 800 முதல் ரோல்ஸ் ராய்ஸ் வரையிலான பல்வேறு கார்களை சீன நிறுவனங்கள் காப்பி அடித்துள்ளன.

இந்தியாவின் பல்சர் பைக் மூலம் பாகிஸ்தான் மக்களை முட்டாளாக்கிய சீனா.. இதை எல்லாமா நம்புவாங்க?

இந்த வரிசையில் புதிதாக இணைந்திருப்பது இந்தியாவின் பஜாஜ் பல்சர் ஆர்எஸ் 200. பஜாஜ் பல்சர் ஆர்எஸ் 200 பைக் மாடலை சீன நிறுவனம் ஒன்று அப்படியே காப்பியடித்து, பாகிஸ்தானில் விற்பனை செய்து வருகிறது. ஆனால் இந்த பைக்கிற்கு வெறும் 1,500 கிலோ மீட்டர்கள் மட்டுமே வாரண்டி கொடுக்கப்படுகிறது!!

இந்தியாவின் பல்சர் பைக் மூலம் பாகிஸ்தான் மக்களை முட்டாளாக்கிய சீனா.. இதை எல்லாமா நம்புவாங்க?

பஜாஜ் பல்சர் ஆர்எஸ் 200 பைக், இந்தியாவில் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக திகழ்கிறது. இந்த பைக் இந்தியாவில் 1.26 லட்சம் முதல் 1.38 லட்ச ரூபாய் வரையிலான பெங்களூரு எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவின் பல்சர் பைக் மூலம் பாகிஸ்தான் மக்களை முட்டாளாக்கிய சீனா.. இதை எல்லாமா நம்புவாங்க?

இந்தியாவில் மொத்தம் 2 வேரியண்ட்கள் மற்றும் 3 வண்ணங்களில் பஜாஜ் பல்சர் ஆர்எஸ் 200 பைக் விற்பனையாகி வருகிறது. இந்த பைக்கின் மாடலைதான் சீன நிறுவனம் அப்படியே காப்பி அடித்து, பாகிஸ்தானில் கல்லா கட்டி வருகிறது.

இந்தியாவின் பல்சர் பைக் மூலம் பாகிஸ்தான் மக்களை முட்டாளாக்கிய சீனா.. இதை எல்லாமா நம்புவாங்க?

இதற்கு சிக்மா லயன் 150 என பெயரிடப்பட்டுள்ளது. சீன பிராண்டான ஜோங்ஷெங் மூலம் சிக்மா லயன் 150 உற்பத்தி செய்யப்படுகிறது. சிக்மா லயன் 150 பைக் ஏற்றுமதி செய்யப்பட்டு, சிக்மா மோட்டார் சைக்கிள் மூலம் பாகிஸ்தானில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவின் பல்சர் பைக் மூலம் பாகிஸ்தான் மக்களை முட்டாளாக்கிய சீனா.. இதை எல்லாமா நம்புவாங்க?

சிக்மா லயன் 150 பைக்கில், 150 சிசி, லிக்விட் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளதாம். 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இந்த இன்ஜின் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் சிக்மா லயன் 150 பைக்கின் இன்ஜின் வெளிப்படுத்தும் பவர் மற்றும் டார்க் குறித்த தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இந்தியாவின் பல்சர் பைக் மூலம் பாகிஸ்தான் மக்களை முட்டாளாக்கிய சீனா.. இதை எல்லாமா நம்புவாங்க?

சிக்மா லயன் 150 பைக்கில், செமி அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் பொருத்தப்பட்டுள்ளது. பஜாஜ் பல்சர் ஆர்எஸ் 200 பைக்கின் கலர் ஸ்கீம் கூட சிக்மா லயன் 150 பைக்கில் அப்படியே காப்பிடியக்கப்பட்டுள்ளது. எனினும் சிக்மா லயன் 150 பைக் 4 வண்ண ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

இந்தியாவின் பல்சர் பைக் மூலம் பாகிஸ்தான் மக்களை முட்டாளாக்கிய சீனா.. இதை எல்லாமா நம்புவாங்க?

சிக்மா லயன் 150 பைக்கின் பல்வேறு அம்சங்கள் பஜாஜ் பல்சர் ஆர்எஸ் 200 பைக்குடன் அப்படியே ஒத்துப்போகிறது. ஆனால் பஜாஜ் பல்சர் ஆர்எஸ் 200 பைக்கில் உள்ள ஏபிஎஸ் பிரேக் வசதி, சிக்மா லயன் 150 பைக்கில் இல்லை. சிக்மா லயன் 150 பைக்கின் மொத்த எடை 130 கிலோ.

இந்தியாவின் பல்சர் பைக் மூலம் பாகிஸ்தான் மக்களை முட்டாளாக்கிய சீனா.. இதை எல்லாமா நம்புவாங்க?

இந்திய மதிப்பில் 1.58 லட்சம் ரூபாய் விலையில், சிக்மா லயன் 150 பைக் பாகிஸ்தானில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 140 கிலோ மீட்டர்கள். ஆனால் பைக்கிற்கு வழங்கப்பட்டுள்ள வாரண்டி வெறும் 1,500 கிலோ மீட்டர்கள்தான்!!

இந்தியாவின் பல்சர் பைக் மூலம் பாகிஸ்தான் மக்களை முட்டாளாக்கிய சீனா.. இதை எல்லாமா நம்புவாங்க?

அதாவது இந்த பைக்கை எடுத்து கொண்டு, டெல்லியில் இருந்து மும்பை வரை ஒரு முறை சென்றாலே, அதன் வாரண்டி முடிவுக்கு வந்துவிடும்!! இந்தியாவில் பஜாஜ் பல்சர் ஆர்எஸ் 200 பைக்கிற்கு 2 ஆண்டுகள் ஸ்டாண்டர்டு வாரண்டி வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Sigma Lion 150 copycat of India’s Pulsar RS 200 sold in Pakistan. Read in tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X