அட நீங்களுமா? அனல் பறக்கும் களத்தை மேலும் சூடுபிடிக்க வைத்த பியாஜியோ நிறுவனத்தின் அறிவிப்பு..

இந்திய மார்க்கெட்டில், போட்டி மிக கடுமையாக இருக்கும் சூழலில், எலக்ட்ரிக் வாகனங்களை களமிறக்க, இத்தாலியை சேர்ந்த பியாஜியோ நிறுவனமும் திட்டமிட்டு வருகிறது.

By Arun

இந்திய மார்க்கெட்டில், போட்டி மிக கடுமையாக இருக்கும் சூழலில், எலக்ட்ரிக் வாகனங்களை களமிறக்க, இத்தாலியை சேர்ந்த பியாஜியோ நிறுவனமும் திட்டமிட்டு வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அட நீங்களுமா? அனல் பறக்கும் களத்தை மேலும் சூடுபிடிக்க வைத்த பியாஜியோ நிறுவனத்தின் அறிவிப்பு..

பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டே வருகிறது. அத்துடன் பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் வெளியிடும் புகை சுற்றுச்சூழலை அதிகளவில் மாசுபடுத்துகிறது. இந்த 2 பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வாக இருப்பது எலக்ட்ரிக் வாகனங்கள்தான்.

அட நீங்களுமா? அனல் பறக்கும் களத்தை மேலும் சூடுபிடிக்க வைத்த பியாஜியோ நிறுவனத்தின் அறிவிப்பு..

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, அவை சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் மாசுபாடு காரணமாக, எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற பொதுமக்கள் மத்தியில் அதிக ஆர்வம் நிலவி வருகிறது. எனவே பல முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றன.

அட நீங்களுமா? அனல் பறக்கும் களத்தை மேலும் சூடுபிடிக்க வைத்த பியாஜியோ நிறுவனத்தின் அறிவிப்பு..

இத்தாலியை சேர்ந்த மோட்டார் வாகன உற்பத்தியாளரான பியாஜியோ நிறுவனமும், இந்திய மார்க்கெட்டில் மிக விரைவில், எலக்ட்ரிக் வாகனங்களை லான்ச் செய்ய திட்டமிட்டு வருகிறது. பியாஜியோ டூவீலர்ஸ் நிறுவனத்தின் இந்திய வணிக பிரிவு தலைவர் ஆஷிஸ் யாக்மி இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

அட நீங்களுமா? அனல் பறக்கும் களத்தை மேலும் சூடுபிடிக்க வைத்த பியாஜியோ நிறுவனத்தின் அறிவிப்பு..

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜிங் வசதி போன்ற கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டியுள்ளது. எனவே அது தொடர்பாகவும், எலக்ட்ரிக் வாகன மார்க்கெட் தொடர்பாகவும் ஆய்வு செய்யும் பணியில், பியாஜியோ நிறுவனம் தற்போது ஈடுபட்டு வருகிறது.

அட நீங்களுமா? அனல் பறக்கும் களத்தை மேலும் சூடுபிடிக்க வைத்த பியாஜியோ நிறுவனத்தின் அறிவிப்பு..

இதுகுறித்து ஆஷிஸ் யாக்மி கூறுகையில், ''டூ வீலர்கள் மற்றும் 4 வீலர்களுக்கான இந்த டெக்னாலஜியுடன் நாங்கள் தற்போது தயாராக உள்ளோம். ஆனால் அத்தகைய வாகனங்களை இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்வதற்கான நிபந்தனைகளுக்கான நாங்கள் காத்து கொண்டிருக்கிறோம்'' என்றார்.

அட நீங்களுமா? அனல் பறக்கும் களத்தை மேலும் சூடுபிடிக்க வைத்த பியாஜியோ நிறுவனத்தின் அறிவிப்பு..

கோவையில் ஒரு புதிய ஷோரூமை திறந்து வைக்க வந்தபோது, இந்த தகவல்களை ஆஷிஸ் யாக்மி வெளியிட்டார். பியாஜியோ நிறுவனத்திற்கு தற்போது நாடு முழுவதும் 200 டீலர்ஷிப்கள் உள்ளன. இந்த எண்ணிக்கையை 300ஆக அதிகரிக்கவும், பியாஜியோ நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

அட நீங்களுமா? அனல் பறக்கும் களத்தை மேலும் சூடுபிடிக்க வைத்த பியாஜியோ நிறுவனத்தின் அறிவிப்பு..

பியாஜியோ நிறுவனம் தற்போது இந்தியா மார்க்கெட்டில், வெஸ்பா உள்ளிட்ட ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. இதில், வெஸ்பா ஸ்கூட்டரின் விற்பனை சக்கை போடு போட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அட நீங்களுமா? அனல் பறக்கும் களத்தை மேலும் சூடுபிடிக்க வைத்த பியாஜியோ நிறுவனத்தின் அறிவிப்பு..

இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸூகி, 2020ம் ஆண்டிற்குள் தனது முதல் எலக்ட்ரிக் வாகனத்தை லான்ச் செய்வது குறித்து, அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. வேகன் ஆர் காரின் எலக்ட்ரிக் வெர்ஷன்தான் மாருதி சுஸூகி நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் வாகனம்.

அட நீங்களுமா? அனல் பறக்கும் களத்தை மேலும் சூடுபிடிக்க வைத்த பியாஜியோ நிறுவனத்தின் அறிவிப்பு..

மாருதி நிறுவனத்தின் பார்ட்னரான சுஸூகி நிறுவனமும் தனியாக இந்திய மார்க்கெட்டில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் மோட்டார் சைக்கிள்களை களமிறக்க திட்டமிட்டு வருகிறது. அதிநவீன வசதிகளுடன் கூடிய எலக்ட்ரிக் டூவீலரை வழங்க சுஸூகி நிறுவனத்தின் இன்ஜினியர்கள் மெனக்கெட்டு வருகின்றனர்.

அட நீங்களுமா? அனல் பறக்கும் களத்தை மேலும் சூடுபிடிக்க வைத்த பியாஜியோ நிறுவனத்தின் அறிவிப்பு..

இப்படி பல்வேறு நிறுவனங்களும், இந்திய எலக்ட்ரிக் வாகன மார்க்கெட்டை பிடிக்க, கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகின்றன. இந்த சூழலில்தான், பியாஜியோ நிறுவனமும் இந்திய மார்க்கெட்டில், எலக்ட்ரிக் வாகனங்களை களமிறக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

Most Read Articles
மேலும்... #பியாஜியோ #piaggio
English summary
Soon, Piaggio will Launch Electric Vehicle in India. Read in Tamil
Story first published: Tuesday, July 24, 2018, 19:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X