இந்தியாவின் ராயல் என்பீல்டு மீதான கொரிய இளைஞரின் காதல்.. 51 ஆயிரம் கிமீ பயணித்த உருக்கமான கதை..

தென் கொரிய இளைஞர் ஒருவர் பிஎம்டபிள்யூ பைக்கை விற்பனை செய்து, அதன்மூலம் கிடைத்த பணத்தில் இந்தியாவின் ராயல் என்பீல்டு பைக்கை வாங்கியுள்ளார்.

By Arun

தென் கொரிய இளைஞர் ஒருவர் பிஎம்டபிள்யூ பைக்கை விற்பனை செய்து, அதன்மூலம் கிடைத்த பணத்தில் இந்தியாவின் ராயல் என்பீல்டு பைக்கை வாங்கியுள்ளார். அந்த பைக்கில் 51 ஆயிரம் கிலோ மீட்டர் சாகச பயணம் மேற்கொண்ட அவரின் உருக்கமான கதையை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

இந்தியாவின் ராயல் என்பீல்டு மீதான கொரிய இளைஞரின் காதல்.. 51 ஆயிரம் கிமீ பயணித்த உருக்கமான கதை..

இந்தியாவின் ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் ஆங் சங்மின் (காஸே). 36 வயதாகும் காஸே, தென் கொரிய நாட்டை சேர்ந்தவர்.

இந்தியாவின் ராயல் என்பீல்டு மீதான கொரிய இளைஞரின் காதல்.. 51 ஆயிரம் கிமீ பயணித்த உருக்கமான கதை..

இந்த கதை தொடங்கியது 2009ம் ஆண்டில். அப்போது 3 மாத பயணமாக இந்தியா வந்திருந்தார் காஸே. அந்த சமயத்தில்தான் அவர் ராயல் என்பீல்டு பைக்குகள் குறித்து கேள்விபட்டிருக்கிறார். ராயல் என்பீல்டு பைக் ஓட்டியபோது கிடைத்த அனுபவம், அவரது ஆர்வத்தை தூண்டியது.

இந்தியாவின் ராயல் என்பீல்டு மீதான கொரிய இளைஞரின் காதல்.. 51 ஆயிரம் கிமீ பயணித்த உருக்கமான கதை..

சொந்தமாக ராயல் என்பீல்டு பைக் வாங்கி விட வேண்டும் என முடிவு செய்து கொண்டார் காஸே. பின்னர் 3 மாத பயணம் முடிந்து, தென் கொரியா திரும்பி விட்டார். ஆனால் ராயல் என்பீல்டு பைக் வாங்க வேண்டும் என்ற ஆசையை விடவில்லை.

இந்தியாவின் ராயல் என்பீல்டு மீதான கொரிய இளைஞரின் காதல்.. 51 ஆயிரம் கிமீ பயணித்த உருக்கமான கதை..

தென் கொரியாவில் ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு அவ்வளவாக டீலர்ஷிப்கள் இல்லை. ஒரு வழியாக 2013ம் ஆண்டு ஜுலை மாதம் ஒரு டீலரை கண்டறிந்தார் காஸே. அவர் மூலமாக ராயல் என்பீல்டு பிராண்ட் நியூ கிளாசிக் 500 பைக்கை காஸே வாங்கி விட்டார்.

இந்தியாவின் ராயல் என்பீல்டு மீதான கொரிய இளைஞரின் காதல்.. 51 ஆயிரம் கிமீ பயணித்த உருக்கமான கதை..

இதற்காக 9 ஆயிரம் அமெரிக்க டாலர்களை அவர் செலுத்தினார். அதாவது இந்திய மதிப்பில் 6.20 லட்ச ரூபாய். ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பைக், இந்திய மார்க்கெட்டில் 1.70 லட்ச ரூபாய் முதல் 2.17 லட்ச ரூபாய் வரையிலான எக்ஸ் ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

இந்தியாவின் ராயல் என்பீல்டு மீதான கொரிய இளைஞரின் காதல்.. 51 ஆயிரம் கிமீ பயணித்த உருக்கமான கதை..

ஆனால் காஸே கொடுத்திருப்பதோ 6.20 லட்ச ரூபாய். இந்தியாவில் கிடைக்கும் ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பைக்கின் டாப் வேரியண்ட்டினுடைய விலையை காட்டிலும் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிக தொகையை கொடுத்து, அதனை தனக்கு சொந்தமாக்கியிருக்கிறார் காஸே.

இந்தியாவின் ராயல் என்பீல்டு மீதான கொரிய இளைஞரின் காதல்.. 51 ஆயிரம் கிமீ பயணித்த உருக்கமான கதை..

இதற்காக மற்றொரு தியாகம் ஒன்றையும் காஸே செய்தார். அவரிடம் பிஎம்டபிள்யூ GS 650 பைக் ஒன்று இருந்தது. தனது அன்பிற்குரிய ராயல் என்பீல்டு பைக்கை அடைவதற்காக, பிஎம்டபிள்யூ GS 650 பைக்கை விற்பனை செய்து விட்டார் காஸே.

இந்தியாவின் ராயல் என்பீல்டு மீதான கொரிய இளைஞரின் காதல்.. 51 ஆயிரம் கிமீ பயணித்த உருக்கமான கதை..

காஸே வாங்கிய ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பைக்கிற்கு, செல்ல பெயர் ஒன்றும் வைத்துள்ளார். 'ப்யூரியோசா'. இதுதான் ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பைக்கிற்கு காஸே சூட்டியிருக்கும் செல்லப்பெயர். அந்த பைக்கை அவர் அப்படித்தான் அன்புடன் அழைக்கிறார்.

இந்தியாவின் ராயல் என்பீல்டு மீதான கொரிய இளைஞரின் காதல்.. 51 ஆயிரம் கிமீ பயணித்த உருக்கமான கதை..

ராயல் என்பீல்டு பைக்கை வாங்கியதுடன் காஸே நின்றுவிடவில்லை. தென் அமெரிக்காவில் இருந்து வட அமெரிக்காவுக்கு சாகச பயணமும் மேற்கொண்டிருக்கிறார். இதனை தனது வாழ்நாள் சாதனை என பெருமிதம் பொங்க குறிப்பிடுகிறார் காஸே.

இந்தியாவின் ராயல் என்பீல்டு மீதான கொரிய இளைஞரின் காதல்.. 51 ஆயிரம் கிமீ பயணித்த உருக்கமான கதை..

வாழ்நாள் சாதனை என குறிப்பிடப்படும் அளவிற்கு, இந்த பயணம் சிறப்புமிக்கதாக மாற மற்றொரு காரணமும் உண்டு. காஸேவின் வழித்துணைவன்தான் அதற்கு காரணம். அந்த வழித்துணைவன் வேறு யாருமல்ல. அவர் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ள ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பைக்தான்.

இந்தியாவின் ராயல் என்பீல்டு மீதான கொரிய இளைஞரின் காதல்.. 51 ஆயிரம் கிமீ பயணித்த உருக்கமான கதை..

இல்லை..இல்லை..ப்யூரியோசா... அதுதான் தனது ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பைக்கிற்கு காஸே சூட்டிய செல்லப்பெயர். தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள அர்ஜென்டினா நாட்டின் உசுயயா என்ற நகரில் அவரது சாகச பயணம் தொடங்கியது.

இந்தியாவின் ராயல் என்பீல்டு மீதான கொரிய இளைஞரின் காதல்.. 51 ஆயிரம் கிமீ பயணித்த உருக்கமான கதை..

சாலை மார்க்கமாகவே சென்ற காஸே சுமார் 51 ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணித்து, வட அமெரிக்க கண்டத்தில் உள்ள அமெரிக்க நாட்டின் அலாஸ்காவை அடைந்திருக்கிறார். அலாஸ்காதான் அவரது இலக்கு. அந்த இலக்கை கடந்த சில நாட்களுக்கு முன்புதான் எட்டியிருக்கிறார் காஸே.

இந்தியாவின் ராயல் என்பீல்டு மீதான கொரிய இளைஞரின் காதல்.. 51 ஆயிரம் கிமீ பயணித்த உருக்கமான கதை..

இந்த வாழ்நாள் சாதனையை எட்டும் பயணத்தில், காஸே பல்வேறு தடைகளை சந்தித்திருக்கிறார். கால நிலை மாற்றம், மோசமான சாலைகள் ஆகியவற்றுடன் வன விலங்குகளின் அச்சுறுத்தலையும் அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

இந்தியாவின் ராயல் என்பீல்டு மீதான கொரிய இளைஞரின் காதல்.. 51 ஆயிரம் கிமீ பயணித்த உருக்கமான கதை..

குறிப்பாக அவர் பயணித்த சாலைகளில் கரடிகளின் அச்சுறுத்தல் அதிகம். ஆனால் எல்லா தடைகளையும் கடந்து, வாழ்நாள் சாதனையை காஸே படைத்துவிட்டார். இடையில் ஓரிரு முறை அவரது 'ப்யூரியோசா' மக்கர் செய்துள்ளது.

இந்தியாவின் ராயல் என்பீல்டு மீதான கொரிய இளைஞரின் காதல்.. 51 ஆயிரம் கிமீ பயணித்த உருக்கமான கதை..

ஆனால் உள்ளூரில் உள்ள டீலர்ஷிப்பில் இருந்து விரைந்து வந்த ஊழியர்கள், குறைகளை நிவர்த்தி செய்து கொடுத்துள்ளனர். மெக்ஸிகோ மற்றும் அமெரிக்க நாடுகளில் உள்ள ராயல் என்பீல்டு டீலர்களும், காஸேவுக்காக சில உதவிகளை செய்துள்ளனர்.

இந்தியாவின் ராயல் என்பீல்டு மீதான கொரிய இளைஞரின் காதல்.. 51 ஆயிரம் கிமீ பயணித்த உருக்கமான கதை..

இப்படி காஸேவின் சாகச பயணத்தில், அவருக்கு பல புதிய நண்பர்களும் கிடைத்துள்ளனர். இந்த பயணத்திற்கான முழு செலவும் காஸேவினுடையதுதான். காஸே தனது இலக்கான அலாஸ்காவை எட்டிவிட்டாலும், தற்போது ஒருவிதமான குழப்பத்தில் உள்ளார்.

இந்தியாவின் ராயல் என்பீல்டு மீதான கொரிய இளைஞரின் காதல்.. 51 ஆயிரம் கிமீ பயணித்த உருக்கமான கதை..

தற்போது ப்யூரியோசாவை அவர் மீண்டும் தென் கொரியா கொண்டு சென்றாக வேண்டும். ஆனால் அந்த பகுதியில் அதற்கான டிரான்ஸ்போர்ட் அல்லது ஷிப்பிங் சர்வீஸ் வசதிகள் இல்லை. இதற்கான எந்த உதவியும் காஸேவுக்கு கிடைக்கவில்லை.

இந்தியாவின் ராயல் என்பீல்டு மீதான கொரிய இளைஞரின் காதல்.. 51 ஆயிரம் கிமீ பயணித்த உருக்கமான கதை..

ப்யூரியோசாவை எப்படி மீண்டும் தென் கொரியா கொண்டு செல்வது என்பதற்கான விடையை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார் காஸே. இந்தியாவில் உள்ள ராயல் என்பீல்டு நிறுவனத்திடமும் அவர் உதவி கேட்டதாகவும், ஆனால் எந்த ரெஸ்பான்சும் இல்லை என கூறப்படுகிறது.

இந்தியாவின் ராயல் என்பீல்டு மீதான கொரிய இளைஞரின் காதல்.. 51 ஆயிரம் கிமீ பயணித்த உருக்கமான கதை..

காஸேவின் முன்பு தற்போது 2 சாய்ஸ்கள்தான் உள்ளன. அலாஸ்காவில் காஸேவுக்கு வயனே என்ற புதிய நண்பர் கிடைத்துள்ளார். அவரிடம் ப்யூரியோசாவை கொடுத்து விட்டு, அதற்கு குட் பை சொல்லி, தென் கொரியா திரும்புவதுதான் முதல் சாய்ஸ்.

இந்தியாவின் ராயல் என்பீல்டு மீதான கொரிய இளைஞரின் காதல்.. 51 ஆயிரம் கிமீ பயணித்த உருக்கமான கதை..

அலாஸ்காவில் உள்ள ப்ரூதோ பே என்ற இடத்தில்தான் காஸே உள்ளார். அங்கிருந்து 5,600 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் வந்து, பின்னர் தென் கொரியாவுக்கு ப்யூரியோசாவை அனுப்பலாம். இதுதான் இரண்டாவது சாய்ஸ்.

இந்தியாவின் ராயல் என்பீல்டு மீதான கொரிய இளைஞரின் காதல்.. 51 ஆயிரம் கிமீ பயணித்த உருக்கமான கதை..

ஆனால் இரண்டாவது சாய்ஸைதான் காஸே விரும்புகிறார். அங்கிருந்து லாஸ் ஏஞ்சல்சுக்கு மீண்டும் 5,600 கிலோ மீட்டர்கள் சாலை மார்க்கமாக ப்யூரியோசாவை ஓட்டி வர முடிவு செய்து விட்டார் காஸே. ப்யூரியோசாவை பிரிய அவருக்கு மனமில்லை. வாழ்த்துக்கள்.

Source: Ahn Sungmin

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
South korean youth travelled 51,000 kilo meters with his companion royal enfield. Read in tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X