திருடு போன இரண்டே நாட்களில் கேடிஎம் பைக்கை மீட்டு பொல்லாதவன் தனுஸையே மிஞ்சிய உரிமையாளர்...

திருடப்பட்ட கேடிஎம் டியூக் 390 பைக்கை, நவீன டெக்னாலஜியின் உதவியுடன், அதன் உரிமையாளர் வெறும் இரண்டே நாட்களில் மீட்டிருக்கிறார். அத்துடன் கொள்ளையனை பிடிக்க போலீசாருக்கும் உதவியிருக்கிறார்.

By Arun

திருடப்பட்ட கேடிஎம் டியூக் 390 பைக்கை, நவீன டெக்னாலஜியின் உதவியுடன், அதன் உரிமையாளர் வெறும் இரண்டே நாட்களில் மீட்டிருக்கிறார். அத்துடன் கொள்ளையனை கையும், களவுமாக பிடிக்க போலீசாருக்கும் உதவி செய்திருக்கிறார். சினிமாவை மிஞ்சும் இந்த பரபரப்பு சம்பவம் குறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

திருடு போன இரண்டே நாட்களில் கேடிஎம் பைக்கை மீட்டு பொல்லாதவன் தனுஸையே மிஞ்சிய உரிமையாளர்...

கேடிஎம் நிறுவனத்தின் புதிய டியூக் 390 பைக்கின் விற்பனை இந்தியாவில் சக்கை போடு போட்டு வருகிறது. இந்த பைக்கிற்கு என இந்தியாவில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. டெல்லியை சேர்ந்தவரான வினய் என்பவரும் அப்படிப்பட்ட ஒருவர்தான்.

திருடு போன இரண்டே நாட்களில் கேடிஎம் பைக்கை மீட்டு பொல்லாதவன் தனுஸையே மிஞ்சிய உரிமையாளர்...

கேடிஎம் டியூக் 390 பைக், இந்தியாவில் கடந்தாண்டு லான்ச் செய்யப்பட்டது. அப்போது அந்த பைக்கை முதன் முதலில் வாங்கியவர்களில் வினயும் ஒருவர். இமாச்சல பிரதேசத்தில் உள்ள இமயமலை தொடரின் ஒரு பகுதியான சச் பாஸ் போன்ற கடினமான சிகரங்களுக்கு எல்லாம் இந்த பைக்கில் அவர் சென்று வந்துள்ளார்.

திருடு போன இரண்டே நாட்களில் கேடிஎம் பைக்கை மீட்டு பொல்லாதவன் தனுஸையே மிஞ்சிய உரிமையாளர்...

இதர கேடிஎம் டியூக் 390 உரிமையாளர்களை போல, வினயும் தனது பைக்கை மிக அதிகமாக நேசித்து வருகிறார். எவ்வளவு முடியுமோ, அந்த அளவுக்கு தனது கேடிஎம் டியூக் 390 பைக் மீது வினய் அதிக அக்கறை கொண்டுள்ளார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவரது பைக் திருடு போய்விட்டது.

திருடு போன இரண்டே நாட்களில் கேடிஎம் பைக்கை மீட்டு பொல்லாதவன் தனுஸையே மிஞ்சிய உரிமையாளர்...

வினய்யின் நண்பர் ஒருவர் டெல்லியில் உள்ள ரோகிணி செக்டார் 11 என்ற பகுதியில் கஃபே நடத்தி வருகிறார். அவரை பார்ப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன் வினய் சென்றிருந்தார். அங்குள்ள ஒரு சினிமா தியேட்டரின் முன்பு பைக்கை நிறுத்தி பூட்டிவிட்டு கஃபேவுக்கு உள்ளே வினய் சென்றார்.

திருடு போன இரண்டே நாட்களில் கேடிஎம் பைக்கை மீட்டு பொல்லாதவன் தனுஸையே மிஞ்சிய உரிமையாளர்...

கஃபேவுக்கு எதிரில்தான் அந்த சினிமா தியேட்டர் உள்ளது. அப்போது மணி இரவு ஒன்பதை கடந்திருந்தது. பின்னர் நண்பரை சந்தித்து விட்டு, பைக்கை பார்க் செய்திருந்த இடத்திற்கு வினய் வந்தார். அப்போது மணி இரவு 11.30ஐ தாண்டி விட்டது.

திருடு போன இரண்டே நாட்களில் கேடிஎம் பைக்கை மீட்டு பொல்லாதவன் தனுஸையே மிஞ்சிய உரிமையாளர்...

ஆனால் வினய்க்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆசை ஆசையாய் பராமரித்து வந்த அவரது கேடிஎம் டியூக் பைக்கை காணவில்லை. அங்கு பணியில் இருந்த வாட்ச்மேன் உதவியுடன் சுற்று வட்டாரம் முழுவதும் வினய் தேடிபார்த்தார். ஆனால் பைக் கிடைக்கவில்லை. மர்ம நபர்கள் யாரோ அதை திருடி சென்றிருந்தனர்.

திருடு போன இரண்டே நாட்களில் கேடிஎம் பைக்கை மீட்டு பொல்லாதவன் தனுஸையே மிஞ்சிய உரிமையாளர்...

இதனால் ஆன்லைன் மூலமாக உடனடியாக உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனில் எப்ஐஆர் பதிவு செய்ய வினய் முயன்றார். ஆனால் சிஸ்டமில் இருந்த சில பிரச்னைகள் காரணமாக உடனடியாக வினயால் அதன் நகலை பெற முடியவில்லை. ஆனால் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதற்கான எஸ்எம்எஸ் அவருக்கு வந்து விட்டது.

திருடு போன இரண்டே நாட்களில் கேடிஎம் பைக்கை மீட்டு பொல்லாதவன் தனுஸையே மிஞ்சிய உரிமையாளர்...

இதனிடையே பைக்கை பறிகொடுத்த இடத்திற்கு வினய் மறுநாள் காலை மீண்டும் சென்றார். தனது பைக் குறித்து அங்கிருந்தவர்களிடம் விசாரித்து பார்த்தார். ஆனால் வினய்க்கு எந்தவிதமான தடயங்களும் சிக்கவில்லை.

திருடு போன இரண்டே நாட்களில் கேடிஎம் பைக்கை மீட்டு பொல்லாதவன் தனுஸையே மிஞ்சிய உரிமையாளர்...

மறுபக்கம் கொள்ளையனோ, திருடப்பட்ட வினய்யின் பைக்கில் உற்சாகமாக சவாரி செய்து கொண்டிருந்தார். ஆனால் பாவம், வினய் தனது கேடிஎம் டியூக் 390 பைக்கில், ஜிபிஎஸ் டிவைஸ் இன்ஸ்டால் செய்து வைத்திருந்தது கொள்ளையனுக்கு தெரியவில்லை.

திருடு போன இரண்டே நாட்களில் கேடிஎம் பைக்கை மீட்டு பொல்லாதவன் தனுஸையே மிஞ்சிய உரிமையாளர்...

ஆனால் துரதிருஷ்டவசமாக, தனது பைக் எங்கே உள்ளது? என்பதை வினய்யால் டிராக் செய்ய முடியவில்லை. ஏனெனில் ஜிபிஎஸ் டிவைசுக்கான சப்ஸ்கிரிப்சன் (சந்தா) காலாவதியாகி இருந்தது. எனினும் அந்த ஜிபிஎஸ் டிவைஸ் தயாரிப்பாளரை வினய் உடனடியாக தொடர்பு கொண்டார்.

திருடு போன இரண்டே நாட்களில் கேடிஎம் பைக்கை மீட்டு பொல்லாதவன் தனுஸையே மிஞ்சிய உரிமையாளர்...

ஆன்லைன் மூலமாக சப்ஸ்கிரிப்சனை புதுப்பிக்க முடியும் என்ற பதில் வினய்க்கு கிடைத்தது. உடனடியாக மதியம் 1.30 மணியளவில் சப்ஸ்கிரிப்சனை வினய் புதுப்பித்தார். ஜிபிஎஸ் டிவைசுக்கான சப்ஸ்கிரிப்சன் புதுப்பிக்கப்பட்டு விட்டது என்பதற்கான மெசேஜ் மாலை 4.30 மணியளவில் அவருக்கு வந்தது.

திருடு போன இரண்டே நாட்களில் கேடிஎம் பைக்கை மீட்டு பொல்லாதவன் தனுஸையே மிஞ்சிய உரிமையாளர்...

உடனடியாக ஆன்லைனுக்கு சென்று, தனது பைக் எங்கே உள்ளது? என்பதை வினய் டிராக் செய்ய தொடங்கினார். இதன்மூலமாக பைக் இருக்கும் இடத்தை வினய் கண்டறிந்து விட்டார். அவர் இருந்த இடத்தில் இருந்து 550 கிலோமீட்டர் தொலைவில் அவரது கேடிஎம் டியூக் 390 பைக் இருந்தது.

திருடு போன இரண்டே நாட்களில் கேடிஎம் பைக்கை மீட்டு பொல்லாதவன் தனுஸையே மிஞ்சிய உரிமையாளர்...

ஜிபிஎஸ் டிவைஸ் காட்டிய இடம் உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோ. அங்குள்ள ஆலம்பாக் என்ற பகுதியில் வினய்யின் பைக் இருந்தது. அதாவது பைக்கை திருடிய கொள்ளையன் உடனடியாக டெல்லியை விட்டு வெளியேறி லக்னோ சென்று விட்டதை ஜிபிஎஸ் டிவைஸ் காட்டி கொடுத்தது.

திருடு போன இரண்டே நாட்களில் கேடிஎம் பைக்கை மீட்டு பொல்லாதவன் தனுஸையே மிஞ்சிய உரிமையாளர்...

அதிர்ஷ்டவசமாக லக்னோவில் வினய்க்கு சில நண்பர்கள் இருந்தனர். அவர்களும் பைக்குகள் மீது காதல் கொண்டவர்கள்தான். அவர்களை தொடர்பு கொண்டு உதவி கேட்க வினய் முடிவு செய்தார். இதன்பின் லக்னோவில் உள்ள தனது நண்பர்கள் பாப்லா மற்றும் ஃபஹீம் ஆகிய இருவரையும் தொடர்பு கொண்டார்.

திருடு போன இரண்டே நாட்களில் கேடிஎம் பைக்கை மீட்டு பொல்லாதவன் தனுஸையே மிஞ்சிய உரிமையாளர்...

அந்த நேரத்தில் வினய்யின் பைக், ஆலம்பாக் பகுதியில் உள்ள பாட்ஷா நகர் ரயில்வே கிராசிங் அருகே பார்க் செய்யப்பட்டிருந்தது. ஜிபிஎஸ் டிவைஸ் மூலமாக தொடர்ந்து தனது பைக்கை டிராக் செய்து கொண்டே இருந்த வினய், தனது நண்பர்களை அங்கு சென்று பார்க்கும்படி கேட்டு கொண்டார்.

திருடு போன இரண்டே நாட்களில் கேடிஎம் பைக்கை மீட்டு பொல்லாதவன் தனுஸையே மிஞ்சிய உரிமையாளர்...

இதன்பேரில் பாப்லா மற்றும் ஃபஹீம் ஆகிய இருவரும் அங்கு சென்றபோது, வினய்யின் கேடிஎம் டியூக் 390 பைக் நிறுத்தப்பட்டிருந்தது. இதன்பின் பாப்லா, ஃபஹீம் லக்னோ போலீசாரை தொடர்பு கொண்டு நடந்த விபரங்களை தெரிவித்தனர். இதன்பின் போலீசார் சீனுக்குள் எண்ட்ரி கொடுத்தனர்.

திருடு போன இரண்டே நாட்களில் கேடிஎம் பைக்கை மீட்டு பொல்லாதவன் தனுஸையே மிஞ்சிய உரிமையாளர்...

ஆனால் பைக்கை அவர்கள் மீட்கவில்லை. ஏனெனில் பைக்கை திருடிய கொள்ளையன் அங்கு இல்லை. வெறுமனே பார்க் செய்து விட்டு சென்று விட்டார். எனவே கொள்ளையனை கையும், களவுமாக பிடிக்க வேண்டும் என்பதற்காக, போலீசார் சற்று மாற்றி யோசித்தனர்.

திருடு போன இரண்டே நாட்களில் கேடிஎம் பைக்கை மீட்டு பொல்லாதவன் தனுஸையே மிஞ்சிய உரிமையாளர்...

வினய்யின் பைக்கை மீட்காமல், வெறுமனே செயின் லாக்கை மட்டும் போட்டு விட்டு போலீசார் வந்து விட்டனர். அந்த பைக்கை எடுக்க யாராவது வந்தால், தகவல் தெரிவிக்கும்படி அங்கு காவலுக்கு இருந்த செக்யூரிட்டியிடம் போலீசார் தெரிவித்திருந்தனர்.

திருடு போன இரண்டே நாட்களில் கேடிஎம் பைக்கை மீட்டு பொல்லாதவன் தனுஸையே மிஞ்சிய உரிமையாளர்...

மறுநாள் காலை 5.30 மணி. போலீசார் எதிர்பார்த்தது போலவே கொள்ளையன் அங்கு வந்தான். ஆனால் பைக் செயின் லாக் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து அங்கிருந்த செக்யூரிட்டியிடம் கொள்ளையன் விபரம் கேட்டான்.

திருடு போன இரண்டே நாட்களில் கேடிஎம் பைக்கை மீட்டு பொல்லாதவன் தனுஸையே மிஞ்சிய உரிமையாளர்...

போலீசார் முன்பு கூறி வைத்திருந்ததை போல் செக்யூரிட்டி செயல்பட தொடங்கினார். செயின் லாக்கிற்கான சாவி தனது அறையில் இருப்பதாகவும், சில நிமிடங்களில் எடுத்து வந்து விடுவதாகவும் கொள்ளையனிடம் செக்யூரிட்டி கூறினார். இதனால் கொள்ளையன் காத்து கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

திருடு போன இரண்டே நாட்களில் கேடிஎம் பைக்கை மீட்டு பொல்லாதவன் தனுஸையே மிஞ்சிய உரிமையாளர்...

இடைப்பட்ட நேரத்தில் போலீசுக்கு தகவல் தெரிவித்து விட்டார் செக்யூரிட்டி. சற்றும் தாமதிக்காமல் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கொள்ளையனை கையும் களவுமாக பிடித்தனர். கொள்ளையனுடன் அவனது கூட்டாளிகள் மூன்று பேரும் இருந்தனர். ஆனால் அவர்கள் தப்பித்து விட்டனர்.

திருடு போன இரண்டே நாட்களில் கேடிஎம் பைக்கை மீட்டு பொல்லாதவன் தனுஸையே மிஞ்சிய உரிமையாளர்...

எனினும் சிக்கிய கொள்ளையன் கைது செய்யப்பட்டு, லக்னோவின் மகா நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லப்பட்டார். பைக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்த தகவல் வினய்க்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் லக்னோ விரைந்தார்.

திருடு போன இரண்டே நாட்களில் கேடிஎம் பைக்கை மீட்டு பொல்லாதவன் தனுஸையே மிஞ்சிய உரிமையாளர்...

அவர் போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்த நேரத்தில், பைக் கொள்ளையன் கைவிலங்கு பூட்டப்பட்டு, தரையில் அமர வைக்கப்பட்டிருந்தார். ஜிபிஎஸ் டிவைஸ் பொருத்தப்பட்டிருந்ததால்தான், பைக் கொள்ளையனை இரண்டே நாட்களில் பிடிக்க முடிந்திருக்கிறது.

திருடு போன இரண்டே நாட்களில் கேடிஎம் பைக்கை மீட்டு பொல்லாதவன் தனுஸையே மிஞ்சிய உரிமையாளர்...

எனவே பைக் வைத்திருக்கும் அனைவரும், குறிப்பாக விலை உயர்ந்த பைக் வைத்திருப்பவர்கள் எல்லாம் ஜிபிஎஸ் டிவைஸ் பொருத்த வேண்டும் என வினய் வலியுறுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் தனக்கு உதவிய நண்பர்கள் மற்றும் போலீசார் அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்து கொண்டுள்ளார்.

திருடு போன இரண்டே நாட்களில் கேடிஎம் பைக்கை மீட்டு பொல்லாதவன் தனுஸையே மிஞ்சிய உரிமையாளர்...

இதனிடையே கைது செய்யப்பட்ட பைக் கொள்ளையன் குறித்து பகீர் தகவல் வெளியாகியுள்ளது. திருடப்பட்ட வினய்யின் பைக்கை அவர் நேபாளம் கொண்டு செல்ல திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. பைக் நாடு விட்டு நாடு செல்ல இருந்த நிலையில், சரியான நேரத்தில் கொள்ளையன் சிக்கியுள்ளார்.

திருடு போன இரண்டே நாட்களில் கேடிஎம் பைக்கை மீட்டு பொல்லாதவன் தனுஸையே மிஞ்சிய உரிமையாளர்...

கொள்ளையர்களிடம் இருந்து பைக்கை பாதுகாக்க வேண்டுமானால், வினய் கூறியது போல, ஜிபிஎஸ் டிவைஸ் பொருத்தி கொள்ள அனைவரும் முன்வருவதே சிறந்ததாக இருக்கும்.

Source: RUSHLANE

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Stolen KTM duke 390 bike found in just 2 days: owner thanks gps and friends. Read in tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X