புதிய சுஸுகி பர்க்மேன் 125 ஸ்கூட்டருக்கு முன்பதிவு ஆரம்பம்!!

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில், பர்க்மேன் என்ற மேக்ஸி ஸ்டைல் ஸ்கூட்டரை சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் காட்சிப்படுத்தி இருந்தது. இந்த ஸ்கூட்டர் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

By Saravana Rajan

மேக்ஸி ஸ்டைலில் வரும் புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டருக்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய சுஸுகி பர்க்மேன் 125 ஸ்கூட்டருக்கு முன்பதிவு ஆரம்பம்!!

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில், பர்க்மேன் என்ற மேக்ஸி ஸ்டைல் ஸ்கூட்டரை சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் காட்சிப்படுத்தி இருந்தது. இந்த ஸ்கூட்டர் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

புதிய சுஸுகி பர்க்மேன் 125 ஸ்கூட்டருக்கு முன்பதிவு ஆரம்பம்!!

ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான மேக்ஸி எனப்படும் பிரம்மாண்டமான முகப்புடன் கூடிய இந்த ஸ்கூட்டர் பந்தவாக இருந்ததே அனைவரின் பார்வைக்கும் இலக்கானது. இந்த நிலையில், இந்த ஸ்கூட்டர் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்ற ஆவல் வாடிக்கையாளர் மத்தியில் இருந்து வருகிறது.

புதிய சுஸுகி பர்க்மேன் 125 ஸ்கூட்டருக்கு முன்பதிவு ஆரம்பம்!!

ஏனெனில், வழக்கமான ஸ்கூட்டர் மாடலிலிருந்து தனித்துவமான டிசைனில் இருப்பதால், பலர் இந்த ஸ்கூட்டருக்காக காத்திருக்கின்றனர். அவ்வாறு காத்திருப்போருக்கு ஓர் நற்செய்தி கிடைத்துள்ளது. சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டருக்கு டீலர்களில் முன்பதிவு செய்யப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ரூ.5,000 முன்பணத்தை செலுத்தி இந்த ஸ்கூட்டரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

புதிய சுஸுகி பர்க்மேன் 125 ஸ்கூட்டருக்கு முன்பதிவு ஆரம்பம்!!

இந்த புதிய ஸ்கூட்டர் 125சிசி ரக மார்க்கெட்டில் களமிறங்க உள்ளது. ஏற்கனவே, அக்செஸ் 125 ஸ்கூட்டர் மூலமாக வலுவான சந்தையை பெற்றிருக்கும் சுஸுகி நிறுவனம் தனது சந்தையை இந்த புதிய மாடல் மூலமாக மேலும் வலுப்படுத்திக் கொள்ள இருக்கிறது.

புதிய சுஸுகி பர்க்மேன் 125 ஸ்கூட்டருக்கு முன்பதிவு ஆரம்பம்!!

பொதுவாக மேக்ஸி ரக ஸ்கூட்டர்களில் சக்திவாய்ந்த எஞ்சின்கள் பொருத்தப்பட்டு இருக்கும். ஐரோப்பிய நாடுகளில் விற்பனையாகும் சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் 650சிசி எஞ்சின் கொண்ட மாடலிலும் கிடைக்கிறது. ஆனால், இந்தியாவில் அந்தளவு சக்திவாய்ந்த மாடல்களுக்கு போதிய வரவேற்பு இருக்காது என்பதை கருதி, 125சிசி ரக மேக்ஸி ரக மாடலை களமிறக்குகிறது சுஸுகி.

புதிய சுஸுகி பர்க்மேன் 125 ஸ்கூட்டருக்கு முன்பதிவு ஆரம்பம்!!

சுஸுகி அக்செஸ் 125 மாடலில் இருக்கும் அதே எஞ்சின்தான் பர்க்மேன் 125 மாடலிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஸ்கூட்டரில் இருக்கும் 124சிசி எஞ்சின் அதிகபட்சமாக 8.5 பிஎச்பி பவரையும், 10.2 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

புதிய சுஸுகி பர்க்மேன் 125 ஸ்கூட்டருக்கு முன்பதிவு ஆரம்பம்!!

எல்இடி ஹெட்லைட் மற்றும் டெயில் லைட்டுகள், முழுவதுமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், அகலமும், நீளமும் அதிகம் கொண்ட இருக்கை அமைப்பு ஆகியவை இதன் குறிப்பிட்டு சொல்லக்கூடிய முக்கிய சிறப்பம்சங்கள். இந்த ஸ்கூட்டரில் பிற மாடல்களை அதிக ஸ்டோரேஜ் இடவசதியும் இருக்கிறது.

புதிய சுஸுகி பர்க்மேன் 125 ஸ்கூட்டருக்கு முன்பதிவு ஆரம்பம்!!

முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளது. முன்சக்கரத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் டிரம் பிரேக்கும் இடம்பெற இருக்கிறது. காம்பி பிரேக்கிங் சிஸ்டமும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய சுஸுகி பர்க்மேன் 125 ஸ்கூட்டருக்கு முன்பதிவு ஆரம்பம்!!

ரூ.65,000 எக்ஸ்ஷோரூம் விலையில், அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரிலியா எஸ்ஆர் 125 ஸ்கூட்டருடன் போட்டி போடும்.

Most Read Articles
English summary
Suzuki Burgman 125 Street Automatic scooter bookings open.
Story first published: Friday, June 15, 2018, 10:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X