ஏபிஎஸ் பிரேக் வசதியுடன் சுஸுகி ஜிக்ஸெர்... விலை ரூ87,250

சுஸூகி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் கிக்ஸர் ஏபிஎஸ் பைக்கை வெளியிட்டுள்ளது. ரூ87,250 என்ற எக்ஸ்ஷோரூம் விலையுடன் அறிமுகமாகியுள்ள இந்த பைக்கில் முன் வீலில் சிங்கில் சேனல் ஏபிஸ் பொருத்தப்பட்ட

By Balasubramanian

சுஸூகி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் கிக்ஸர் ஏபிஎஸ் பைக்கை வெளியிட்டுள்ளது. ரூ87,250 என்ற எக்ஸ்ஷோரூம் விலையுடன் அறிமுகமாகியுள்ள இந்த பைக்கில் முன் வீலில் சிங்கில் சேனல் ஏபிஸ் பொருத்தப்பட்டுள்ளது.

ஏபிஎஸ் பிரேக் வசதியுடன் சுஸுகி ஜிக்ஸெர்... விலை ரூ87,250

இந்த பைக்கின் டிசைனை பொருத்தவரை பழைய கிக்ஸர் மாடல் பைக்கின் அதே டிசைன் தான் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பு டாப் என்ட் மாடலில்தான் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதி இருக்கும். ஆனா் தற்போது அறிமுகமாகியுள்ள பைக்கில் ஏபிஎஸ் ஒரு ஆப்ஷனலாக வருகிறது.

ஏபிஎஸ் பிரேக் வசதியுடன் சுஸுகி ஜிக்ஸெர்... விலை ரூ87,250

சுஸூகி கிக்ஸர் ஏபிஎஸ் பைக்கில் முன் பக்க வீலில் ஸ்பீடு சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இது வீல் எவ்வளவு வேகத்தில் சுற்றுகிறது என்பதை கணக்கிட்டு கொண்டே இருக்கும். அவசரமான சூழ்நிலையில் நாம் பிரேக் பிடிக்கும் போது அதை கணக்கிட்டு வீல் லாக்அப் ஆவதை தவிர்க்கும். இதை தவிர மற்ற மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.

ஏபிஎஸ் பிரேக் வசதியுடன் சுஸுகி ஜிக்ஸெர்... விலை ரூ87,250

இந்த பைக்கின் இன்ஜினை பொருத்தவரை 154 சிசி ஒரு சிலிண்டர் ஏர் கூலண்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 14.5 பிஎச்பி பவரையும் 14 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் வருகிறது. இந்த பைக்கில் உள்ள ஏபிஎஸில் சுஸூகி ஜெட் கூலிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

ஏபிஎஸ் பிரேக் வசதியுடன் சுஸுகி ஜிக்ஸெர்... விலை ரூ87,250

இந்த பைக்கில் ஏஎச்ஓ என்ற தொழிற்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தேவைப்படும் நேரங்களில் தானாக ஹெட்லைட் ஆன் செய்யப்படும். இது போக பின்பக்க எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் கிளஸ்டர், இரண்டு வீல்களிலும் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.

ஏபிஎஸ் பிரேக் வசதியுடன் சுஸுகி ஜிக்ஸெர்... விலை ரூ87,250

இந்த பைக்கில் முன்பக்கம் பெரிய விட்டத்துடனான ஃபோக்ஸ்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் முன்பக்கவீலின் உறுதி தன்மை அதிகமாக இருக்கும். மேலும் பைக்கின் எடையையும் இது குறைக்கிறது.

ஏபிஎஸ் பிரேக் வசதியுடன் சுஸுகி ஜிக்ஸெர்... விலை ரூ87,250

மேலும் இதில் இரண்டு எக்ஸாட் சிஸ்டம், மூன்று ஸ்போர்க் அலாய் வீல், பின்பக்கம் உயரமான சீட், என பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பைக் மெட்டாலிக் டிரிட்டான் ப்ளூ அல்லது கிளாஸ் ஸ்பார்க்கில் பிளாக், கேண்டி சொனோமா ரெட்அல்லதுமெட்டாலிக் சோனிக் சில்வர் ஆகிய கலர்களில் விற்பனை செய்யப்படுகிறது.

ஏபிஎஸ் பிரேக் வசதியுடன் சுஸுகி ஜிக்ஸெர்... விலை ரூ87,250

மக்கள் மிகவும் அதிகமாக எதிர்பார்த்த சுஸூகி கிக்ஸர் ஏபிஎஸ் வசதியுடன் இந்திய மார்க்கெட்டிற்கு வந்து விட்டது. இது இந்த பைக்கின் பிரேக்கிங் பெர்மாமென்ஸை கணிசமான அளவு உயர்த்தியுள்ளது.

ஏபிஎஸ் பிரேக் வசதியுடன் சுஸுகி ஜிக்ஸெர்... விலை ரூ87,250

வரும் 2019 ஏப்ரல் முதல் 125 சிசிக்கு அதிகமான இன்ஜின்களுடன் தயார் செய்யப்படும் பைக்குகளுக்கு கட்டாயம் ஏபிஎஸ் பொருத்தப்பட வேண்டும் என்ற சட்டம் வரவுள்ளதால் இந்த மாற்றம் முன்னதாகவே செய்யப்பட்டு விட்டது.

ஏபிஎஸ் பிரேக் வசதியுடன் சுஸுகி ஜிக்ஸெர்... விலை ரூ87,250

இந்த பைக் ஹோண்டா சிபி ஹார்னட்160 ஆர் ஏபிஎஸ், பஜாஜ் பல்சர் என்எஸ் 160, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்.டி.ஆர். 160 4வி, மற்றும் யமஹா எப் இசட்-எஸ் ஆகிய பைக்குகளுடன் நேரடியாக போட்டியிடுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
English summary
Suzuki Gixxer ABS Launched In India; Priced At Rs 87,250
Story first published: Monday, May 28, 2018, 15:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X