சிம்டாங்கரன்... சுஸுகி ஜிக்ஸெர் பைக்கின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!

நடப்பு பண்டிகை காலத்திலோ அல்லது புத்தாண்டிலோ புதிய 150சிசி பைக் வாங்க விரும்புவோருக்கு சுஸுகி ஜிக்ஸெர் பைக் சிறந்த தேர்வாக இருக்கும். வடிவமைப்பு, கட்டுமானம், பாதுகாப்பு அம்சங்கள், வசதிகள், செயல்திறன்

இந்திய இருசக்கர வாகன மார்க்கெட்டில் ஜப்பானை சேர்ந்த சுஸுகி நிறுவனம் முக்கிய போட்டியாளராக முன்னிறுத்திக் கொண்டுள்ளது. பைக் மார்க்கெட்டில் பட்ஜெட் விலையிலான ஹயாட்டே, ஜிக்ஸெர் முதல் வி- ஸ்ட்ரோம் 650, ஹயபுசா, ஜிஎஸ்எக்ஸ்- எஸ்1000 மற்றும் வி - ஸ்ட்ரோம் 1000 ஆகிய சூப்பர் பைக் மாடல்களுடன் கலக்கி வருகிறது. ஸ்கூட்டர் மார்க்கெட்டிலும் ஆக்செஸ் 125 மற்றும் பர்க்மேன் 125 ஆகிய மாடல்கள் சுஸுகி நிறுவனத்தை முன்னிலை படுத்தி உள்ளன.

சிம்டாங்கரன்... சுஸுகி ஜிக்ஸெர் பைக்கின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!

பகட்டான பட்ஜெட் பைக்

குறிப்பாக, 150சிசி ரகத்தில் சுஸுகி நிறுவனத்தின் ஜிக்ஸெர் வரிசை மாடல்கள் இந்தியர்கள் மத்தியில் அமோக ஆதரவை பெற்றிருக்கின்றன. மிரட்டலான தோற்றமும், சிறந்த செயல்திறனும் இந்த பைக்கை சிறந்த தேர்வாக மாற்றி இருக்கிறது. சுஸுகி ஜிஎஸ்எக்ஸ் - எஸ்1000 சூப்பர் பைக்கின் டிசைன் தாத்பரியத்தில் பட்ஜெட் விலை மாடலாக வடிவமைக்கப்பட்ட சுஸுகி ஜிக்ஸெர் பைக் இந்திய இளைஞர்களை வெகுவாக ஈர்த்ததில் ஆச்சரியமில்லை.

சிம்டாங்கரன்... சுஸுகி ஜிக்ஸெர் பைக்கின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!

டிசைன் அம்சங்கள்

முக்கோண வடிவில் கூர்மையான தோற்றத்துடன் கூடிய ஹெட்லைட் அமைப்பு, சிறிய வைசர் வசீகரமாக இருக்கிறது. மிரட்டலான பெட்ரோல் டேங்க் வடிவமைப்பு, பிரம்மாண்டத்தை கூட்டும் பேனல்கள், இருக்கை மற்றும் பெட்ரோல் டேங்க் கீழாக வண்டியின் ஃபுட்பேக் வரை கொடுக்கப்பட்டு இருக்கும் முக்கோண பட்டை ஆகியவை தனித்துவத்தை கொடுக்கின்றன.

இந்த பைக்கில் டியூவல் போர்ட் மஃப்ளர் கொண்ட புகைப்போக்கி குழாய் அசத்தலாக இருக்கிறது. இரு வெட்டு தோற்றத்துடன் கூடிய இருக்கை அமைப்பு, பின்புறத்தில் அந்தரத்தில் துருத்தி நிற்பது போன்ற நம்பர் பிளேட் அமைப்பு ஆகியவை இந்த பைக்கின் டிசைனை வேற லெவலில் காட்டுகின்றன.

சிம்டாங்கரன்... சுஸுகி ஜிக்ஸெர் பைக்கின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!

எஞ்சின் விபரம்

புதிய சுஸுகி ஜிக்ஸெர் பைக் செயல்திறனில் இந்திய இளைஞர்கள் மத்தியில் பெயர் வாங்கி இருக்கிறது. இந்த பைக்கில் 154.9சிசி ஏர்கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 14.5 பிஎச்பி பவரையும், 14 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஓட்டுவதற்கு மிக மென்மையான உணர்வையும், ஆரம்ப நிலையிலிருந்து நடுத்தர வேகம் வரை அருமையான பவர் டெலிவிரியையும் இந்த எஞ்சின் வழங்குகிறது.

சிம்டாங்கரன்... சுஸுகி ஜிக்ஸெர் பைக்கின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!

அசத்தும் செயல்திறன்

தினசரி பயன்பாடு மற்றும் வார இறுதி பயணங்களுக்கு ஏற்ப இதன் எஞ்சின் ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் செயல்திறன் மிகச் சிறப்பாக இருப்பதால், நகர்ப்புற நெரிசலில் ஓட்டுவதற்கு மிக எளிதாக இருப்பதுடன், நீண்ட தூர பயணங்களின்போதும் அருமையான பவர் டெலிவிரியை வழங்குவதால் உற்சாகமான ஓட்டுதல் அனுபவத்தை பெற முடியும்.

சிம்டாங்கரன்... சுஸுகி ஜிக்ஸெர் பைக்கின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!

சமரசம் வேண்டாம்

சுஸுகி ஜிக்ஸெர் பைக்கின் எஞ்சின் SEP தொழில்நுட்பத்தை பெற்றிருப்பதால், எரிபொருள் சிக்கனத்தையும், அதேவேளை சிறப்பான செயல்திறனையும் ஒருங்கே பெறுவதற்கான வாய்ப்பை நமக்கு சமரசம் இல்லாமல் பெற உதவுகிறது. குறிப்பாக, நகர்ப்புற பயன்பாட்டின்போது அதிக எரிபொருள் சிக்கனத்தை பெறுவதற்கு இந்த தொழில்நுட்பம் முக்கிய காரணமாக அமையும்.

சிம்டாங்கரன்... சுஸுகி ஜிக்ஸெர் பைக்கின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!

முக்கிய அம்சங்கள்

புதிய சுஸுகி ஜிக்ஸெர் பைக்கில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், கவர்ச்சியான பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர்கள், இரட்டை பேரல் புகைப்போக்கி குழாய் அமைப்பு, எல்இடி டெயில் லைட் ஆகியவை முக்கிய அம்சங்களாக இடம்பெற்றுள்ளன.

சிம்டாங்கரன்... சுஸுகி ஜிக்ஸெர் பைக்கின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!

சஸ்பென்ஷன் விபரம்

இந்த பைக்கில் முன்புறத்தில் 41 மிமீ ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷன் அமைப்பும், பின்புறத்தில் 7 விதமான நிலைகளில் மாற்றிக் கொள்ளும் வசதியை அளிக்கும் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன. இந்திய சாலை நிலைகளில் இந்த சஸ்பென்ஷன் மூலமாக சிறந்த பயண அனுபவத்தை வழங்கும்.

சிம்டாங்கரன்... சுஸுகி ஜிக்ஸெர் பைக்கின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!

பிரேக் சிஸ்டம்

இந்த பைக்கில் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் ஆப்ஷன் வழங்கப்பட்டிருப்பது சிறப்பு. மேலும், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மூலமாக இந்த பைக் ஒவ்வொரு பயணத்தையும் பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு உதவும்.

சிம்டாங்கரன்... சுஸுகி ஜிக்ஸெர் பைக்கின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!

கட்டுமானம்

சுஸுகி நிறுவனத்தின் GSX- R சீரிஸ் வரிசையில் உள்ள பாரம்பரியம் மிக்க பைக் மாடல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த ஜிக்ஸெர் பைக்கின் கட்டுமானம் மிக வலுவானதாக இருப்பதால், எந்த சாலைநிலைகளிலும் சிறப்பான பயணத்தையும், நீடித்த உழைப்பையும் வழங்கும். மேலும், இந்த பைக்கின் கையாளுமையும் சிறப்பாக இருப்பதும் இளைஞர்களை கவர்வதற்கு முக்கிய காரணம்.

சிம்டாங்கரன்... சுஸுகி ஜிக்ஸெர் பைக்கின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!

சிறந்த தேர்வு

நடப்பு பண்டிகை காலத்திலோ அல்லது புத்தாண்டில் புதிய 150சிசி பைக் வாங்க விரும்புவோருக்கு சுஸுகி ஜிக்ஸெர் பைக் சிறந்த தேர்வாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. வடிவமைப்பு, கட்டுமானம், பாதுகாப்பு அம்சங்கள், வசதிகள், அதிக எரிபொருள் சிக்கனத்துடன் அதி செயல்திறன் மிக்க எஞ்சின் ஆகியவற்றோடு சிறந்த பட்ஜெட்டில் கிடைப்பது இதன் முக்கிய பலம். சுஸுகி ஜிஎஸ்எக்ஸ் சூப்பர் பைக் வரிசையின் ஆரம்ப நிலை மாடல் என்பதும் இதற்கு வலு சேர்க்கும் அம்சமாக கூறலாம்.

Most Read Articles
English summary
Suzuki Gixxer: A Sporty And Stylish Motorcycle For The Young Indian: The Suzuki Gixxer is a sporty and stylish commuter bike designed for young Indian. We bring you the details such as features, design, specifications and performance of the Suzuki Gixxer.
Story first published: Monday, November 5, 2018, 13:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X