சுஸுகி ஜிக்ஸெர் 250 பைக்கின் இந்திய வருகை விபரம்!!

தற்போது ஜிக்ஸெர் 150 பைக்கை வாங்கி பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் அடுத்த செக்மென்ட்டுக்கு செல்ல விரும்பினால், அவர்களுக்கு சிறப்பான தேர்வை வழங்கும் விதத்தில் ஜிக்ஸெர் 250 பைக்கை களமிறக்க சுஸுகி முட

By Saravana Rajan

சுஸுகி ஜிக்ஸெர் 250 பைக்கின் இந்திய வருகை விபரம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

சுஸுகி ஜிக்ஸெர் 250 பைக்கின் இந்திய வருகை விபரம்!!

150 ரக பைக் மார்க்கெட்டில் சுஸுகி ஜிக்ஸெர் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற மாடலாக விளங்குகிறது. மிரட்டலான வடிவமைப்பு, செயல்திறன், சரியான விலை போன்றவை வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான தேர்வை வழங்குகிறது.

சுஸுகி ஜிக்ஸெர் 250 பைக்கின் இந்திய வருகை விபரம்!!

இந்த நிலையில், இந்தியாவில் ஜிக்ஸெர் பிராண்டுக்கு வெற்றியை தக்க வைக்கும் விதத்தில், 250சிசி திறன் கொண்ட ஜிக்ஸெர் பைக்கை களமிறக்க சுஸுகி திட்டமிட்டுள்ளது. இதற்கான திட்டங்கள் குறித்தும் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. மேலும், புதிய ஜிக்ஸெர் 250 பைக்கை அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கும் சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

சுஸுகி ஜிக்ஸெர் 250 பைக்கின் இந்திய வருகை விபரம்!!

தற்போது ஜிக்ஸெர் 150 பைக்கை வாங்கி பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் அடுத்த செக்மென்ட்டுக்கு செல்ல விரும்பினால், அவர்களுக்கு சிறப்பான தேர்வை வழங்கும் விதத்தில் ஜிக்ஸெர் 250 பைக்கை தேர்வுக்கு வைக்க சுஸுகி முடிவு செய்துள்ளது.

சுஸுகி ஜிக்ஸெர் 250 பைக்கின் இந்திய வருகை விபரம்!!

ஜிக்ஸெர் 250 பைக் நேக்கட் மாடலாக முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும். பின்னர், ஃபேரிங் பேனல்கள் பொருத்தப்பட்ட ஸ்போர்ட்ஸ் ரக மாடலையும் அறிமுகம் செய்யும் திட்டமும் சுஸுகி வசம் உள்ளது.

சுஸுகி ஜிக்ஸெர் 250 பைக்கின் இந்திய வருகை விபரம்!!

சுஸுகி ஜிக்ஸெர் 250 பைக்கின் டிசைன் சுஸுகியின் பிரபலமான சூப்பர் பைக் மாடல்களை ஒத்திருக்கிறது. ஸ்டைலிங்கில் ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 மற்றும் ஜிஎஸ்எக்ஸ்- எஸ்1000 போன்ற மாடல்களை ஒத்திருந்தாலும், இந்திய மார்க்கெட்டுக்கு தக்கவாறு சில மாற்றங்களை செய்து அறிமுகம் செய்ய இருக்கிறது.

சுஸுகி ஜிக்ஸெர் 250 பைக்கின் இந்திய வருகை விபரம்!!

புதிய சுஸுகி ஜிக்ஸெர் 250 பைக்கில் இருக்கும் எஞ்சின் 22 பிஎச்பி முதல் 25 பிஎச்பி இடையிலான பவரை வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

சுஸுகி ஜிக்ஸெர் 250 பைக்கின் இந்திய வருகை விபரம்!!

சுஸுகி ஜிக்ஸெர் 150 பைக்கின் அடிச்சட்டத்தை கூடுதல் உறுதிமிக்கதாக மேம்படுத்தி இந்த பைக்கில் பயன்படுத்த இருக்கிறது சுஸுகி நிறுவனம். இந்த பைக்கில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

சுஸுகி ஜிக்ஸெர் 250 பைக்கின் இந்திய வருகை விபரம்!!

புதிய சுஸுஜி ஜிக்ஸெர் 250 பைக்கில் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றிருக்கும். யமஹா எஃப்இசட்25 பைக்கிற்கு நேர் போட்டியான விலையிலும், ரகத்திலும் இந்த புதிய சுஸுகி ஜிக்ஸெர் 250 பைக் நிலைநிறுத்தப்படும்.

Source: Autocar India

Most Read Articles
English summary
The Suzuki Gixxer 150 is one of the best-selling 150cc bikes in the Indian market. But the Japanese two-wheeler maker does not offer any higher capacity bikes in the entry-level segment. Now, Autocar India reports that Suzuki will launch the Gixxer 250 in the country in 2019.
Story first published: Saturday, July 21, 2018, 14:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X