2018 ஆட்டோ எக்ஸ்போவில் அட்டகாசமாக காட்சிக்கு வந்த புதிய சுஸுகி இன்ட்ரூடர் 150 எஃப்.ஐ பைக்..!!

By Azhagar

இந்தியாவின் மோட்டார் சைக்கிள் ஆர்வலர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த சுஸுகி இன்ட்ரூடர் 150 எஃப்.ஐ பைக் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடப்பட்டது.

சுஸுகி இன்ட்ரூடர் 150 எஃப்ஐ பைக்; ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

குளிர் பிரதேசங்கள், எஞ்சின் உந்துதல் கோளாறு மற்றும் திராட்டிலுக்கான பயன்பாடு போன்ற சூழ்நிலைகளிலும் இன்ட்ரூடர் 150 பைக் சிறப்பாக செயல்படும் என்கிறது சுஸுகி.

சுஸுகி இன்ட்ரூடர் 150 எஃப்ஐ பைக்; ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

பார்த்தால் கார்பூரேட்டர் வெர்ஷன் போல இருக்கும் இந்த பைக்கின் ஹேண்டில்பாரில் எஃப்.ஐ பேட்ஜிங் செய்யப்பட்டுள்ளது.

ஹெலோஜென் முகப்பு விளக்குகள், பின் விளக்குகள் ஆகியவை எல்.இ.டி திறனில் ஒளிரும். மேலும் இதில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது.

சுஸுகி இன்ட்ரூடர் 150 எஃப்ஐ பைக்; ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

முந்தைய மாடலை போலவே புதிய சுஸுகி இன்ட்ரூடர் எஃப்.ஐ பைக்கில் கார்பூரேட்டர் வெர்ஷன் 154.9சிசி SOHC, ஏர்-கூல்டு எஞ்சின் உள்ளது. இது அதிகப்பட்சமாக 14.6 பிஎச்பி பவர் மற்றும் 14 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.

சுஸுகி இன்ட்ரூடர் 150 எஃப்ஐ பைக்; ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

செயின் டிரைவ் சிஸ்டத்தில் வழியே ரியர் வீல் டிரைவிங் பெற்ற புதிய சுஸுகி இன்ட்ரூடர் 150 எஃப்.ஐ பைக்கில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

முன்பக சக்கரத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க்ஸ் மற்றும் பின் சக்கரத்தில் மோனோஷாக் அப்ஸபர்கள் சஸ்பென்ஷன் தேவையை பூர்த்தி செய்கின்றன.

சுஸுகி இன்ட்ரூடர் 150 எஃப்ஐ பைக்; ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

சிங்கிள் சேன ஏபிஎஸ் பாதுகாப்பு அம்சம் பெற்ற இந்த பைக்கின் இரண்டு சக்கரங்களிலும் டிஸ் பிரேக் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளன.

சுஸுகி இன்ட்ரூடர் 150 எஃப்.ஐ பைக்கின் எடை 149 கிலோ. இது 11 லிட்டர் எரிவாயு கொள்ளவுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

Recommended Video - Watch Now!
Under-Aged Rider Begs The Policewomen To Spare Him - DriveSpark
சுஸுகி இன்ட்ரூடர் 150 எஃப்ஐ பைக்; ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

2018 ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சுஸுகி நிறுவனம் இதை விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் கார்பூரேட்டர் வெர்ஷன் பெற்ற தற்போதைய இன்ட்ரூடர் மாடலின் விலை ரூ. 99,995 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி).

சுஸுகி இன்ட்ரூடர் 150 எஃப்ஐ பைக்; ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை பெற்றுள்ள இந்த புதிய இன்ட்ரூடர் 150 எஃப்.ஐ பைக்கின் விலை கார்பூரேட்டர் வெர்ஷனை விட ரூ. 3000 முதல் ரூ. 4000 வரை கூடுதலாக நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

Most Read Articles

English summary
Read in Tamil: Suzuki Intruder 150 FI Unveiled; Expected Launch Date & Price. Click for Details...
Story first published: Tuesday, February 13, 2018, 15:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X