அம்பானிகளின் தொழிலுக்கு வேட்டு வைக்கும் புதிய பைக்... மதுரை இளம் விஞ்ஞானியின் அசத்தல் கண்டுபிடிப்பு

மதுரை மாணவர் ஒருவர் கண்டுபிடித்துள்ள புதிய பைக், அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. இதன் சிறப்பம்சங்கள் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மதுரை மாணவர் ஒருவர் கண்டுபிடித்துள்ள புதிய பைக், அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. இதன் சிறப்பம்சங்கள் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தண்ணீரில் பைக் இயங்குவது இப்படித்தான்... ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் மதுரை மாணவரின் கண்டுபிடிப்பு...

சர்வதேச அளவில் பெட்ரோல், டீசலுக்கான தேவை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை, முன் எப்போதையும் விட தற்போது உயர்ந்து கொண்டே உள்ளது. அத்துடன் பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் சுற்றுச்சூழலை வெகுவாக பாதிக்கின்றன.

தண்ணீரில் பைக் இயங்குவது இப்படித்தான்... ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் மதுரை மாணவரின் கண்டுபிடிப்பு...

இதனால் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மாற்றாக விளங்க கூடிய மாற்று எரிபொருட்களை அதிக அளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தே ஆக வேண்டும் என்ற நெருக்கடி, உலகின் அனைத்து நாடுகளுக்கும் தற்போது ஏற்பட்டுள்ளது.

தண்ணீரில் பைக் இயங்குவது இப்படித்தான்... ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் மதுரை மாணவரின் கண்டுபிடிப்பு...

எத்தனால், மெத்தனால் மற்றும் சிஎன்ஜி உள்ளிட்டவை, பெட்ரோல் மற்றும் டீசலுக்கான சிறந்த மாற்று எரிபொருட்களாக கருதப்படுகின்றன. எனவே இத்தகைய மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.

தண்ணீரில் பைக் இயங்குவது இப்படித்தான்... ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் மதுரை மாணவரின் கண்டுபிடிப்பு...

இந்த சூழலில், மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள ரெங்கசாமிபுரம் கிராமத்தை சேர்ந்த முருகன் என்ற இளம் விஞ்ஞானி, புதிய பைக் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இந்த பைக்கின் சிறப்பம்சம் என்னவென்று தெரிந்தால், நீங்கள் நிச்சயமாக இளம் விஞ்ஞானி முருகனை பாராட்டாமல் இருக்க மாட்டீர்கள்.

தண்ணீரில் பைக் இயங்குவது இப்படித்தான்... ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் மதுரை மாணவரின் கண்டுபிடிப்பு...

இளம் விஞ்ஞானி முருகன் கண்டுபிடித்துள்ள புதிய பைக், தண்ணீரில் இயங்க கூடியது!! தண்ணீரில் எப்படி பைக் இயங்குகிறது? என்ற கேள்விக்கு முருகன் பதில் அளிக்கையில், ''நான் கண்டுபிடித்துள்ள பைக்கை ஸ்டார்ட் செய்வதற்கு மட்டும் பெட்ரோல் தேவைப்படும்.

தண்ணீரில் பைக் இயங்குவது இப்படித்தான்... ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் மதுரை மாணவரின் கண்டுபிடிப்பு...

எனவே பைக்கை ஸ்டார்ட் செய்யும் நேரங்களில் மட்டும் பெட்ரோலை ஊற்றினால் போதுமானது. மற்றபடி பைக் இயங்க, தண்ணீர் மட்டும் இருந்தாலே போதும். நான் கண்டுபிடித்துள்ள பைக்கின் ஒருபுறத்தில், 1 லிட்டர் தண்ணீருக்கு 200 கிராம் என்ற அளவில் உப்பை கலந்து வைத்துள்ளேன்.

தண்ணீரில் பைக் இயங்குவது இப்படித்தான்... ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் மதுரை மாணவரின் கண்டுபிடிப்பு...

அத்துடன் அதற்குள் சோலார் பேனலுடன் கூடிய பேட்டரியையும் இணைத்துள்ளேன். இதன்மூலமாக, உப்பு கலந்த தண்ணீரில் இருந்து, ஆக்ஸிஜன் தனியாக பிரிந்து வெளியேறி விடுகிறது. அத்துடன் ஹைட்ரஜன் பைக்கின் இன்ஜினுக்குள் செல்கிறது.

தண்ணீரில் பைக் இயங்குவது இப்படித்தான்... ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் மதுரை மாணவரின் கண்டுபிடிப்பு...

இதன்மூலமாகவே பைக் இயங்குகிறது. இதுபோன்ற பல்வேறு கண்டுபிடிப்புகளை நான் உருவாக்கியுள்ளேன். இதற்கு முன்பாக வேர்க்கடலையை உரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்தேன். இதற்காக 'இளம் விஞ்ஞானி' என்ற விருதை, 'ஸ்பேஸ் கிட்ஸ்' என்ற அமைப்பு எனக்கு வழங்கியது.

தண்ணீரில் பைக் இயங்குவது இப்படித்தான்... ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் மதுரை மாணவரின் கண்டுபிடிப்பு...

என்னிடம் இதுபோல் இன்னும் பல்வேறு திட்டங்கள் உள்ளன. எனக்கு உதவி செய்ய அரசாங்கம் முன்வந்தால், இன்னும் பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளை, என்னால் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நடைமுறைக்கு கொண்டு வர முடியும் என உறுதியாக நம்புகிறேன்.

தண்ணீரில் பைக் இயங்குவது இப்படித்தான்... ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் மதுரை மாணவரின் கண்டுபிடிப்பு...

தற்போதைய நிலையில், எனது கண்டுபிடிப்புகள் குறித்து, மாணவர்களுக்கு விளக்குவதை தலையாய பணியாக செய்து கொண்டுள்ளேன். இதற்காக பள்ளிகள் தோறும் சென்று, எனது அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்து வருகிறேன்'' என்றார்.

தண்ணீரில் பைக் இயங்குவது இப்படித்தான்... ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் மதுரை மாணவரின் கண்டுபிடிப்பு...

பல்வேறு பள்ளிகளுக்கு சென்று, தனது அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்து வரும் இளம் விஞ்ஞானி முருகனும் ஓர் மாணவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மதுரை அரசு ஐடிஐ-யில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

தண்ணீரில் பைக் இயங்குவது இப்படித்தான்... ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் மதுரை மாணவரின் கண்டுபிடிப்பு...

இந்த சூழலில், ஹேக்கத்தான் என்ற அறிவியல் நிகழ்ச்சி, கோவை மாநகரில் சமீபத்தில் நடைபெற்றது. இதில், இளம் விஞ்ஞானி முருகன் கலந்து கொண்டார். அத்துடன் தான் கண்டுபிடித்த தண்ணீரில் இயங்கும் பைக்கை, அங்கு அவர் காட்சிக்கும் வைத்திருந்தார்.

தண்ணீரில் பைக் இயங்குவது இப்படித்தான்... ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் மதுரை மாணவரின் கண்டுபிடிப்பு...

அப்போதே இளம் விஞ்ஞானி முருகனுக்கு பாராட்டுக்கள் குவிந்தது. இந்த சூழலில், தமிழ்நாடு அனைத்து மின் பணியாளர் முன்னேற்ற நல சங்கத்தின் ஆண்டு விழா, கடந்த இரு நாட்களுக்கு முன்பு, சென்னை வடபழனியில் நடைபெற்றது.

தண்ணீரில் பைக் இயங்குவது இப்படித்தான்... ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் மதுரை மாணவரின் கண்டுபிடிப்பு...

தமிழ் தி இந்து வெளியிட்ட செய்தியின்படி, இந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொண்ட இளம் விஞ்ஞானி முருகன், தான் கண்டுபிடித்த தண்ணீரில் இயங்கும் பைக்கை அறிமுகம் செய்து, அனைவருக்கும் செயல் விளக்கம் அளித்தார். அத்துடன் தண்ணீர் மூலம் பைக்கை இயக்கி காட்டி அனைவரையும் வாய் பிளக்க வைத்தார்.

தண்ணீரில் பைக் இயங்குவது இப்படித்தான்... ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் மதுரை மாணவரின் கண்டுபிடிப்பு...

இளம் விஞ்ஞானி முருகன் சிறு வயதில் இருந்தே அறிவியல் மீதும், புதிய புதிய கண்டுபிடிப்புகள் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இந்த ஆர்வம் காரணமாகதான், அவரால் பல்வேறு கண்டுபிடிப்புகளை செயல்பாட்டிற்கு கொண்டு வர முடிகிறது.

தண்ணீரில் பைக் இயங்குவது இப்படித்தான்... ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் மதுரை மாணவரின் கண்டுபிடிப்பு...

ஆனால் இவ்வளவு திறமைகள் இருந்தும் கூட, இளம் விஞ்ஞானி முருகனுக்கு போதிய அளவில் பொருளாதார வசதிகள் இல்லை. இதன் காரணமாக, தனது கண்டுபிடிப்புகளுக்கு அவரால் உரிய அங்கீகாரத்தை பெற முடியவில்லை.

தண்ணீரில் பைக் இயங்குவது இப்படித்தான்... ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் மதுரை மாணவரின் கண்டுபிடிப்பு...

அத்துடன் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளையும் அவரால் செயல்பாட்டிற்கு கொண்டு வர முடியவில்லை. அவருக்கு உதவி செய்ய மத்திய, மாநில அரசுகள் முன்வந்தால், சமூகத்திற்கு பயன்படக்கூடிய பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை அவரால் கண்டுபிடிக்க முடியும்.

தண்ணீரில் பைக் இயங்குவது இப்படித்தான்... ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் மதுரை மாணவரின் கண்டுபிடிப்பு...

தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுக்க, முருகன் போன்ற இளம் விஞ்ஞானிகள் மற்றும் அவர்களுடைய கண்டுபிடிப்புகள் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாகி கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் அவர்களது கண்டுபிடிப்புகள் எதுவும் சொல்லிக்கொள்ளும்படி நடைமுறைக்கு வருவதே இல்லை.

தண்ணீரில் பைக் இயங்குவது இப்படித்தான்... ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் மதுரை மாணவரின் கண்டுபிடிப்பு...

அவர்களுக்கு கை கொடுத்து தூக்கி விட வேண்டிய மத்திய மற்றும் மாநில அரசுகளின் உதவி, அவர்களுக்கு பெரிய அளவில் கிடைப்பது இல்லை என்பதே இதற்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
This Bike Runs On Water! Madurai Youngster's Achievement. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X