மலைடா.. அண்ணாமல.. பழைய நண்பனை வீழ்த்தி முதலிட அரியணையில் ஹீரோ ஸ்பிளெண்டர்!

2018ம் ஆண்டு மே மாதத்தில் அதிகம் விற்பனையான டூவீலர்களின் பட்டியலில், ஹீரோ நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் முதலிடத்தை பிடித்துள்ளது. முதலிடத்தில் இருந்து வந்த ஹோண்டா ஆக்டிவா 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

By Arun

2018ம் ஆண்டு மே மாதத்தில் அதிகம் விற்பனையான டூவீலர்களின் பட்டியலில், ஹீரோ நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் முதலிடத்தை பிடித்துள்ளது. முதலிடத்தில் இருந்து வந்த ஹோண்டா ஆக்டிவா 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பழைய நண்பனும், தற்போதைய எதிரியுமான ஹோண்டாவை வீழ்த்தியதால், ஹீரோ பெரு மகிழ்ச்சியில் உள்ளது.

மலைடா.. அண்ணாமல.. பழைய நண்பனை வீழ்த்தி முதலிட அரியணையில் ஹீரோ ஸ்பிளெண்டர்!

2018ம் ஆண்டு மே மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனையான டூவீலர்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், வழக்கமாக முதலிடத்தில் இருந்து ஹோண்டா ஆக்டிவாவை பின்னுக்கு தள்ளி, ஹீரோவின் ஸ்பிளெண்டர் முதல் இடத்தை பிடித்துள்ளது.

மலைடா.. அண்ணாமல.. பழைய நண்பனை வீழ்த்தி முதலிட அரியணையில் ஹீரோ ஸ்பிளெண்டர்!

கடந்த மே மாதத்தில் மொத்தம் 2,80,763 ஸ்பிளெண்டர் பைக்குகளை ஹீரோ நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதே மாதத்தில் ஹோண்டா நிறுவனம் மொத்தம் 2,72,475 ஆக்டிவா ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்திருக்கிறது.

மலைடா.. அண்ணாமல.. பழைய நண்பனை வீழ்த்தி முதலிட அரியணையில் ஹீரோ ஸ்பிளெண்டர்!

இதன்மூலமாக ஹீரோ ஸ்பிளெண்டர் மீண்டும் முதலிட அரியணையில் ஏறியுள்ளது. அதிகம் விற்பனையான டூவீலர்களின் பட்டியலில், ஹீரோ ஸ்பிளெண்டர் பைக், கடந்த 2 ஆண்டுகளில் 2வது முறையாக முதல் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மலைடா.. அண்ணாமல.. பழைய நண்பனை வீழ்த்தி முதலிட அரியணையில் ஹீரோ ஸ்பிளெண்டர்!

பொதுவாகவே ஸ்கூட்டர்களின் விற்பனை சமீப காலமாக சரிந்து வருகிறது. இதன் காரணமாகதான் ஆக்டிவா ஸ்கூட்டரின் விற்பனையும் கணிசமாக குறைந்திருக்கும் என்பது ஆட்டோமொபைல் வல்லுனர்களின் வாதமாக இருக்கிறது.

மலைடா.. அண்ணாமல.. பழைய நண்பனை வீழ்த்தி முதலிட அரியணையில் ஹீரோ ஸ்பிளெண்டர்!

3வது இடத்தை ஹீரோ நிறுவனத்தின் எச்எப் டீலக்ஸ் பைக் பிடித்திருக்கிறது. மே மாதத்தில் மட்டும் 1,84,131 எச்எப் டீலக்ஸ் பைக்குகள் விற்பனையாகியுள்ளன. 4வது இடம் ஹோண்டா நிறுவனத்தின் சிபி ஷைன் பைக்கிற்கு செல்கிறது.

மலைடா.. அண்ணாமல.. பழைய நண்பனை வீழ்த்தி முதலிட அரியணையில் ஹீரோ ஸ்பிளெண்டர்!

2018ம் ஆண்டு மே மாதத்தில், ஹோண்டா நிறுவனம் மொத்தம் 99,812 சிபி ஷைன் பைக்குகளை விற்பனை செய்திருக்கிறது. வழக்கம் போலவே ஹீரோ நிறுவனத்தின் பேஷன் பைக்கை விட சிபி ஷைன்தான் அதிகம் விற்பனையாகி வருகிறது.

மலைடா.. அண்ணாமல.. பழைய நண்பனை வீழ்த்தி முதலிட அரியணையில் ஹீரோ ஸ்பிளெண்டர்!

ஏனெனில் இந்த பட்டியலில் பேஷன் பைக்கிற்கு 5வது இடம்தான் கிடைத்திருக்கிறது. மே மாதத்தில் மொத்தம் 96,389 ஹீரோ பேஷன் பைக்குகள்தான் விற்பனையாகியுள்ளன. தொடர்ச்சியாக ஹீரோ பேஷன் பைக்கை, ஹோண்டா சிபி ஷைன் விற்பனை எண்ணிக்கையில் வீழ்த்தி வருகிறது.

மலைடா.. அண்ணாமல.. பழைய நண்பனை வீழ்த்தி முதலிட அரியணையில் ஹீரோ ஸ்பிளெண்டர்!

இதுதவிர கடந்த 2017ம் ஆண்டு மே மாதத்தில் மொத்தம் 86,600 சிபி ஷைன் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் 2018ம் ஆண்டு மே மாதத்தில் 99,812 சிபி ஷைன் பைக்குகளை ஹோண்டா விற்றுள்ளது. இந்த வகையில், சிபி ஷைன் பைக்குகளின் விற்பனை 15.25 சதவீதம் உயர்ந்திருக்கிறது.

மலைடா.. அண்ணாமல.. பழைய நண்பனை வீழ்த்தி முதலிட அரியணையில் ஹீரோ ஸ்பிளெண்டர்!

அதே சமயம் கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் மொத்தம் 89,399 ஹீரோ பேஷன் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. 2018ம் ஆண்டு மே மாதத்தில், ஹீரோ பேஷன் பைக்கின் விற்பனை எண்ணிக்கை 96,389ஆக உயர்ந்துள்ளது. 7.8 சதவீத வளர்ச்சி என்றாலும், சிபி ஷைனிடம் பேஷன் தொடர்ந்து பின்தங்குகிறது.

மலைடா.. அண்ணாமல.. பழைய நண்பனை வீழ்த்தி முதலிட அரியணையில் ஹீரோ ஸ்பிளெண்டர்!

2018ம் ஆண்டு மே மாதம் அதிகம் விற்பனையான டூவீலர்களின் பட்டியலில், 6வது இடத்தை டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் பிடித்திருக்கிறது. இந்த பட்டியலில் இருக்கும் ஒரே மொபட் இதுதான். மொத்தம் 73,067 டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் மொபட்டுகள், கடந்த மே மாதம் விற்பனையாகியுள்ளன.

மலைடா.. அண்ணாமல.. பழைய நண்பனை வீழ்த்தி முதலிட அரியணையில் ஹீரோ ஸ்பிளெண்டர்!

கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் 70,253 டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் விற்பனை செய்யப்பட்டிருந்தது. 2018ம் ஆண்டு மே மாதம் அதன் எண்ணிக்கை 73,067 என அதிகரித்துள்ளது. எனினும் கடந்தாண்டு மே மாதத்தை போலவே தற்போதைய மே மாதத்திலும் 6வது இடத்தையே டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் தக்கவைத்துள்ளது.

மலைடா.. அண்ணாமல.. பழைய நண்பனை வீழ்த்தி முதலிட அரியணையில் ஹீரோ ஸ்பிளெண்டர்!

72,102 என்ற எண்ணிக்கையுடன் இந்த பட்டியலில், ஹீரோ கிளாமர் 7வது இடத்தில் உள்ளது. கடந்த 2017 மே மாதமும் மொத்தம் 67,515 என்ற எண்ணிக்கையுடன் ஹீரோ கிளாமர் 7வது இடத்தில்தான் இருந்தது. தற்போது எக்எஸ்எல் சூப்பரை போல, விற்பனை அதிகரித்திருந்தாலும், அதே இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது.

மலைடா.. அண்ணாமல.. பழைய நண்பனை வீழ்த்தி முதலிட அரியணையில் ஹீரோ ஸ்பிளெண்டர்!

8வது இடத்தை பஜாஜ் பல்சர் கைப்பற்றியிருக்கிறது. கடந்த மே மாதத்தில் மொத்தம் 70,056 பஜாஜ் பல்சர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 9வது இடத்தை பஜாஜ் நிறுவனத்தின் சிடி (64,622), 10வது மற்றும் கடைசி இடத்தை டிவிஎஸ் ஜூபிடர் (58,098) பிடித்திருக்கின்றன.

மலைடா.. அண்ணாமல.. பழைய நண்பனை வீழ்த்தி முதலிட அரியணையில் ஹீரோ ஸ்பிளெண்டர்!

2018ம் ஆண்டு மே மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனையான டூவீலர்களின் பட்டியலில், ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவாவுக்கு பிறகு இடம் பெற்றிருக்கும் ஒரே ஸ்கூட்டர் டிவிஎஸ் நிறுவனத்தின் ஜூபிடர்தான்.

Most Read Articles
English summary
Top 10 selling Two Wheelers in May 2018; Hero Splendor beats Honda Activa. Read in tamil.
Story first published: Monday, June 25, 2018, 17:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X