ஜூலையில் விற்பனையான டாப் 10 பைக் பட்டியல்; ஆக்டிவா விற்பனையில் டாப்...

இந்தியாவில் டூவீலர் விற்பனையில் கடந்த மாதம் முதலிடம் பிடித்திருந்த ஹோண்டா ஆக்டிவாவே இந்த மாதமும் மொத்தம் 2,86,380 வாகனங்களை விற்று முதலிடத்தை படித்துள்ளது. இது தொடர்ச்சியாக இரண்டாவது மாதம் ஆக்டிவா

By Balasubramanian

இந்தியாவில் டூவீலர் விற்பனையில் கடந்த மாதம் முதலிடம் பிடித்திருந்த ஹோண்டா ஆக்டிவாவே இந்த மாதமும் மொத்தம் 2,86,380 வாகனங்களை விற்று முதலிடத்தை படித்துள்ளது. இது தொடர்ச்சியாக இரண்டாவது மாதம் ஆக்டிவா முதல் இடத்தில் உள்ளது.

ஜூலையில் விற்பனையான டாப் 10 பைக் பட்டியல்; ஆக்டிவா விற்பனையில் டாப்...

ஆக்டிவா ஸ்கூட்டர் முதலிடத்தை பிடித்த நிலையில் ஹீரோ நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் பைக் மொத்தம் 2,60,865 வாகனங்களை விற்பனை செய்து இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

ஜூலையில் விற்பனையான டாப் 10 பைக் பட்டியல்; ஆக்டிவா விற்பனையில் டாப்...

சுமார் 2 ஆண்டுகளாக அசைக்க முடியாமல் தொடர்ந்து முதலிடத்தில் இருந்த ஸ்பிளெண்டர் விற்பனையை ஆக்டிவா பைக் கடந்த மே மாதம் முதன் முதலாக முறியடித்தது.

ஜூலையில் விற்பனையான டாப் 10 பைக் பட்டியல்; ஆக்டிவா விற்பனையில் டாப்...

ஆனால் அதே மே மாதத்தில் ஸ்கூட்டர் விற்பனை மார்கெட்டில் சுமார் 15 மாதங்களுக்கு பிறகு சுமார் 1.4 சதவீதம் வரை சரிந்தது. அப்பொழுது இந்தியாில் மொத்தம் 5,55,467 ஸ்கூட்டர்கள் தான் மே மாதத்தில் விற்பனையாகியது.

ஜூலையில் விற்பனையான டாப் 10 பைக் பட்டியல்; ஆக்டிவா விற்பனையில் டாப்...

இளைஞர்களை மனதை பெரிதும் கவர்ந்த ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் கடந்தாண்டு ஜூலை மாத விற்பனையில் 10ம் இடத்தை பிடித்திருந்தது. ஆனால் அந்த பைக் இந்தாண்டு ஜூலை விற்பனையில் டாப்10 பட்டியலிலேயே இல்லை.

Models 2017-07-01 Rank Models 2018-07-01
Activa 292669 1 Activa 286380
Splendor 222458 2 Splendor 260865
HF Deluxe 155908 3 HF Deluxe 183694
CB Shine 81704 4 Passion 88354
Passion 79778 5 CB Shine 86160
Glamour 77589 6 CT 76776
Jupiter 62707 7 Glamour 74553
TVS XL Super 60589 8 TVS XL Super 67106
Pulsar 56953 9 Jupiter 66632
Classic 350 42967 10 Pulsar 63388
ஜூலையில் விற்பனையான டாப் 10 பைக் பட்டியல்; ஆக்டிவா விற்பனையில் டாப்...

மூன்றாம் இடத்தை பொருத்தவரை ஹீரோவில் எச்எப் டீலக்ஸ் பைக் தொடர்ந்து மூன்றாம் இடத்தை பிடித்து வருகிறது. இந்த பைக் கடந்த மாதம் மொத்தம் 1,83,694 பைக்குகள் விற்பனையாகியுள்ளது.

ஜூலையில் விற்பனையான டாப் 10 பைக் பட்டியல்; ஆக்டிவா விற்பனையில் டாப்...

அதே நிறுவனத்தின் பேஷன் பைக் மொத்தம் 88,354 பைக்குகளை விற்று நான்காம் இடத்தை பிடித்துள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் சிபி ஷைன் பைக் 5ம் இடத்திற்கு தள்ளப்பட்டது. அந்த பைக் மொத்தம் 86,160 பைக்குகள் தான் விற்பனையாகியுள்ளது.

ஜூலையில் விற்பனையான டாப் 10 பைக் பட்டியல்; ஆக்டிவா விற்பனையில் டாப்...

இந்த பட்டியலில் 6வது இடத்தை பஜாஜ் சிடி 100 பைக் பெற்றுள்ளது. கடந்த மாதம் மொத்தம் 76,776 பைக்குகள் விற்பனையாகியுள்ளது.

ஜூலையில் விற்பனையான டாப் 10 பைக் பட்டியல்; ஆக்டிவா விற்பனையில் டாப்...

கடந்தாண்டு ஜூலை மாத விற்பனையில் 6வது இடத்தில் இருந்த ஹூரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் கிளாமர் பைக் கடந்தமாதம் 7வது இடத்திற்கு தள்ளபப்பட்டுள்ளது. இந்த பைக் மொத்தம் 74,553 எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளது.

ஜூலையில் விற்பனையான டாப் 10 பைக் பட்டியல்; ஆக்டிவா விற்பனையில் டாப்...

டிவிஎஸ் எக்ஸல் தான் இந்த பட்டியலில் உள்ள ஒரே மொபட் இது பட்டியலில் எட்டாம் இடத்தை பிடித்துள்ளது. இது மொத்தம் 67,106 என்ற எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளது.

ஜூலையில் விற்பனையான டாப் 10 பைக் பட்டியல்; ஆக்டிவா விற்பனையில் டாப்...

டிவிஎஸ் நிறுவனத்தின் பிரபல ஸ்கூட்டரான ஜூப்பீட்டர் மொத்தம் 66,632 வானகங்களை விற்பனை செய்து 9வது இடத்தில் உள்ளது. இது கடந்தாண்டு இதே காலகட்டத்தில் நடந்த விற்பனையை காட்டிலும் அதிகம்.

ஜூலையில் விற்பனையான டாப் 10 பைக் பட்டியல்; ஆக்டிவா விற்பனையில் டாப்...

இந்த பட்டியலில் கடைசி இடத்தை பஜாஜ் பல்சர் பைக் பெற்றுள்ளது. இந்த பைக் மொத்தம் 63,388 வானகங்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு ஜூலை மாத விற்பனை பட்டியலிலேயே இல்லாத பஜாஜ் சிடி பைக் இந்தாண்டு நேரடியாக 6ம் இடத்தை பிடித்துள்ளதும். கடந்தாண்டு பட்டியலில் 10 இடத்தில் இருந்த ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் இந்தாண்டு பட்டியலிலேயே இல்லாததும் குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

Most Read Articles
English summary
Top 10 two-wheelers sold in July 2018. Read in Tamil
Story first published: Tuesday, August 21, 2018, 14:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X