கடந்த ஜூன் மாதம் விற்பனையான டாப் 10 பைக்குகள்

இந்தியாவின் பிரபலமான ஸ்கூட்டரான ஹோண்டா ஆக்டிவா விற்பனையில் மீண்டும் ஹீரோ ஸ்பெளண்டர் பைக்கை பின்னுக்கு தள்ளி நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. இந்த செய்தியில் கடந்த ஜூன் மாதம் விற்பனையான இந்தியாவின் டாப

By Balasubramanian

இந்தியாவின் பிரபலமான ஸ்கூட்டரான ஹோண்டா ஆக்டிவா விற்பனையில் மீண்டும் ஹீரோ ஸ்பெளண்டர் பைக்கை பின்னுக்கு தள்ளி நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. இந்த செய்தியில் கடந்த ஜூன் மாதம் விற்பனையான இந்தியாவின் டாப் 10 பைக்குகள் பற்றி பார்க்கலாம்.

கடந்த ஜூன் மாதம் விற்பனையான டாப் 10 பைக்குகள்

சுமார் 2 ஆண்டுகள் விற்பனையில் கொடிகட்டி பறந்த ஹோண்டா ஆக்டிவா கடந்த மே மாதம் தனது விற்பனையை சரித்து முதலிடத்தை நலுவ விட்டது. அந்த மாதம் ஸ்பெளண்டர் தான் முதலிடத்தை பிடித்தது. ஆக்டிவா இரண்டாம் இடத்திற்கு தள்ளதப்பட்டது. அந்த கால கட்டத்தில் ஸ்கூட்டர் விற்பனை 15 மாதங்களுக்கு பிறகு வேகமாக குறைந்தது.

கடந்த ஜூன் மாதம் விற்பனையான டாப் 10 பைக்குகள்

கடந்த மே மாதம் தான் மார்கெட்டில் ரிவர்ஸ் டிரெண்ட் ஏற்பட துவங்கியது. கடந்த 15 மாதத்தில் ஸ்கூட்டர் விற்பனை 1.40 சதவீதம் அதவாது 5,55,467 வாகனங்கள் குறைவாக விற்பனையாகின. ஆனால் அந்த காலகட்டத்தில் ஒட்டு மொத்த இருசக்கர வாகனங்களின் விற்பனை 9.19 சதவீதம் அதிகரித்தது. அதாவது. 18,50,093 வாகனங்கள் விற்பனையானது. இதன் மூலம் ஸ்கூட்டரை விட பைக்கிற்கு நல்ல மவுசு ஏற்பட்டது தெரியவந்தது.

கடந்த ஜூன் மாதம் விற்பனையான டாப் 10 பைக்குகள்

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் 2,92,294 வாகனங்கள் விற்பனையானது. ஸ்பெளண்டர் பைக் மொத்தம் 2,78,169 வாகனங்கள் தான் விற்பனையாகியுள்ளது. இந்த தகவலை இந்தியா ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் சொசைட்டி தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் விற்பனையான டாப் 10 பைக்குகள்

கடந்தாண்டு இதே காலகட்டத்தில் ஆக்டிவா ஸ்கூட்டர் 2,34,767 வாகனங்களையும், ஸ்பெளண்டர் பைக் 2,19,103 வாகனங்களையும் விற்பனை செய்திருந்தது. குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூன் மாத விற்பனையில் ஹீரோ எச்எப் டீலக்ஸ் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. அந்த பைக் மொத்தம் 1,82,883 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் விற்பனையான டாப் 10 பைக்குகள்

தொடர்ந்து 4வது இடத்தை அதே ஹீரோ நிறுவனத்தின் பேசன் பிடித்துள்ளது. இந்த பைக் மொத்தம் 97,715 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 4வது இடத்தில்இருந்த கிளாமர் பைக் இந்தாண்டு கடும் விற்பனை சரிவை கண்டு 9வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

S.No. Models 2017

1.

Activa 234,767
2. Splendor 219,103
3. HF Deluxe 154,655
4. Glamour 78,889
5. Passion 76,605
6. CB Shine 69,108
7. TVS XL Super 65,302
8. Jupiter 60,570
9. Classic 350 42,149
10. Maestro 38,822
கடந்த ஜூன் மாதம் விற்பனையான டாப் 10 பைக்குகள்

ஹேண்டா சிபி ஷைன் மாடல் பைக் கடந்தாண்டு 6வது இடத்தில் இருந்து இந்தாண்டு 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கடந்த ஜூன் மாதம் மட்டும் மொத்தம் 96,505 சிபி ஷைன் பைக்குகள் விற்பனையாகியுள்ளன.

S.No. Models 2018

1.

Activa 292,294
2. Splendor 278,169
3. HF Deluxe 182,883
4. Passion 97,715
5. CB Shine 96,505
6. Pulsar 71,593
7. TVS XL Super 66,791
8. CT 66,314
9. Glamour 63,417
10. Jupiter 59,725
கடந்த ஜூன் மாதம் விற்பனையான டாப் 10 பைக்குகள்

பல்சர் பைக் தற்போது நல்ல விற்பனையை பெற்று வருகிறது. கடந்தாண்டு ஜூன் மாத விற்பனையில் டாப் 10பட்டியலிலேயே இல்லாத பல்சர் பைக் இந்தாண்டு ஜூன் மாத விற்பனையில் 6ம் இடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதம் மட்டும் இந்த பைக் 71,593 பைக்குகள் விற்பனையாகியுள்ளன.

கடந்த ஜூன் மாதம் விற்பனையான டாப் 10 பைக்குகள்

டிவிஎஸ் எக்ஸ்எல் பைக்கை பொருத்தவரை தொடர்ந்து 7வது இடத்திலேயே இருந்து வருகிறது.

இந்த பைக் கடந்தாண்டு ஜூன் மாதம் 65,302 வாகனங்கள் விற்பனையாகியிருந்த நிலையில் இந்தாண்டு மொத்தம் 66,791 வாகனங்கள் மட்டும் விற்பனையாகியது. ஆனால் கடந்த மே மாதம் இந்த பைக் 73,067 வாகனங்களை விற்று 6வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூன் மாதம் விற்பனையான டாப் 10 பைக்குகள்

பஜாஜ் சிடி பைக் கடந்தாண்டு ஜூன்மாதம் டாப்10 பட்டியலிலேயே இல்லை ஆனால் கடந்த மே மாதம் 9 வது இடத்தை படித்த நிலையில் ஜூன் மாதம் 66,314 வாகனங்களை விற்று 8ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் விற்பனையான டாப் 10 பைக்குகள்

முன்னரே கிளாமர் பைக் 9ம் இடம் பிடித்திருந்தது குறித்து கூறியிருந்தோம் இந்த பைக் கடந்த ஜூன் மாதம் மட்டும் 63,417 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் விற்பனையான டாப் 10 பைக்குகள்

கடந்தாண்டு ஜூன் மாதம் 60,570 வாகனங்களை விற்று 8வது இடத்தில் இருந்த டிவிஎஸ் ஜூப்பீட்டர் இந்தாண்டு 59,729 வாகனங்களை மட்டுமே விற்று 10வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

  1. சுஸுகி ஜிக்ஸெர் 250 பைக்கின் இந்திய வருகை விபரம்!!
  2. இனி புதிய பைக் வாங்கினால் 5 ஆண்டு இன்சூரன்ஸ் காட்டாயம்; கார்களுக்கு 3 ஆண்டு
  3. பிஎம்டபிள்யூ எச்பி4 ரேஸ் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!
  4. உங்கள் கார் 45 கி.மீ மைலஜ் தருமா? இதை பின்பற்றினால் சாத்தியம்
  5. சர்வமும் ஆட்டோமெட்டிக் மயம்.. சாதாரண கார்களில் கூட இடம்பெறும் புதுமையான வசதிகள்..
Most Read Articles
English summary
Top 10 two-wheelers sold in June 2018. Read in Tamil
Story first published: Saturday, July 21, 2018, 15:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X