பைக்கில் டூர் செல்ல ஏற்ற டாப் 5 பைக்குகள்

இந்தியாவில் இருக்கும் டிராப்பிற்கு காரை விட பைக் தான் பெஸ்ட். பலர் காரில் பயணம் செய்வதை விட பைக்கில்தான் பயணம் செய்கின்றனர். சிலருக்கு பைக் ரைடிங் மீது பெரும் ஆசை இருக்கிறது. நேரம் கிடைக்கும் போதெல்ல

By Balasubramanian

இந்தியாவில் இருக்கும் டிராப்பிற்கு காரை விட பைக் தான் பெஸ்ட். பலர் காரில் பயணம் செய்வதை விட பைக்கில்தான் பயணம் செய்கின்றனர். சிலருக்கு பைக் ரைடிங் மீது பெரும் ஆசை இருக்கிறது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிறிது தூரம் பைக்கில் ரைடு செல்வார்கள்.

பைக்கில் டூர் செல்ல ஏற்ற டாப் 5 பைக்குகள்

இவ்வாறாக ரைடு செல்ல வரும்பும் பலர் தங்கள் இருக்கும் பகுதியில் இருந்து அதிகபட்சம் 100 கி.மீ. உள்ளாக இருக்கிற ஏதேனும் ஒரு டூரிஸ்ட் ஸ்பாட்டிற்கு பயணம் போவதை பலர் வழக்கமாக பைத்துள்ளனர். வார விடுமுறை நாட்களில் இந்த பயணத்தை பலர் மேற்கொண்டு வருகின்றனர்.

பைக்கில் டூர் செல்ல ஏற்ற டாப் 5 பைக்குகள்

நீங்களும் இவ்வாறாக பைக்கிலேயே டூர் போர கோஷ்டியா? உங்களுக்கானது தான் இந்த செய்தி நீங்கள் பைக்கில் டூர் செல்ல சிறந்த 250 சிசிக்கும் குறைவான பைக்குகளின் பட்டியலை இங்கு வழங்கியுள்ளோம் இதில் உங்களுக்கான பைக் எது என்பதை நீங்களே தேர்ந்தேடுத்து அதில் நீங்கள் டூர் சென்றால் நல்ல அனுபவத்தை பெறலாம்.

பைக்கில் டூர் செல்ல ஏற்ற டாப் 5 பைக்குகள்

2018 ஹோண்டா சிபிஆர் 250 ஆர்

250 சிசிக்கு உட்பட பைக்கில் விலை உயர்ந்த பைக் இந்த ஹோண்டா சி.பி.ஆர்250 தான். நீண்ட தூரபயணத்திற்கு ஏற்ற சிறந்த பைக் இது தான். இதன் கச்சிதமான பேலன்ஸ், பெர்பாமன்ஸ், உறுதி ஆகிய தான் பைக்கின் பெரும் பிளஸ். 2011ம் ஆண்டு இந்த பைக் வெளியாகியிருந்தாலும் இன்று வரை இந்த பைக்கிற்கு இனணயான இன்னொரு பைக் வரவேயில்லை.

பைக்கில் டூர் செல்ல ஏற்ற டாப் 5 பைக்குகள்

இந்த பைக் 249.6 சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்யூட் கூல்டு இன்ஜினுடன் விற்பனைக்கு வருகிறது. இது 8500 ஆர்.பி. எம்மில் 26.3 பிஎஸ் பவரையும், 7000 ஆர்.பி.எம்மில் 22.9 என் எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. இதன் பவர் புல் இன்ஜின் இந்த பைக்கை விரைவாக 3 இலக்க ஸ்பிட்டிற்கு கொண்டு செல்லும். இந்த பைக் ஏபிஎஸ் வேரியன்டிலும் வருகிறது. டூர் விரும்பிகள் இந்த பைக்கை வாங்கினால் ஏபிஎஸ் வேரியண்டை வாங்கலாம்.

விலை : ரூ 1,93,666 (டில்லி எக்ஸ் ஷோரூம் விலை)

பைக்கில் டூர் செல்ல ஏற்ற டாப் 5 பைக்குகள்

சுஸூகி ஜிக்ஸர் எஸ் எப் ஏபிஎஸ்

சுஸூகி ஜிக்ஸர் எஸ் எப் பைக் 250 சிசிக்குட்பட்ட பைக்கில் ஆல் ரவுண்டராக செயல்படுகிறது. இந்த பைக் சீட்டின் வடிவமைப்பு ஹைவேயில் நெடுதூரம் பயணம் செய்யும்போது உடல் வலி ஏற்படாமல் இருக்கும். இந்த பைக் 155 சிசி ஏர் கூல்டு மோட்டார் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

பைக்கில் டூர் செல்ல ஏற்ற டாப் 5 பைக்குகள்

இந்த பைக்கின் 5வது கியரில் 90 கி.மீ. வேகத்தில் சென்றால் சொகுசான ஒரு பயண அனுபவத்தை வழங்குகிறது. இந்த பைக் 800 ஆர்பிஎம்மில் 14.8 பிஎஸ் பவரையும், 6000 ஆர்பிஎம்மில் 14 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த பைக்கில் பியூல் இன்ஜெக்ஸன் கருவி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் சிங்கள் சேனல் ஏபிஎஸ் வசதியும் உள்ளது.

விலை: ரூ 96,386 (டில்லி எக்ஸ் ஷோரூம் விலை)

பைக்கில் டூர் செல்ல ஏற்ற டாப் 5 பைக்குகள்

சுஸூகி இன்ட்ரூடர் 150 எப்ஐ

இந்த பைக் இன்ட்ரூடர் எம்1800ஆர் பைக்கின் குறைந்த சிசி வெர்ஷன், நீண்ட வீல் பேஸ், குறைந்த உயரம் உள்ள சீட், சுலபமாக கையாளக்கூடி ஹேண்டில் பார் என இந்த பைக்கில் ஏகப்பட்ட வசதிகள் உள்ளன.

பைக்கில் டூர் செல்ல ஏற்ற டாப் 5 பைக்குகள்

இந்த பைக்கின் இன்ஜின் ஜிக்ஸர் பைக்கின் இன்ஜினை ஒத்தே இருக்கிறது. இது 8000 ஆர்பிஎம்மில் 14.14 பிஎஸ் பவரையும், 6000 ஆர்பிஎம்மில் 14 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ள இந்த பைக்கில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதி உள்ளது. இந்த பைக்கில் 150 சிசி இன்ஜின் தான் இருக்கிறது ஆனால் விலை மிக அதிகமாக உள்ளது.

விலை : ரூ 1,06,896 (டில்லி எக்ஸ் ஷோரூம் விலை)

பைக்கில் டூர் செல்ல ஏற்ற டாப் 5 பைக்குகள்

பஜாஜ் அவெஞ்சர் 220 க்ரூஸ்

மார்க்கெட்டில் அதிக நாட்களாக நல்ல விற்பனையில் இருக்கும் பைக்கில் இதுவும் ஒன்று , நீண்ட தூர பயணத்திற்கு பலர் இந்த பைக்கை விரும்புகின்றனர். இந்த பைக் ஹைவே கம்போர்ட் ஹேண்டில் பார், விண்ட் சீல்டு, என இந்த பைக்கில் சொகுசு வசதிகள் உள்ளன.

பைக்கில் டூர் செல்ல ஏற்ற டாப் 5 பைக்குகள்

இந்த பைக்கில் 220 சிசி டிடிஎஸ் ஐ ஆயில் கூண்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது ஸ்டிரெஸ் இல்லாத ரேஸிங்கை வழங்ககூடியது. இதில் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக் 8400 ஆர்பிஎம்மில் 19.03 பிஎஸ் பவரையும், 7000 ஆர்பிஎம்மில் 17.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. ஆனால் இந்த பைக்கில் ஏபிஎஸ் ஒரு ஆப்ஷனாக கூட இல்லை என்பது தான் நெகட்டிவ் செய்தி

விலை : ரூ 94,963 (டில்லி எக்ஸ் ஷோரூம் விலை)

பைக்கில் டூர் செல்ல ஏற்ற டாப் 5 பைக்குகள்

பஜாஜ் பல்சர் என்எஸ்200 ஏபிஎஸ்

இந்த பைக் கே.டி.எம் 200 டியூக் பைக்கிற்கு நேரடி போட்டியாக திகழ்கிறது. ஆனால் 200 டியூக்கை விட இந்த பைக்கில் பல அம்சங்களும் வசதிகளும் இருப்பதால் இந்த பைக்கே சிறந்த பைக்காக கருதப்படுகறது. பைக்கின் சொகுசு, சீட் போஸிசன் என பல அசம்ங்கள் சிறப்பாக இருக்கிறது.

பைக்கில் டூர் செல்ல ஏற்ற டாப் 5 பைக்குகள்

இந்த பைக்கின் இன்ஜினை பொருத்தவரை 199.5 சிசி சிங்கிள் சிலிண்டர் டிரிபிள் ஸ்பார்க் டிடிஎஸ் ஐ லிக்யூட் கூலிங் பியூயல் இன்ஜெக்ஸன் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 9500 ஆர்பிஎம்மில் 23.5 பிஎஸ் பவரையும், 8000 ஆர்பிஎம்மில் 18.3 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. மேலும் இந்த பைக்கில் சிங்கள் சேனல் ஏபிஎஸ் வசதியும் உள்ளது.

விலை : ரூ 1,11411 (டில்லி எக்ஸ் ஷோரூம் விலை)

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

Most Read Articles
English summary
Top 5 Touring-friendly Bikes Under 250cc
Story first published: Saturday, June 9, 2018, 18:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X