புதிய டிவிஎஸ் ரேடியான் பைக்கின் முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!!

புதிய டிவிஎஸ் ரேடியான் பைக்கின் டிசைன் முழுக்க முழுக்க ஹீரோ ஸ்பிளென்டர் ப்ளஸ் விரும்பிகளை குறிவைத்து வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

By Saravana Rajan

ஹீரோ ஸ்பிளென்டர் ப்ளஸ் பைக் மார்க்கெட்டை குறிவைத்து டிவிஎஸ் நிறுவனம் புத்தம் புதிய ரேடியான் பைக்கை விற்பனைக்கு களமிறக்கி இருக்கிறது. இந்த புதிய டிவிஎஸ் பைக்கில் இருக்கும் முக்கிய சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய டிவிஎஸ் ரேடியான் பைக்கின் முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!!

புதிய டிவிஎஸ் ரேடியான் பைக்கின் டிசைன் முழுக்க முழுக்க ஹீரோ ஸ்பிளென்டர் ப்ளஸ் விரும்பிகளை குறிவைத்து வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இருப்பினும், கூடுதல் அம்சங்களை சேர்ந்துள்ளது. ஹெட்லைட்டிற்கு கீழே பகல்நேர விளக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் டேங்கில் தை பேடு எனப்படும் பிளாஸ்டிக் பட்டை உள்ளது. டர்ன் இண்டிகேட்டர்கள் ஏதேனும் பொருட்கள் மீது பட்டால், உடனடியாக உடைந்து விடாத வகையிலான நெகிழ்வு தன்மை கொண்ட பாகத்துடன் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய டிவிஎஸ் ரேடியான் பைக்கின் முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!!

புதிய டிவிஎஸ் ரேடியான் பைக்கில் இரட்டை டயல்கள் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஸ்பீடோமீட்டர் மற்றும் எரிபொருள் மானி தனித்தனியாக இடம்பெற்றுள்ளது. நடுவில், நியூட்ரல் இண்டிகேட்டர், சைடு ஸ்டான்டு இண்டிகேட்டர் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. கார்களில் இருப்பது போன்ற அமைப்புடன் வடிவமைத்துள்ளதாக டிவிஎஸ் தெரிவிக்கிறது.

புதிய டிவிஎஸ் ரேடியான் பைக்கின் முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!!

ஊரக வாடிக்கையாளர்களின் விரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கும் பைக்கில், ஹீரோ ஸ்பிளென்டர் பைக்கை போலவே பின்புறத்தில் சிறிய கேரியர் பொருத்தப்பட்டு இருக்கிறது. பின்னால் அமர்பவர் கெட்டியாக பிடித்துக் கொள்ள ஏதுவாக இருக்கும்.

புதிய டிவிஎஸ் ரேடியான் பைக்கின் முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!!

இந்த செக்மென்ட்டில் மிக அதிக வீல் பேஸ் கொண்ட மாடல் இதுதான். இதனால், சிறப்பான கையாளுமையை வழங்கும். இருக்கை அமைப்பு மிக வசதியாக இருப்பதும் இதன் முக்கிய அம்சம். இரண்டு பேர் வசதியாக அமர்ந்து பயணிக்கலாம்.

புதிய டிவிஎஸ் ரேடியான் பைக்கின் முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!!

டிவிஎஸ் ரேடியான் பைக்கானது கிராடில் ட்யூபியூலர் பிரேமில் உருவாக்கப்பட்டு இருக்கிிறது. அதில், கச்சிமாகவும், அடக்கமாகவும் பொருத்தப்பட்டு இருக்கிறது எஞ்சின். இந்த பைக்கில் இருக்கும் 109.7சிசி ஏர்கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 8 பிஎச்பி பவரையும், 8.7 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய டிவிஎஸ் ரேடியான் பைக்கின் முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!!

இந்த பைக்கின் எஞ்சினின் கிராங்க் சாஃப்ட்டில் விசேஷ கோட்டிங் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது உராய்வை குறைக்கும் என்பதால், அதிக செயல்திறனையும், நீடித்த உழைப்பையும் தரும். அத்துடன், இந்த பைக்கில் நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஏர் ஃபில்டர் மற்றும் ஸ்பார்க் பிளக் பொருத்தப்பட்டு இருப்பதும் ஆரம்ப கட்ட செயல்திறனில் சிறப்பாக இருக்கும்.

புதிய டிவிஎஸ் ரேடியான் பைக்கின் முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!!

இந்த பைக் லிட்டருக்கு 69.3 கிமீ மைலேஜ் தரும் என்று டிவிஎஸ் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது இது சராசரியான மைலேஜ் அளவுதான். இருப்பினும், சிறந்த எரிபொருள் சிக்கனம் கொண்ட பட்ஜெட் பைக் மாடலாக இருக்கிறது.

புதிய டிவிஎஸ் ரேடியான் பைக்கின் முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!!

புதிய டிவிஎஸ் ரேடியான் பைக்கின் முன்புறத்தில் இரண்டு டெலிஸ்கோப்பிக்ஃபோர்க்குகளும், பின்புபறத்தில் ஹைட்ராலிக் சஸ்பென்ஷன் அமைப்பும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது வழக்கமாக இந்த செக்மென்ட்டில் பயன்படுத்தப்படும் சஸ்பென்ஷன் அமைப்புதான். ஆனால், பிரேக்கிங் சிஸ்டத்தில் சிறப்பு செய்திருக்கிறது டிவிஎஸ்.

புதிய டிவிஎஸ் ரேடியான் பைக்கின் முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!!

புதிய டிவிஎஸ் ரேடியான் பைக்கில் டிரம் பிரேக்குகள்தான் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், ஹோண்டா ஆக்டிவா உள்ளிட்ட ஸ்கூட்டர்களில் கொடுக்கப்படுவது போன்ற காம்பி பிரேக்கிங் சிஸ்டம் இந்த பைக்கில் இடம்பெற்றிருக்கிறது. எந்த பிரேக்கை பிடித்தாலும், இரண்டு சக்கரங்களும் குறிப்பிட்ட அளவில் பிரேக் பவர் செலுத்தப்படுவதுதான் இந்த பிரேக்கிங் சிஸ்டம். இதனை Synchronised Braking Technology[SBS] என்று டிவிஎஸ் தெரிவிக்கிறது. இதன்மூலமாக, பிரேக் சிஸ்டத்தின் நிறுத்துதல் திறன் சிறப்பாக இருக்கும்.

புதிய டிவிஎஸ் ரேடியான் பைக்கின் முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!!

புதிய டிவிஎஸ் ரேடியான் பைக்கில் 18 அங்குல சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன், டியூரா லைஃப் எனப்படும் ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், பஞ்சர் பிரச்னையிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்பையும் தருகிறது.

புதிய டிவிஎஸ் ரேடியான் பைக்கின் முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!!

புதிய டிவிஎஸ் ரேடியான் பைக் ரூ.48,400 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. நாடுமுழுவதும் உள்ள டீலர்களில் முன்பதிவு துவங்கி இருக்கிறது. அடுத்த மாதம் முதல் டெலிவிரி கொடுக்கப்படும்.

புதிய டிவிஎஸ் ரேடியான் பைக்கின் முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!!

இந்த புதிய 110சிசி பைக் 25 வயது முதல் 35 வயது வரையிலான வாடிக்கையாளர்களை குறிவைத்து நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. ஹீரோ ஸ்பிளென்டர் தவிர்த்து, பஜாஜ் பிளாட்டினா, ஹோண்டா ட்ரீம் 110 உள்ளிட்ட பட்ஜெட் பைக் மாடல்களுடன் போட்டி போடும்.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
Top Features Of All New TVS Radeon.
Story first published: Friday, August 24, 2018, 15:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X