உங்களை கவர விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ஸ்கூட்டர்கள்

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக ஸ்கூட்டர் விற்பனை சூடுபிடித்து வருகிறது. அது எவ்வளவு தூரத்திற்கு வளர்ந்திருக்கிறது என்றால் இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் டூவீலர்களில் ஸ்கூட்டர் ரகமும் இடம் பெற்றுள்

By Balasubramanian

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக ஸ்கூட்டர் விற்பனை சூடுபிடித்து வருகிறது. அது எவ்வளவு தூரத்திற்கு வளர்ந்திருக்கிறது என்றால் இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் டூவீலர்களில் ஸ்கூட்டர் ரகமும் இடம் பெற்றுள்ளது.

உங்களை கவர விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ஸ்கூட்டர்கள்

தற்போது இந்தியாவில் அதிகமாக 100-110 சிசி ஸ்கூட்டர்கள் தான் அதிகமாக விற்பனையானாலும் சமீபகாலமாக அதிக சிசி கொண்டு ஸ்கூட்டர்கள் மீது மக்கள் ஆர்வம் கொள்ள துவங்கி விட்டனர். அதன் காரணமாவே ஹோண்டா க்ரெஸியா, அப்ரில்லா எஸ்ஆர் 125, டிவிஎஸ் என்டார்க் 125 ஆகிய ஸ்கூட்டர்கள் அறிமுகமாகியுள்ளன.

உங்களை கவர விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ஸ்கூட்டர்கள்

இந்த ஸ்கூட்டர்கள் விற்பனை களம் மாறி மக்கள் அதிக சிசி ஸ்கூட்டர்கள் பக்கம் தங்கள் விருப்பதை திருப்புவதை உணர்ந்த தயாரிப்பாளர்கள் தற்போது புதிய பிராண்ட்கள் மற்றும் தற்போது விற்பனையாகும் பிராண்ட்களின் புதிய இன்ஜின் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தவுள்ளனர். அந்த வகையில் விரைவில் வெளிரவுள்ள ஸ்கூட்டர்களை பற்றி கீழே பார்ப்போம்.

உங்களை கவர விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ஸ்கூட்டர்கள்

ஹீரோ டூயட் 125

ஹீரோ நிறுவனம் தங்களது டூயட் மற்றும் மீஸ்ட்ரோ எட்ஜ் ஆகிய பைக்குகளின் 125 சிசியை கடந்த பிப் மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் காட்சி படுத்தினர். விரைவில் அந்த பைக்குகளை அறிமுகப்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. டூயட் 125 பைக்கை பொருத்தவரை பழைய டூயட்டை விட சில ஸ்டைலிங் மற்றும் அசம்ங்களில் சில அம்டேட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன

உங்களை கவர விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ஸ்கூட்டர்கள்

முக்கிய அம்சமாக ஹீரோ நிறுவனத்தின் ஐ3எஸ் ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள 125 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இது 6750 ஆர்பிஎம்மில் 8.7 பிஎச்பி பவரையும், 5000 ஆர்பிஎம்மில் 10.2 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த ஸ்கூட்டர் எக்ஸ் ஷோரூம் விலையாக ரூ 57,000 த்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்களை கவர விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ஸ்கூட்டர்கள்

ஹீரோ மீஸ்ட்ரோ எட்ஜ் 125

முன்னர் சொன்னது படி டூயட் ஸ்கூட்டர் உடன் இந்த ஸ்கூட்டரையும் ஹீரோ நிறுவனம் வெளியிடவுள்ளது. புதிய ஸ்கூட்டரின் டிசைன் இளைய தலைமுறையினரை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. டூயட் மற்றும் மீஸ்ட்ரோ ஸ்கூட்டரில் ஒரே மாதிரி டியூன் செய்யப்பட்ட ஒரே இன்ஜின் கள் தான் பொருத்தப்பட்டுள்ளது.

உங்களை கவர விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ஸ்கூட்டர்கள்

இந்த இரண்டு ஸ்கூட்டர்களிலும் ஐ3எஸ் ஸ்மார்ட் ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம் பொருத்தப்படுகிறது. இதில் டிஜிட்டல் டிஸ்பிளே, பூட் லைட், மொபைல் சார்ஜிங் சாக்கெட்,சைடு ஸ்டாண்ட் இன்டிகேட்டர் ஆகியன பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக்கின் விலை டூயட்டை விட சற்று அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்க முடியும்.

உங்களை கவர விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ஸ்கூட்டர்கள்

சுஸூகி பார்க் மேன் ஸ்டிரீட், 125

சுஸூகி பார்க்மேஸ் ஸ்டிரீட் 125 பைக் இந்தியாவில் கடந்த பிப் மாதம் நடந்த ஆட்டோ எஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேக்ஸி ஸ்கூட்டர்களின் டிசைனை இந்த பார்க்மேன் நிறுவனம் பெற்றுள்ளது. இதில் புல் பாடி ஒர்க், உயரமான விண்ட் ஷீல்டு, பின்புறம் சற்று உயரமான சீட், எல்இடி முகப்பு விளக்கு, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கண்சோல், அலாய் வீல்கள், அட்ஜெட்டபில் பூட் பெக் பொசிசன், ஆகிய வசதிகள் இதில் உள்ளது.

உங்களை கவர விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ஸ்கூட்டர்கள்

இந்த பைக்கின் இன்ஜினை பொருத்தவரை 125 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது சுஸூகி ஆக்ஸஸ் ஸ்கூட்டரின் இன்ஜின் வேறு விதமாக டியூன் செய்யப்பட்டு இதில் பொருத்தப்படவுள்ளது. இது 10.7 பிஎச்பி பவரையும், 10 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. இந்த ஸ்கூட்டர் வரும் 19ம் தேதி விற்பனைக்கு வருகிறது. இதன் விலை ரூ 69 ஆயிரத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்களை கவர விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ஸ்கூட்டர்கள்

டுவென்டி டூ ஃப்ளோ

இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனமான டுவென்டி டூ என்ற நிறுவனம் ஃபிளோ என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கடந்த ஆட்டோ எஸ்போவில் அறிமுகப்படுத்தியது. லித்தியம் இயான் பேட்டரி பொருத்தப்ட்டுள்ள இந்த ஸ்கூட்டர் ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ், டிஜிட்டல் கன்சோல், எலெக்ட்ரானிக் பிரேக்கிங், எல்இடி லைட்கள், ஜியோ பென்சிங் ஆகிய வசதிகள் இந்த ஸ்கூட்டரில் உள்ளது.

உங்களை கவர விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ஸ்கூட்டர்கள்

இந்த ஸ்கூட்டரில் லித்தியம் இயான் பேட்டரியில் இயங்ககூடிய டிசி மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிக பட்சமாக 90 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. இதில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரி 5 மணி நேரத்தில் முழு சார்ஜ் ஏறிவிடும். முழு பேட்டரி சார்ஜில் 80 கிமீ வரை இயங்கும். அதிகபட்சமாக இந்த ஸ்கூட்டர் 60 கி.மீ. வேகத்தில் செல்லும், முதற்கட்டமாக இந்த ஸ்கூட்டர் டில்லியில் மட்டும் விற்பனையாகவுள்ளது. கடந்த ஜூன் மாதமே இந்த ஸ்கூட்டரை வெளியிட திட்டமிட்டிருந்த அந்நிறுவனம் பல்வேறு காரணங்களுக்காக விற்பனையை தாமதப்படுத்தி வருகிறது.

உங்களை கவர விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ஸ்கூட்டர்கள்

ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஹீரோ நிறுவனம் ஹீரோ எலெகட்ரிக் என்ற புதிய நிறுவனத்தை உருவாக்கி எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. ஹீரோ நிறுவனம் கடந்த 2016ம் ஆண்டு நடந்த ஆட்டோ எக்ஸ்போவிலேயே டூயட் இ என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது அது போலவேதற்போது அறிமுகம் செய்ய உள்ள ஸ்கூட்டரும் இருக்கபோவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உங்களை கவர விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ஸ்கூட்டர்கள்

இந்த ஸ்கூட்டரில் பொருத்தப்படும் எலெகட்ரிக் மோட்டார் 5 கி.வா மோட்டார் மற்று 14 என்எம் டார்க் திறன் ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் 6.5 நொடியில் 0-60 கிலோ மீட்டர் வேகத்தை தொட்டு விடும் அளவிற்கு பிக்கப் கொண்டது. இந்த ஸ்கூட்டர் ஒரு முழு சார்ஜில் 65 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும். இந்த ஸ்கூட்டரை எப்பொழுது விற்பனைக்கு கொண்டு வர வேண்டும் என்பதை அந்நிறுவனம் இன்னும் திட்டமிடவில்லை.

உங்களை கவர விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ஸ்கூட்டர்கள்

டிவிஎஸ் சிரியான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை சந்தையில் களம் இறங்க தயாராகியுள்ள டிவிஎஸ் நிறுவனம சிரியான் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரித்துள்ளது. இந்த ஸ்கூட்டர் சிறந்த பெர்பாமென்ஸ் ஸ்கூட்டராக இருக்கும்.

உங்களை கவர விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ஸ்கூட்டர்கள்

இதில் 12 கி.வா எலெக்ட்ரிக் மோட்டா் பொருத்தப்பட்டுள்ளது. இது 5.1 நொடியில் 0-60 கி.மீ. வேகத்தை பிக்கப் செய்து விடும். மேலும் இந்த ஸ்கூட்டர் முழு சார்பில் 80 கி.மீ வரை பயணம் செய்யும். மேலும் இதில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரி 60 நிமிடங்களில் 80 சதவீத சார்ஜை பெற்று விடும். டிவிஎஸ் நிறுவனம் இதன் விற்பனை குறித்து இதுவரை அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிடவில்லை. விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்களை கவர விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ஸ்கூட்டர்கள்

மஹிந்திரா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

மஹிந்திரா நிறுவனம் தான் ஏற்கனவே தயாரித்து வரும் கெஸ்டோ என்ற ஸ்கூட்டரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர தயார்படுத்தி வருகிறது. இந்நிறுவனம் ஏற்கனவே ஜென்ஸி என்ற ஸ்கூட்டரை அமெரிக்காவில் விற்பனை செய்து வருகிறது. அந்த ஸ்கூட்டரை தயாரித்த அனுபவத்தை கொண்டு இந்த ஸ்கூட்டரை தயாரிப்பதால் இதை வெற்றி பெற வைக்க பல திட்டங்களை வைத்துள்ளது. இந்த ஸ்கூட்டர் எப்பொழுது வெளியாகவுள்ளது என்பதை அந்நிறுவனமே இன்னும் முடிவு செய்யவில்லை.

உங்களை கவர விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ஸ்கூட்டர்கள்

டிவிஎஸ் 150 சிசி ஸ்கூட்டர்

டிவிஎஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்கும் அதே வேலையில் 150 சிசி ஸ்கூட்டரையும் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. புதிதாக தயாரிக்கப்படவுள்ள ஸ்கூட்டர் குறித்த முழு விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. எனினும் அந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட என்டார்க் ஸ்கூட்டரை ஒத்து தான் இது டிசைன் செய்யப்படும் என கூறப்படுகிறது.

உங்களை கவர விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ஸ்கூட்டர்கள்

என் டார்க் ஸ்கூட்டரில் உள்ள இன்ஸ்ட்ரூமென்ட் கண்சோல், ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி , நெவிகேஷன், உள்ளிட்ட பல வடசதிகள் உள்ளது. மேலும் இதில் ஏபிஎஸ் வசதியும் இக்கிறது. தற்போது அந்நிறுவனம் வெளியிடும்150 சிசி ஸ்கூட்டரிலும் இந்த வசதிகள் எல்லாம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

  1. ஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ் எஸ்யூவியின் புதிய தகவல்கள் - க்ரெட்டா போட்டியாளர்!!
  2. இந்தியாவுக்கு போட்டியாக ரேஸ் கார் தயாரித்த பாகிஸ்தான் மாணவிகள்.. இனி இவங்கதான் நம்ம பசங்க க்ரஷ்..
  3. சக்திவாய்ந்த புதிய டீசல் எஞ்சினுடன் வரும் புதிய ஃபோர்டு எண்டெவர்!!
  4. 25 லட்சம் டிவிஎஸ் ஜூப்பீட்டர் ஸ்கூட்டர்கள் விற்பனையாகி புதிய சாதனை
  5. டிஎஸ்கே நிறுவனத்துடன் கூட்டணியை முறித்தது பெனெல்லி நிறுவனம்!
Most Read Articles
English summary
Top Upcoming Scooters In India. Read in tamil
Story first published: Monday, July 16, 2018, 12:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X