ட்ரோன்க்ஸ் ஒன் எலக்ட்ரிக் பைக் விற்பனைக்கு அறிமுகம்!!

ட்ரோன்க்ஸ் ஒன் எலக்ட்ரிக் பைக் இந்தியாவின் முதல் க்ராஸ்ஓவர் ரக ஸ்மார்ட் மின்சார பைக்காக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த புதிய மின்சார பைக்கில் 250W மின் மோட்டார் பின்சக்கரத்தின் ஹப் பகுதியில் பொரு

By Saravana Rajan

ட்ரோன்க்ஸ் ஒன் எலக்ட்ரிக் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஸ்மார்ட்ரோன் நிறுவனத்தின் கீழ் செயல்படும் ட்ரோன்க்ஸ் மோட்டார்ஸ் அறிமுகம் செய்திருக்கும் இந்த புதிய மின்சார பைக்கின் சிறப்பம்சங்கள், விலை விபரத்தை இந்த செய்தியில் காணலாம்.

ட்ரோன்க்ஸ் ஒன் எலக்ட்ரிக் பைக் விற்பனைக்கு அறிமுகம்!!

ட்ரோன்க்ஸ் ஒன் எலக்ட்ரிக் பைக் இந்தியாவின் முதல் க்ராஸ்ஓவர் ரக ஸ்மார்ட் மின்சார பைக்காக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் எலக்ட்ரிக் பைக்காகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ட்ரோன்க்ஸ் ஒன் எலக்ட்ரிக் பைக் விற்பனைக்கு அறிமுகம்!!

இந்த புதிய மின்சார பைக்கில் 250W மின் மோட்டார் பின்சக்கரத்தின் ஹப் பகுதியில் பொருத்தப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த பைக்கில் கழற்றி மாற்றும் வசதி கொண்ட 36V லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. ஒருமுறை பேட்டரியை சார்ஜ் செய்தால் 50 கிமீ தூரம் பயணிக்க முடியும்.

ட்ரோன்க்ஸ் ஒன் எலக்ட்ரிக் பைக் விற்பனைக்கு அறிமுகம்!!

இது க்ராஸ்ஓவர் மாடலாக தெரிவிப்பதற்கு காரணம், இதனை மின் மோட்டார் துணையுடன் இயக்க முடிவதோடு, ஓட்டுபவரின் விருப்பப்பட்டால், இதனை சைக்கிள் போலவும் பெடல் செய்தும் ஓட்டலாம்.

ட்ரோன்க்ஸ் ஒன் எலக்ட்ரிக் பைக் விற்பனைக்கு அறிமுகம்!!

இந்த பைக்கை எலக்ட்ரானிக் கியர் அசிஸ்ட் மோடில் வைத்து ஓட்டும்போது 70 கிமீ முதல் 85 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். மின் மோட்டாரில் இயங்கும்போது, மணிக்கு 25 கிமீ வேகத்தில் இந்த மின்சார பைக் செல்லும்.

ட்ரோன்க்ஸ் ஒன் எலக்ட்ரிக் பைக் விற்பனைக்கு அறிமுகம்!!

இந்த மின்சார பைக்கில் பல இயங்கு நிலைகளில் வைத்து ஓட்டுவதற்கான டிரைவிங் மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஷிமானோ ஷிஃப்டர் மூலமாக இந்த பைக்கின் பயணிக்கும் தூரத்தை கூட்டி, குறைக்கும் வாய்ப்பை பெற முடியும்.

ட்ரோன்க்ஸ் ஒன் எலக்ட்ரிக் பைக் விற்பனைக்கு அறிமுகம்!!

ட்ரோன்க்ஸ் ஒன் எலக்ட்ரிக் பைக்கின் ஃபேரம் விமான கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் இணையான தரமுடைய கலப்பு உலோகத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

ட்ரோன்க்ஸ் ஒன் எலக்ட்ரிக் பைக் விற்பனைக்கு அறிமுகம்!!

இந்த பைக்கின் இன்ஸ்ட்ரூமென்ட் க்லஸ்ட்டரை ஸ்மார்ட்போனுடன் இணைக்கும் வசதியை பெற்றிருக்கிறது. டிபைக் என்ற செயலியின் மூலமாக பயணித்த தூரம், பேட்டரி திறனில் எவ்வளவு தூரம் பயணிக்க முடியும், பெடல் செய்து ஓட்டும்போது உங்களது உடலில் இருந்து எவ்வளவு கலோரி செலவாகி இருக்கிறது என்பது குறித்த தகவல்களை பெற முடியும்.

ட்ரோன்க்ஸ் ஒன் எலக்ட்ரிக் பைக் விற்பனைக்கு அறிமுகம்!!

ரூ.49,999 எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய க்ராஸ்ஓவர் ரக மின்சார பைக் விற்பனைக்கு வந்துள்ளது. முதல்கட்டமாக ஆமதபாத், மும்பை, புனே, கோவா, சண்டிகர், டெல்லி- என்சிஆர் பிராந்தியம், சென்னை, ஹைதராபாத் மற்றும் பெங்களூர் ஆகிய 9 நகரங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.

Most Read Articles
English summary
Tronx One electric bike launched in India: Tronx Motors, a subsidiary of Smartron Company has launched a new electric bike named as Tronx One. The Tronx One is India's first smart crossover bike and the electric bike is launched in the country at an introductory price of Rs 49,999.
Story first published: Saturday, July 14, 2018, 17:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X