ஹார்லி டேவிட்சனிற்கு அதிபர் டிரம்ப் மிரட்டல்; வரி அரசியலில் சிக்கியது ஹார்லி

அமெரிக்க பொருட்களுக்கு வரியை அதிகரித்துள்ளதால் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் அமெரிக்காவை விட்டு கிளம்ப முடிவு செய்தது. இந்நிலையில் அந்நிறுவனத்தை அமெரிக்காவிலேயே செயல்படவைக்க அந்நாட்டு அதிபர் டிரம்ப் ஹார்

By Balasubramanian

அமெரிக்க பொருட்களுக்கு வரியை அதிகரித்துள்ளதால் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் அமெரிக்காவை விட்டு கிளம்ப முடிவு செய்தது. இந்நிலையில் அந்நிறுவனத்தை அமெரிக்காவிலேயே செயல்படவைக்க அந்நாட்டு அதிபர் டிரம்ப் ஹார்லி வெளிநாட்டிற்கு சென்றால் அமெரிக்காவில் விற்கப்படும் ஹா்ரலிக்கு வரலாறு காணாத வரி விதிக்கப்படும் என டுவிட்டரில் மிரட்டியுள்ளார்.

ஹார்லி டேவிட்சனிற்கு அதிபர் டிரம்ப் மிரட்டல்; வரி அரசியலில் சிக்கியது ஹார்லி

அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே, அமெரிக்கா பொருட்களுக்கு முன்னுரிமை என்ற கோஷத்துடன் அமெரிக்கா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிபர் டிரம்ப் தனது வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையாக வரிவிதித்தார்.

ஹார்லி டேவிட்சனிற்கு அதிபர் டிரம்ப் மிரட்டல்; வரி அரசியலில் சிக்கியது ஹார்லி

அமெரிக்காவிற்கு தினந்தோறும், இந்தியா போன்ற பல்வேறு நாடுகள் பல்வேறு பொருட்களை ஏற்றுமதி செய்து வருகின்றனர் தற்போது டிரம்ப் விதித்துள்ள இறக்குமதி வரியால் அவர்கள் தொழிலிற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஹார்லி டேவிட்சனிற்கு அதிபர் டிரம்ப் மிரட்டல்; வரி அரசியலில் சிக்கியது ஹார்லி

இதையடுத்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரியை அதிகப்படுத்தினர். இவர்களின் இந்த நடவடிக்கையால் அதிகம் பாதிக்கப்பட்டது அமெரிக்காவில் செயல்பட்டு வரும் ஹார்லி டேவிட்சன் பைக் நிறுவனம் தான்.

ஹார்லி டேவிட்சனிற்கு அதிபர் டிரம்ப் மிரட்டல்; வரி அரசியலில் சிக்கியது ஹார்லி

இந்த பைக்குகள் அமெரிக்காவிலும், ஐரோப்பா நாடுகளிலும் தான் விற்பனை அதிகம். இந்நிலையில் அமெரிக்கா அரசின் வேலையால் ஐரோப்பா அமெரிக்க பொருட்கள் மீது விதிக்கப்படும் வரியை அதிகப்படுத்தியது. இதனால் ஐரோப்ப நாடுகளில் சுமார் 2 ஆயிரம் டாலர் வரை ஹார்லி பைக்குகளுக்கான வரி அதிகரித்தது.

ஹார்லி டேவிட்சனிற்கு அதிபர் டிரம்ப் மிரட்டல்; வரி அரசியலில் சிக்கியது ஹார்லி

இதையடுத்து பைக் விற்பனை சரியவில் இருந்து தப்பிக்க அமெரிக்காவில் செயல்படும் தங்கள் உற்பத்தி ஆலையை மாற்ற ஹார்லி நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன் முடிவு செய்தது. இது அமெரிக்காவில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.

ஹார்லி டேவிட்சனிற்கு அதிபர் டிரம்ப் மிரட்டல்; வரி அரசியலில் சிக்கியது ஹார்லி

அமெரிக்காவில் இருந்துகொண்டு வெளிநாடுகளுக்கு வர்த்தகம் செய்ய உகந்த நாடு அமெரிக்கா இல்லை என்ற பேச்சும் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது. ஹார்லியின் முடிவு குறித்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்திலும் கருத்து தெரிவித்திருந்தார்.

ஹார்லி டேவிட்சனிற்கு அதிபர் டிரம்ப் மிரட்டல்; வரி அரசியலில் சிக்கியது ஹார்லி

இதற்கிடையில் ஹார்லி நிறுவனத்தை அமெரிக்காவிலேயே தொடர்ந்து செயல்படவைக்க அரசு பல முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அதை எல்லாம் ஹார்லி நிறுவனம் பொருட்படுத்தாமல் ஐரோப்ப நாடுகளில் தங்கள் நிறுவனத்தை மாற்றும் வேலையை தொடர்ந்து பார்த்து வருகிறது.

இதனால் கடுப்பான அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் ஹார்லி குறித்து டுவிட் ஒன்றை போட்டுள்ளார் அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது : " ஹார்லி டேவிட்சன் பைக்குகள் மற்ற நாடுகளில் தயார் செய்ய கூடாது. அந்நிறுவனத்தின் ஊழியர்களும், வாடிக்கையாளரும் அந்நிறுவனம் எடுத்த முடிவால் கோபமாக உள்ளனர்.

அவர்கள் அப்படி வெளிநாட்டிற்கு சென்றால் அது அவர்களின் அழிவுகாலமாக இருக்கும். மேலும் அப்படி வெளி நாட்டிற்கு சென்றால் அமெரிக்காவில் அந்த பைக்கிற்கான விலை அவர்கள் இதற்கு முன்னர் பா்க்காத அளவிற்கு வரி விதிக்கப்படும். " என தெரிவித்துள்ளார்.

ஹார்லி டேவிட்சனிற்கு அதிபர் டிரம்ப் மிரட்டல்; வரி அரசியலில் சிக்கியது ஹார்லி

ஹார்லி நிறுவனத்தை பொருத்தவரை ஆண்டிற்கு சுமார் 40 ஆயிரம் ஹார்லி பைக்குகளை ஐரோப்பா நாடுகளில்விற்பனை செய்கிறது. தற்போது அதற்காக அந்நாடு 6 சதவீத வரி கட்டப்பட்டு வருகிறது. தற்போது வரி உயர்த்தப்பட்டு 31 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஹார்லி டேவிட்சனிற்கு அதிபர் டிரம்ப் மிரட்டல்; வரி அரசியலில் சிக்கியது ஹார்லி

கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் ஹார்லி விற்பனை குறைந்து வருகிறது ஆனால் பிரேசில், ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் ஹார்லி விற்பனை அதிகரித்துள்ளது.

ஹார்லி டேவிட்சனிற்கு அதிபர் டிரம்ப் மிரட்டல்; வரி அரசியலில் சிக்கியது ஹார்லி

ஹார்லியை பொருத்தவரை அமெரிக்காவிற்கு பிறகு ஐரோப்ப மார்க்கெட் தான் பெரிய மார்கெட்டாக உள்ளது இதனால் ஹார்லி செய்வது அறியாது திகைத்து வருகிறது. இரு நாடுகளிலும் தயாரித்தால் தயாரிப்பு செலவும் அதிகரித்து பைக்கின் விலையை அதிகரிக்க வேண்டி சூழ்நிலை ஏற்படும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
English summary
Trump Threatens Tax On Harley-Davidson Bikes Imported To The US.Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X