கேடிஎம் 390 பைக்குகளை ஓவர்டேக் செய்தது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310!!

கடந்த மாதம் கேடிஎம் ட்யூக் 390 மற்றும் ஆர்சி390 பைக்குகளின் விற்பனையை டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் முந்தி அசத்தி இருக்கிறது.

By Saravana Rajan

கடந்த மாதம் கேடிஎம் ட்யூக் 390 மற்றும் ஆர்சி390 பைக்குகளின் விற்பனையை டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் முந்தி அசத்தி இருக்கிறது.

 கேடிஎம் 390 பைக்குகளை ஓவர்டேக் செய்தது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310!!

ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் கேடிஎம் பைக்குகள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. டிசைன், செயல்திறன், விலை என அனைத்திலும் கேடிஎம் பைக்குகள் சிறப்பான தேர்வாக இருந்து வருகின்றன.

 கேடிஎம் 390 பைக்குகளை ஓவர்டேக் செய்தது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310!!

இந்த நிலையில், கேடிஎம் பைக்குகளைவிட அதிக சிறப்பம்சங்களுடன் கூடிய ஸ்போர்ட்ஸ் பைக் மாடலை தமிழகத்தை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார்ஸ் உருவாக்கியது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த புத்தம் புதிய மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

 கேடிஎம் 390 பைக்குகளை ஓவர்டேக் செய்தது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310!!

டிசைனில் மிக அசத்தலாகவும், நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வந்த டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் வாடிக்கையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. விலையிலும் கேடிஎம் 390 பைக்குகளைவிட குறைவாக நிர்ணயிக்கப்பட்டது.

 கேடிஎம் 390 பைக்குகளை ஓவர்டேக் செய்தது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310!!

இதனால், இந்த புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. முன்பதிவு கணிசமாக உயர்ந்ததால், காத்திருப்பு காலமும் பல மாதங்கள் நீண்டுள்ளது.

 கேடிஎம் 390 பைக்குகளை ஓவர்டேக் செய்தது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310!!

கடந்த மாதம் கேடிஎம் ட்யூக் 390 மற்றும் ஆர்சி390 ஆகிய இரண்டு மாடல்களையும் சேர்த்து 716 பைக்குகள் விற்பனையாகி இருக்கின்றன. அதேநேரத்தில், கடந்த மாதத்தில் 983 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

 கேடிஎம் 390 பைக்குகளை ஓவர்டேக் செய்தது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310!!

வலிமையான சர்வீஸ் நெட்வொர்க்கை கேடிஎம் பெற்றிருந்த போதிலும், டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் இளைஞர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. அண்மையில் ரூ.8,000 விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், கேடிஎம் பைக்குகளைவிட விலை குறைவான மாடலாகவே இருக்கிறது.

 கேடிஎம் 390 பைக்குகளை ஓவர்டேக் செய்தது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310!!

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டது. டிவிஎஸ் நிறுவனத்தின் தற்போதைய சக்திவாய்ந்த பைக் மாடல் இதுதான்.

 கேடிஎம் 390 பைக்குகளை ஓவர்டேக் செய்தது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310!!

இந்த பைக்கில் 312.2சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட இந்த எஞ்சின் பல்வேறு தொழில்நுட்ப சிறப்புகளை பெற்றிருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 34 பிஎஸ் பவரையும், 27.3என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது.

 கேடிஎம் 390 பைக்குகளை ஓவர்டேக் செய்தது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310!!

இந்த பைக்கில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக் 0- 60 கிமீ வேகத்தை வெறும் 2.93 வினாடிகளில் எட்டிவிடும் திறன் வாய்ந்தது. அதிகபட்சமாக மணிக்கு 160 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது. இதனைவிட கேடிஎம் பைக்குகள் அதிக செயல்திறன் கொண்டவையாக இருந்தாலும், வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை உணர முடிகிறது.

 கேடிஎம் 390 பைக்குகளை ஓவர்டேக் செய்தது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310!!

இந்த பைக் புதிய ட்ரெல்லிஸ் ஃப்ரேம் கட்டமைப்பில் உருவாக்கப்பட்டு இருப்பதுடன் மிக இலகுவான மாடலாகவும் இருக்கிறது. இந்த பைக் 169.5 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது. இந்த பைக்கில் அதி நவீன அப்சைடு டவுன் கயபா ஃபோர்க்குகள் கொண்ட முன்புற சஸ்பென்ஷன் அமைப்பும், பின்புறத்தில் கேஸ் சார்ஜ்டு மோனோஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கிறது.

 கேடிஎம் 390 பைக்குகளை ஓவர்டேக் செய்தது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310!!

இரண்டு சக்கரங்களிலும் பெட்டல் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது. 17 அங்குல அலாய் சக்கரங்கள், மிச்செலின் டயர்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ஆம். மிச்செலின் டயர்களை இந்தியாவில் டிவிஎஸ் நிறுவனம்தான் உற்பத்தி செய்கிறது.

 கேடிஎம் 390 பைக்குகளை ஓவர்டேக் செய்தது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310!!

அவசர சமயங்களில் பிரேக் பிடித்தாலும், இரண்டு டயர்களும் அதிக தரைப்பிடிப்பை வழங்குவதோடு, குறைந்த தூரத்தில் பைக்கை நிறுத்துவதற்கான நுட்பத்தையும் பெற்றிருக்கின்றன. இந்த பைக்கில் 11 லிட்டர் பெட்ரோல் டேங்க் உள்ளது.

 கேடிஎம் 390 பைக்குகளை ஓவர்டேக் செய்தது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310!!

இந்த பைக்கில் நீளவாக்கிலான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. டிராக்குகளில் ஓட்டும்போது சுற்றுகளை எவ்வளவு நேரத்தில் கடக்கிறோம் என்பதை அறிந்து கொள்வதற்கான லேப் டைமர், எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட் ஆகியவை பிற முக்கிய அம்சங்கள்.

 கேடிஎம் 390 பைக்குகளை ஓவர்டேக் செய்தது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310!!

இந்த பைக் மிகச் சிறப்பான ஏரோடைனமிக்ஸ் டிசைனை பெற்றிருப்பதால், 0.26 என்ற அளவிலான டிராக் கோ எஃபிசியன்ட் இருப்பதால் இதன் ரகத்தில் மிகச் சிறப்பான பைக் மாடலாக டிவிஎஸ் தெரிவிக்கிறது.

 கேடிஎம் 390 பைக்குகளை ஓவர்டேக் செய்தது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310!!

தற்போது புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக் ரூ.2.15 லட்சம் முதல் ரூ.2.23 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. தொடர்ந்து கேடிஎம் 390 பைக்குகளைவிட குறைவான விலை மாடலாகவே இருப்பதும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக அமைந்துள்ளது.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
TVS Apache RR 310 Overtakes KTM RC 390 & Duke 390 In March Sales.
Story first published: Friday, April 20, 2018, 12:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X