எமனுக்கே சவால் விடலாம்... உங்கள் ஆயுளை கெட்டியாக்கும் மலிவான விலை பைக்குகள் இவைதான்...

எம தர்ம ராஜாவின் பாசக்கயிறு உங்களை எளிதாக நெருங்க முடியாத வகையில், பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய பைக்குகள், இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

எம தர்ம ராஜாவின் பாசக்கயிறு உங்களை எளிதாக நெருங்க முடியாத வகையில், பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய பைக்குகள், இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இத்தனைக்கும் அவற்றின் விலை குறைவுதான் என்பது ஆச்சரியமான செய்தி.

இந்த பைக்குகளில் பயணித்தால் எமனுக்கே சவால் விடலாம்...

சாலை விபத்துக்களின் காரணமாக, உலக அளவில் அதிக உயிர்களை பறிகொடுத்து வரும் நாடுகளில் ஒன்று இந்தியா. இந்தியாவில் சாலை விபத்துக்களின் காரணமாக ஒரு ஆண்டுக்கு மட்டும் சராசரியாக 1.50 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர்.

இந்த பைக்குகளில் பயணித்தால் எமனுக்கே சவால் விடலாம்...

இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துக்களின் காரணமாக அதிகம் பாதிக்கப்படுவது இரு சக்கர வாகன ஓட்டிகள்தான். இரு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களாகட்டும் அல்லது அதனை வாங்குவோராகட்டும், இருவருமே பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

இந்த பைக்குகளில் பயணித்தால் எமனுக்கே சவால் விடலாம்...

அதாவது கார் உள்ளிட்ட இதர வாகனங்களில் கிடைக்கும் பாதுகாப்பு, இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் அதில் பயணம் செய்யும் நபர்களுக்கு கிடைப்பதில்லை. ஆனால் பாதுகாப்பை மேம்படுத்தும்படி, அரசு கொடுக்கும் அழுத்தம் காரணமாக, இந்த சூழல் கொஞ்சம் கொஞ்சமாக மாறி கொண்டிருக்கிறது.

இந்த பைக்குகளில் பயணித்தால் எமனுக்கே சவால் விடலாம்...

என்றாலும் இந்தியாவில் இரு சக்கர வாகனங்கள் மிகவும் பாதுகாப்பானதாக மாற நீண்ட நாட்கள் பிடிக்கும். இருந்தபோதும், தற்போதைய நிலையில் ஓரளவுக்கு குறைவான விலையில் கிடைக்கும் ஒரு சில இரு சக்கர வாகனங்களில் போதுமான பாதுகாப்பு வசதிகள் உள்ளன.

இந்த பைக்குகளில் பயணித்தால் எமனுக்கே சவால் விடலாம்...

இரு சக்கர வாகனங்களை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றுவதில், ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் (Anti-lock Braking System-ABS) எனப்படும் ஏபிஎஸ் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்த பைக்குகளில் பயணித்தால் எமனுக்கே சவால் விடலாம்...

எனவே ஓரளவுக்கு குறைவான விலையில், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஸ்லிப்பர் கிளட்ச் ஆகிய வசதிகளுடன், இந்தியாவில் விற்பனையாகி கொண்டிருக்கும் மிகவும் பாதுகாப்பான 5 இரு சக்கர வாகனங்கள் குறித்து இனி பார்க்கலாம்.

இந்த பைக்குகளில் பயணித்தால் எமனுக்கே சவால் விடலாம்...

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி (TVS Apache RTR 200 4V) (5)

விலை: ரூ.93,682 (எக்ஸ் ஷோரூம், டெல்லி)

இந்திய மார்க்கெட்டில் தற்போதைய நிலையில் ஏபிஎஸ், ஸ்லிப்பர் கிளட்ச் என 2 பாதுகாப்பு வசதிகளையும் வழங்கும் மலிவான விலை கொண்ட பைக் என்றால் அது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4விதான். டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக் பார்ப்பதற்கு மிகவும் 'ஷார்ப்' ஆக உள்ளது.

இந்த பைக்குகளில் பயணித்தால் எமனுக்கே சவால் விடலாம்...

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கானது, எல்இடி டிஆர்எல்கள், டபிள்யூ வடிவ க்ராப் ரெயில்ஸ் (W-shaped Grab Rails) ஆகியவற்றையும் பெற்றுள்ளது. நல்ல பெர்ஃபார்மென்ஸ் உடன் அக்ரஸிவ் ஆன ஒரு பைக்கை எதிர்பார்ப்பவரா நீங்கள்? அப்படியானால் உங்களுக்கான பைக் இதுதான்.

இந்த பைக்குகளில் பயணித்தால் எமனுக்கே சவால் விடலாம்...

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில், 197.3 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 20.3 பிஎச்பி பவர் மற்றும் 18.1 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வல்லமை வாய்ந்தது.

இந்த பைக்குகளில் பயணித்தால் எமனுக்கே சவால் விடலாம்...

இந்த பைக் ஆன்டி-ரிவர்ஸ் ஸ்லிப்பர் கிளட்ச் (Anti-reverse Slipper Clutch) வசதியை பெற்றுள்ளது. இந்த பைக்கின் ஷார்ப் ஆன கிராபிக்ஸ் கூட்டத்தில் தனித்து தெரிகிறது. தற்போதைய நிலையில் டிவிஎஸ் நிறுவனத்தில் இருந்து ஸ்லிப்பர் கிளட்ச் வசதியுடன் வெளிவரும் ஒரே பைக்கும் இதுதான்.

இந்த பைக்குகளில் பயணித்தால் எமனுக்கே சவால் விடலாம்...

கேடிஎம் 390 ட்யூக் (KTM 390 Duke) (5)

விலை: ரூ.2.39 லட்சம் (எக்ஸ் ஷோரூம், டெல்லி)

இந்திய மார்க்கெட்டில் மிகவும் பிரபலமான பைக்குகளில் ஒன்று கேடிஎம் 390 ட்யூக். இது அதிக அளவிலான இளைஞர் பட்டாளத்தை கவர்ந்துள்ள பைக் என்று சொல்லலாம். கொடுக்கும் பணத்திற்கு இது வொர்த்-ஆன பைக் என்றாலும் மிகையல்ல. கேடிஎம் 390 ட்யூக் மிகவும் பவர்ஃபுல்லான பைக்கும் கூட.

இந்த பைக்குகளில் பயணித்தால் எமனுக்கே சவால் விடலாம்...

கேடிஎம் 390 ட்யூக் பைக்கில், சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு, 373 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 43 பிஎச்பி பவர் மற்றும் 37 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய வல்லமை வாய்ந்தது.

இந்த பைக்குகளில் பயணித்தால் எமனுக்கே சவால் விடலாம்...

எல்இடி ஹெட்லேம்ப்ஸ் மற்றும் முழு டிஎப்டி கன்சோல் உள்ளிட்ட பல்வேறு அதிநவீன வசதிகளை கேடிஎம் 390 ட்யூக் பைக் பெற்றுள்ளது. அதை விட முக்கியமான ட்யூயல் சேனல் ஏபிஎஸ் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் ஆகியவை கேடிஎம் 390 ட்யூக் பைக்கில் இடம்பெற்றுள்ளன.

இந்த பைக்குகளில் பயணித்தால் எமனுக்கே சவால் விடலாம்...

கடைசி தலைமுறை ட்யூக் 390 பைக்கில், கேடிஎம் நிறுவனம் ஸ்லிப்பர் கிளட்ச்சை அறிமுகம் செய்தது. இதன் மூலமாக, இந்தியாவில் ஸ்லிப்பர் கிளட் வசதியுடன் விற்பனைக்கு வரும் மிகவும் மலிவான விலை கொண்ட பைக் என்ற பெருமையை இது பெற்றது.

இந்த பைக்குகளில் பயணித்தால் எமனுக்கே சவால் விடலாம்...

கேடிஎம் ஆர்சி 390 (KTM RC 390) (3)

விலை: ரூ.2.37 லட்சம் (எக்ஸ் ஷோரூம், டெல்லி)

கேடிஎம் 390 ட்யூக் பைக்கின் ஃபுல்லி-ஃபேர்டு (fully-faired) உடன்பிறப்புதான் ஆர்சி 390. ஃபுல்லி-ஃபேர்டு கேடிஎம் ஆர்சி 390 ஆனது ட்ராக்-ஸ்பெக் பைக் ஆகும். கேடிஎம் 390 ட்யூக் பைக்கில் இருக்கும் அதே இன்ஜின், டிரான்ஸ்மிஷன் மற்றும் கிளட்ச் செட்-அப் ஆகியவற்றை ஆர்சி 390 பைக்கும் பெற்றுள்ளது.

இந்த பைக்குகளில் பயணித்தால் எமனுக்கே சவால் விடலாம்...

பைக் ஆர்வலர்கள் மற்றும் ட்ராக் ரைடர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பைக்குகளில் ஒன்றாக கேடிஎம் ஆர்சி390 பைக் திகழ்கிறது. இந்த பைக்கில் பயணித்தால், வளைவுகளில் திரும்பும்போதும் கூட, கியர்களை மாற்ற முடியும். இதற்கு கேடிஎம் ஆர்சி 390 பைக்கின் ஸ்லிப்பர் கிளட்ச் ரைடரை அனுமதிக்கிறது.

இந்த பைக்குகளில் பயணித்தால் எமனுக்கே சவால் விடலாம்...

யமஹா ஒய்இஸட்எப்-ஆர்15 வி3 (Yamaha YZF-R15 V3) (4)

விலை: ரூ.1.26 லட்சம் (எக்ஸ் ஷோரூம், டெல்லி)

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட YZF-R15 V3 பைக்கை, யமஹா நிறுவனம் நடப்பாண்டில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள ஆல் நியூ லிக்விட் கூல்டு, 155 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் 19.3 பிஎஸ் பவர் மற்றும் 14.7 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது.

இந்த பைக்குகளில் பயணித்தால் எமனுக்கே சவால் விடலாம்...

இதன் முந்தைய தலைமுறை பைக்கில் இடம்பெற்றிருந்த டெல்டா பாக்ஸ் ப்ரேம், புதிய YZF-R15 V3 பைக்கிலும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் ஸ்லிப்பர் கிளட்ச் வசதியையும் YZF-R15 V3 பைக் பெற்றுள்ளது.

இந்த பைக்குகளில் பயணித்தால் எமனுக்கே சவால் விடலாம்...

கியரை ஷிப்ட் செய்வதற்கு ஆகும் நேரத்தை குறைக்க இதன் ஸ்லிப்பர் கிளட்ச் உதவி செய்கிறது. இந்த செக்மெண்ட்டில் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனை வழங்குவதுடன், டிராக் ஓரியண்டட் பைக்காகவும் திகழ்வது YZF-R15 V3 மட்டுமே.

இந்த பைக்குகளில் பயணித்தால் எமனுக்கே சவால் விடலாம்...

பஜாஜ் டோமினார் 400 (Bajaj Dominar 400) (4)

விலை: ரூ.1.6 லட்சம் (எக்ஸ் ஷோரூம், டெல்லி)

எல்இடி ஹெட்லேம்ப்ஸ், ஸ்லிப்பர் கிளட்ச், முழு எல்சிடி கன்சோல், அலாய் வீல்கள், ட்யூப்லெஸ் டயர் என பஜாஜ் டோமினார் 400 பைக்கில் இடம்பெற்றிருக்கும் வசதிகளை அடுக்கி கொண்டே போகலாம். இந்திய மார்க்கெட்டில் ராயல் என்பீல்டு பைக்குகளுடன் இது போட்டியிட்டு வருகிறது.

இந்த பைக்குகளில் பயணித்தால் எமனுக்கே சவால் விடலாம்...

மிக நீண்ட தொலைவு பயணிப்பவர்களுக்கு ஏற்ற டூரிங் பைக்காக மார்க்கெட்டிங் செய்யப்படும் இந்த பைக், இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் பேஸ் வேரியண்ட்டில் ஏபிஎஸ் கிடையாது. ஆனால் ஹை எண்ட் வேரியண்ட்டில், ஸ்லிப்பர் கிளட்ச் உடன் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்படுகிறது.

இந்த பைக்குகளில் பயணித்தால் எமனுக்கே சவால் விடலாம்...

தற்போதைய நிலையில் பஜாஜ் டோமினார் 400 பைக்கின் விற்பனை வெகுவாக சரிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் மெக்கானிக்கல் மற்றும் விஸ்வல் ரீதியாக அப்டேட் செய்யப்பட்ட புதிய டோமினார் 400 பைக் விரைவில் லான்ச் ஆகவுள்ளது. அதன்பின் மீண்டும் விற்பனை சூடுபிடிக்கும்.

Most Read Articles
English summary
TVS Apache RTR 200 4V To KTM 390 Duke: 5 Safest Motorcycles In India With ABS, Slipper clutch. Read in Tamil
Story first published: Friday, December 7, 2018, 10:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X