25 லட்சம் டிவிஎஸ் ஜூப்பீட்டர் ஸ்கூட்டர்கள் விற்பனையாகி புதிய சாதனை

இந்தியாவில் அதிக விற்பனையில் உள்ள ஸ்கூட்டர் ஹோண்டா ஆக்டிவா தான். இந்த ஸ்கூட்டருக்கு போட்டியாக டிவிஎஸ். நிறுவனம் வெளியிட்ட ஸ்கூட்டர் தான் டி.வி.எஸ் ஜூப்பிட்டர்.

By Balasubramanian

இந்தியாவில் அதிக விற்பனையில் உள்ள ஸ்கூட்டர் ஹோண்டா ஆக்டிவா தான். இந்த ஸ்கூட்டருக்கு போட்டியாக டிவிஎஸ். நிறுவனம் வெளியிட்ட ஸ்கூட்டர் தான் டி.வி.எஸ் ஜூப்பிட்டர். அந்நிறுவனம் எதிர்பார்த்த அளவிற்கு ஆக்டிவா வாடிக்கையாளர்களை ஈர்க்கவில்லை என்றாலும் ஒரளவிற்கு நல்ல விற்பனையிலேயே இருந்து வருகிறது.

25 டிவிஎஸ் ஜூப்பீட்டர் பைக்குகள் விற்பனையாகி புதிய சாதனை

மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்ப்பை இந்நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது டி.வி.எஸ் ஜூப்பீட்டர் பைக் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த ஸ்கூட்டர் அறிமுகப்பட்ட 5 ஆண்டுகளில் 25 லட்சம் ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த 2013ம் ஆண்டு தான் இந்த ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டது.

25 டிவிஎஸ் ஜூப்பீட்டர் பைக்குகள் விற்பனையாகி புதிய சாதனை

மேலும் இவ்வளவு குறைந்த காலத்தில் இந்த மைல்கல்லை எட்டிய ஸ்கூட்டர் என்றால் அது ஜூப்பீட்டர்கள் தான். இந்த ஸ்கூட்டர் அறிமுகமாகி வெறும் 30 மாதங்களிலேயே 10 லட்சம் விற்பனை என்ற மைல் கல்லை எட்டியது. முதல் 10 மாதங்களிலேயே 5 லட்சம் வாகனங்கள் விற்று தீர்ந்தன.

25 டிவிஎஸ் ஜூப்பீட்டர் பைக்குகள் விற்பனையாகி புதிய சாதனை

இது குறித்து அந்நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில் :"5 ஆண்டுகளுக்கு உள்ளாகவே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்று இந்த இடத்தை அடைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் சொகுசு, வசதி, மைலேஜ் ஆகியவை தான் முக்கிய காரணமாக இருக்கும் என கருதுகிறோம். " என கருதுகிறோம்.

25 டிவிஎஸ் ஜூப்பீட்டர் பைக்குகள் விற்பனையாகி புதிய சாதனை

அதே நேரத்தில் இந்த ஸ்கூட்டருக்கும் கடும் போட்டியாக பார்க்கப்படும் ஹோண்டா ஆக்டிவா பைக் கடந்த 17-18ம் நிதியாண்டில் மட்டும் கிட்டத்தட்ட 30 லட்சம் வாகனங்களை விற்றுள்ளது. அதாவது 5 ஆண்டுகளில் ஜூப்பீட்டர் பைக் விற்பனைவிட ஒரு ஆண்டில் ஆக்டிவாவின் விற்பனை அதிகம்.

25 டிவிஎஸ் ஜூப்பீட்டர் பைக்குகள் விற்பனையாகி புதிய சாதனை

அந்த காலகட்டத்தில்இந்தியாவில் விற்பனையான ஸ்கூட்டர்களில் 47 சதவீதம் பேர் ஆக்டிவாவை தான் வாங்கியுள்ளனர். அந்த காலகட்டத்தில் மட்டும் 67.19 லட்சம் ஸ்கூட்டர்கள் இந்தியாவில் விற்பனையாகியுள்ளது.

25 டிவிஎஸ் ஜூப்பீட்டர் பைக்குகள் விற்பனையாகி புதிய சாதனை

இதுவரை 100-110 சிசி ஸ்கூட்டர்கள் தான் இந்தியாவில் நல்ல விற்பனையில் இருந்தது தற்போது மெல்ல மெல்ல 125 சிசி வாகனத்தின் விற்பனை தற்போது அதிகமாகியுள்ளது. அதை கருத்தில் கொண்டுதான் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட டிவிஎஸ் என்டார்க், மற்றம் சுஸூகி பார்க்மேன் ஆகிய ஸ்கூட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #tvs motor #டிவிஎஸ்
English summary
TVS Jupiter Crosses 2.5 Million Sales Milestone In India In 5 Years. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X