90 நாடுகளுக்கு ஏற்றுமதி! பிஎம்டபிள்யூ பைக் உற்பத்தியில் சத்தமே இல்லாமல் புதிய மைல்கல்லை எட்டிய ஓசூர்

பிஎம்டபிள்யூ பைக்குகள் உற்பத்தியில், சத்தமே இல்லாமல் புதிய மைல்கல் ஒன்றை ஓசூர் எட்டியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சர்வதேச மார்க்கெட்களுக்கு, 500 சிசிக்கும் குறைவான பைக்குகளை இணைந்து தயாரிப்பது என, டிவிஎஸ் மற்றும் பிஎம்டபிள்யூ மோட்டோராட் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே, கடந்த 2013ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது.

90 நாடுகளுக்கு ஏற்றுமதி! பிஎம்டபிள்யூ பைக் உற்பத்தியில் சத்தமே இல்லாமல் புதிய மைல்கல்லை எட்டிய ஓசூர்

இதன்பின் ஒப்பந்தப்படி, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310, பிஎம்டபிள்யூ ஜி 310ஆர், பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் உள்ளிட்ட பைக்குகள் டிவிஎஸ் மற்றும் பிஎம்டபிள்யூ மோட்டோராட் ஆகிய இரண்டு நிறுவனங்களின் கூட்டணியில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

90 நாடுகளுக்கு ஏற்றுமதி! பிஎம்டபிள்யூ பைக் உற்பத்தியில் சத்தமே இல்லாமல் புதிய மைல்கல்லை எட்டிய ஓசூர்

இதில், பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் மற்றும் பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் ஆகிய இரண்டு பைக்குகளும் தமிழகத்தின் ஓசூரில் உள்ள டிவிஎஸ் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இவ்விரு பைக்குகளும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது கடந்த 2016 டிசம்பர் மாதமே தொடங்கி விட்டது.

90 நாடுகளுக்கு ஏற்றுமதி! பிஎம்டபிள்யூ பைக் உற்பத்தியில் சத்தமே இல்லாமல் புதிய மைல்கல்லை எட்டிய ஓசூர்

தற்போது சுமார் 90க்கும் மேற்பட்ட நாடுகளில் இவ்விரு பைக்குகளும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. என்றாலும் இந்திய மார்க்கெட்டில் மிக நீண்ட தாமதத்திற்கு பின்னர்தான் பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மற்றும் பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் ஆகிய 2 பைக்குகளும் அறிமுகம் செய்யப்பட்டன.

90 நாடுகளுக்கு ஏற்றுமதி! பிஎம்டபிள்யூ பைக் உற்பத்தியில் சத்தமே இல்லாமல் புதிய மைல்கல்லை எட்டிய ஓசூர்

அதாவது ஓசூரில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தாலும், கடந்த சில மாதங்களுக்கு முன்தான், இவ்விரு பைக்குகளும் இந்திய மார்க்கெட்டில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

90 நாடுகளுக்கு ஏற்றுமதி! பிஎம்டபிள்யூ பைக் உற்பத்தியில் சத்தமே இல்லாமல் புதிய மைல்கல்லை எட்டிய ஓசூர்

இந்த சூழலில், ஓசூர் தொழிற்சாலையில், பிஎம்டபிள்யூ ஜி 310 பைக்குகளின் உற்பத்தியில், தற்போது புதிய மைல்கல் ஒன்று எட்டப்பட்டுள்ளது. 50 ஆயிரம் பிஎம்டபிள்யூ ஜி 310 பைக்குகள் உற்பத்தி என்பதுதான் அந்த புதிய மைல்கல்.

90 நாடுகளுக்கு ஏற்றுமதி! பிஎம்டபிள்யூ பைக் உற்பத்தியில் சத்தமே இல்லாமல் புதிய மைல்கல்லை எட்டிய ஓசூர்

ஓசூர் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட 50 ஆயிரமாவது யூனிட் என்ற சிறப்பை பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் பெறுகிறது. பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் ஆகிய இரண்டு பைக்குகளிலும் ஒரே இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

90 நாடுகளுக்கு ஏற்றுமதி! பிஎம்டபிள்யூ பைக் உற்பத்தியில் சத்தமே இல்லாமல் புதிய மைல்கல்லை எட்டிய ஓசூர்

இவ்விரு பைக்குகளிலும் 313 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்யூட் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 9,500 ஆர்பிஎம்மில் 34 பிஎச்பி பவரையும், 7,500 ஆர்பிஎம்மில் 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் ட்யூன் செய்யப்பட்டுள்ளன.

90 நாடுகளுக்கு ஏற்றுமதி! பிஎம்டபிள்யூ பைக் உற்பத்தியில் சத்தமே இல்லாமல் புதிய மைல்கல்லை எட்டிய ஓசூர்

மற்றபடி வடிவமைப்பில் மட்டுமே இவ்விரு பைக்குகளும் சில மாற்றங்களை பெற்றுள்ளன. இவ்விரு பைக்குகளிலும், ட்யூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் வசதி ஸ்டாண்டர்டாக வழங்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தகுந்த விஷயமாகும்.

90 நாடுகளுக்கு ஏற்றுமதி! பிஎம்டபிள்யூ பைக் உற்பத்தியில் சத்தமே இல்லாமல் புதிய மைல்கல்லை எட்டிய ஓசூர்

பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் பைக்கின் விலை 2.99 லட்ச ரூபாய். பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் பைக்கின் விலை 3.49 லட்ச ரூபாய் (அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்). தற்போது இயர் எண்ட் ஆஃபராக, இவ்விரு பைக்குகளுக்கும், கேஸ் டிஸ்கவுண்ட், ஃப்ரீ இன்ஸ்சூரன்ஸ் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

Most Read Articles
English summary
TVS Rolls Out 50,000th BMW G 310 Series Bike From Tamil Nadu Plant. Read in Tamil
Story first published: Monday, December 17, 2018, 19:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X