ஹெல்மெட் அணியாததை கேட்டதால் 2 போலீஸ்காரர்களை சரமாரியாக தாக்கிய 'போதை' வக்கீல்.. வைரல் வீடியோ

பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில், போக்குவரத்து போலீசார் 2 பேரை, குடிபோதையில் இருந்ததாக கூறப்படும் வக்கீல் ஒருவர், ரத்தம் வரும் அளவிற்கு சரமாரியாக தாக்கிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.

பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில், போக்குவரத்து போலீசார் 2 பேரை, குடிபோதையில் இருந்ததாக கூறப்படும் வக்கீல் ஒருவர், ரத்தம் வரும் அளவிற்கு சரமாரியாக தாக்கிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹெல்மெட் அணியாததை கேட்டதால் 2 போலீஸ்காரர்களை சரமாரியாக தாக்கிய 'போதை' வக்கீல்.. வைரல் வீடியோ

உலக அளவில் சாலை விபத்துக்கள் மிக அதிகமாக நடைபெறும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இங்கு நிகழும் சாலை விபத்துக்களின் காரணமாக ஒரு ஆண்டுக்கு சராசரியாக 1.50 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழக்கின்றனர். இது தவிர பல லட்சக்கணக்கானோர் படுகாயம் அடைகின்றனர்.

ஹெல்மெட் அணியாததை கேட்டதால் 2 போலீஸ்காரர்களை சரமாரியாக தாக்கிய 'போதை' வக்கீல்.. வைரல் வீடியோ

ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது போன்ற போக்குவரத்து விதிமீறல்களே விபத்துக்களுக்கு மிக முக்கிய காரணங்களாக உள்ளன. எனவே விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு, வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

ஹெல்மெட் அணியாததை கேட்டதால் 2 போலீஸ்காரர்களை சரமாரியாக தாக்கிய 'போதை' வக்கீல்.. வைரல் வீடியோ

அப்படி இருந்தும் பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை சரி வர கடைபிடிப்பது இல்லை. எனவே போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

ஹெல்மெட் அணியாததை கேட்டதால் 2 போலீஸ்காரர்களை சரமாரியாக தாக்கிய 'போதை' வக்கீல்.. வைரல் வீடியோ

இந்த சூழலில் கர்நாடக மாநிலம் தாவனகெரே பகுதியில், நேற்று (அக்.10) மதியம் சுமார் 12 மணியளவில், போக்குவரத்து போலீசார் இருவர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இந்த பகுதி கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் இருந்து சுமார் 260 கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ளது.

ஹெல்மெட் அணியாததை கேட்டதால் 2 போலீஸ்காரர்களை சரமாரியாக தாக்கிய 'போதை' வக்கீல்.. வைரல் வீடியோ

அப்போது வக்கீலான ருத்ரப்பா என்பவர் அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்தார். ஆனால் அவர் ஹெல்மெட் அணியவில்லை. எனவே போக்குவரத்து போலீசார் அவரை நிறுத்தினர். பின்னர் ஏன் ஹெல்மெட் அணியவில்லை? என ருத்ரப்பாவிடம் கேள்வி எழுப்பினர்.

ஹெல்மெட் அணியாததை கேட்டதால் 2 போலீஸ்காரர்களை சரமாரியாக தாக்கிய 'போதை' வக்கீல்.. வைரல் வீடியோ

ஆனால் ருத்ரப்பா குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே போக்குவரத்து போலீசாருக்கு உரிய பதில் அளிக்காமல், ருத்ரப்பா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சிறிது நேரத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற ருத்ரப்பா, போக்குவரத்து போலீசார் இருவரையும் சரமாரியாக தாக்க தொடங்கினார்.

ஹெல்மெட் அணியாததை கேட்டதால் 2 போலீஸ்காரர்களை சரமாரியாக தாக்கிய 'போதை' வக்கீல்.. வைரல் வீடியோ

இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் அரங்கேறியது. முதலில் ஓடு ஒன்றை எடுத்து, போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவரின் நெற்றியில் ருத்ரப்பா தாக்கினார். இதனால் அந்த போக்குவரத்து போலீஸ்காரரின் நெற்றியில் ரத்தம் வழிந்தது.

ஹெல்மெட் அணியாததை கேட்டதால் 2 போலீஸ்காரர்களை சரமாரியாக தாக்கிய 'போதை' வக்கீல்.. வைரல் வீடியோ

பின்னர் மற்றொரு போலீஸ்காரை அப்படியே சாலையில் தள்ளி புரட்டி எடுத்தார் ருத்ரப்பா. இதனை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அப்போது அங்கு திரண்ட சிலர் முழு சம்பவத்தையும் அப்படியே தங்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர்.

ஹெல்மெட் அணியாததை கேட்டதால் 2 போலீஸ்காரர்களை சரமாரியாக தாக்கிய 'போதை' வக்கீல்.. வைரல் வீடியோ

அதிர்ச்சிகரமான அந்த வீடியோ காட்சி பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. ANI வெளியிட்டுள்ள அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

இந்த சூழலில் போக்குவரத்து போலீசார் மீது தாக்குதல் நடத்திய வக்கீல் ருத்ரப்பா அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். பொதுவாக வாகன தணிக்கையில் ஈடுபடும் போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு உள்ளது.

ஹெல்மெட் அணியாததை கேட்டதால் 2 போலீஸ்காரர்களை சரமாரியாக தாக்கிய 'போதை' வக்கீல்.. வைரல் வீடியோ

இதனால் போலீசாரை கண்டாலே வாகன ஓட்டிகள் தலை தெறிக்க ஓடுகின்றனர். அதற்கு மாறாக குடிபோதையில் இருந்ததாக கூறப்படும் வக்கீல் ஒருவர் போக்குவரத்து போலீசாரை புரட்டி எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹெல்மெட் அணியாததை கேட்டதால் 2 போலீஸ்காரர்களை சரமாரியாக தாக்கிய 'போதை' வக்கீல்.. வைரல் வீடியோ

இந்தியாவில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் மட்டுமல்லாது, பின்னால் அமர்ந்து பயணம் செய்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹெல்மெட் அணியாததை கேட்டதால் 2 போலீஸ்காரர்களை சரமாரியாக தாக்கிய 'போதை' வக்கீல்.. வைரல் வீடியோ

அதேபோல் காரில் பயணிக்கும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை கடைபிடிப்பதன் மூலம் விபத்துக்களில் இருந்து வாகன ஓட்டிகள் தப்பிக்கலாம்.

Most Read Articles

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் மோட்டார் சைக்கிளின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

English summary
Two Wheeler Rider Assaults 2 Policemen In Karnataka: Shocking Video. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X