ஜூன் மாதம் பைக் விற்பனை ஜோர்....: சேல்ஸ் ரிப்போர்ட்

2018 இப்பொழுது தான் துவங்கியது போல் இருக்கிறது. அதற்குள் 6 மாதங்கள் கடந்து விட்டது. இந்த 6 மாதம் என்பது காலண்டர் கணக்கில் 6 மாதம் மட்டும் அல்ல 2018-2019 ஆண்டிற்கான நிதியாண்டிலும்

By Balasubramanian

2018 இப்பொழுது தான் துவங்கியது போல் இருக்கிறது. அதற்குள் 6 மாதங்கள் கடந்து விட்டது. இந்த 6 மாதம் என்பது காலண்டர் கணக்கில் 6 மாதம் மட்டும் அல்ல 2018-2019 ஆண்டிற்கான நிதியாண்டிலும் முதல் காலாண்டு கடந்த ஜூன் உடன் கடந்து விட்டது. இந்நிலையில் இந்த நதியாண்டின் முதல் காலாண்டிற்கான மற்றும் ஜூன் மாத பைக் விற்பனை ரிப்போர்ட் தற்போது வெளியாகியுள்ளது. அதை தான் நாம் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.

ஜூன் மாதம் பைக் விற்பனை ஜோர்....: சேல்ஸ் ரிப்போர்ட்

ஹீரோ மோட்டோகார்ப்

நீண்ட நாட்களாக முதல் இடத்தை பிடித்து வந்த ஹீரோ கடந்த காலாண்டில் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இதை யடுத்து தொடர்ந்து கடின உழைப்பால் இந்த மாதம் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.

ஜூன் மாதம் பைக் விற்பனை ஜோர்....: சேல்ஸ் ரிப்போர்ட்

ஹீரோ நிறுவனம் கடந்த ஜூன் மாதம் மட்டும் 7,04,562 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. இது கடந்தாண்டு ஜூன் மாதம்விற்பனையான 6,24,185 பைக்குகளை விட 13 சதவீத வளர்ச்சியாகும். இது மட்டும் அல்லது அந்நிறுவனம் இந்த காலாண்டில் 21,04,949 பைக்குகளை விற்று சாதனையும் படைத்துள்ளது.

ஜூன் மாதம் பைக் விற்பனை ஜோர்....: சேல்ஸ் ரிப்போர்ட்

மேலும் இந்நிறுவனம் இந்தாண்டு மட்டும் மார்ச், ஏப்ரல், மற்றும் ஜூன் ஆகிய 3 மாதங்களிலும் 7 லட்சத்திற்கு அதிகமான பைக்குகளை விற்பனை செய்துள்ளது. மேலும் கடந்தாண்டு செப்டம்பர்மாதத்திலும் இந்த இலக்கை எட்டியது.

ஜூன் மாதம் பைக் விற்பனை ஜோர்....: சேல்ஸ் ரிப்போர்ட்

ஹோண்டா மோட்டார்சைக்கிள்

ஹோண்டா நிறுவனம் பல ஆண்டுகளாக முதல் இடத்திற்கு வர துடித்து வந்தாலும் ஹீரோ இடத்தை விட்டு தருவதாக இல்லை, கடந்த மாதம் இவர்கள் முதல் இடத்திற்கு வந்தாலும் இந்த மாதம் ஹீரோவே மீண்டும் முதல் இடத்தை பிடித்து விட்டனர். கடந்த ஜூன் மாதம் மட்டும் ஹோண்டா நிறுவனம் 5,71,020 வாகனங்களை விற்பனை செய்துள்ளன. இது கடந்தாண்டு ஜூன் மாத விற்பனையை விட 28 சதவீத வளர்ச்சியாகும்.

ஜூன் மாதம் பைக் விற்பனை ஜோர்....: சேல்ஸ் ரிப்போர்ட்

மொத்த விற்பனையில் 3,61,236 ஸ்கூட்டர்கள், 1,74,258 பைக்குகள் விற்பனை நடந்துள்ளது. இதில் கடந்தாண்டு ஜூன் மாத விற்பனையை கணக்கிடும் போது ஸ்கூட்டர் விற்பனை 33 சதவீத வளர்ச்சியும், பைக் விற்பனை 20 சதவீத வளர்ச்சியும் பெற்றுள்ளது.

ஜூன் மாதம் பைக் விற்பனை ஜோர்....: சேல்ஸ் ரிப்போர்ட்

பஜாஜ் ஆட்டோ

தொடர்ந்து தங்களது விற்பனையைய சீராக வைத்திருக்கும் நிறுவனம் பஜாஜ் ஆட்டோ தான். கடந்த ஜூன் மாதம் மட்டும் இந்நிறுவனம் 2,00,949 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்தாண்டு விற்பனையான 1,08,109 வாகனங்களை ஒப்பிடும் போது 86 சதவீத வளர்ச்சியாகும்.

ஜூன் மாதம் பைக் விற்பனை ஜோர்....: சேல்ஸ் ரிப்போர்ட்

இந்நிறுவனத்தின் ஏற்றுமதியை பொருத்தவரை 1,36,803 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. இதை கடந்தாண்டு ஏற்றுமதியான வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 42 சதவீத வளர்ச்சியாகும். இந்நிறுவனத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சி 65 சதவீதம் வளர்ந்துள்ளது.

ஜூன் மாதம் பைக் விற்பனை ஜோர்....: சேல்ஸ் ரிப்போர்ட்

ராயல் என்பீல்டு

ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த ஜூன் மாதம் மொத்தம் 74,477 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்தாண்டு ஜூன்மாதம் விற்பனை எண்ணிக்கையான 63,160 ஐ காட்டிலும் 18 சதவீதவளரச்சியாகும். இந்நிறுவனம் தொடர்ந்து தங்கள் விற்பனையில் ஏற்றம் பெற்று கொண்டே வருகின்றனர்.

ஜூன் மாதம் பைக் விற்பனை ஜோர்....: சேல்ஸ் ரிப்போர்ட்

ஒட்டு மொத்த விற்பனையில் 72,588 வாகனங்களை உள்நாட்டிலும், 1889 வாகனங்களை வெளிநாட்டிலும் விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனம், ஏற்றுமதியிலும் இந்நிறுவனம் இந்த மாதம் 27 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது.

ஜூன் மாதம் பைக் விற்பனை ஜோர்....: சேல்ஸ் ரிப்போர்ட்

டிவிஎஸ் மோட்டார் கம்பெனி

டிவிஎஸ் நிறுவனம் கடந்த ஜூன் மாதம் மொத்தம் 3,13,614வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்தாண்டு விற்பனையை விட 15 சதவீத வளர்ச்சியாகும். இந்த எண்ணிக்கை என்பது இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் எண்ணிக்கை

ஜூன் மாதம் பைக் விற்பனை ஜோர்....: சேல்ஸ் ரிப்போர்ட்

இரண்டு சக்கர வாகன விற்பனையில் இந்நிறுவனம் மொத்தம் 3,01,201 வாகனங்களை விற்று கடந்தாண்டு ஜூன் மாத விற்பனையை காட்டிலும் 12.1 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. இந்தாண்டு இந்நிறுவனம் 2,46,176 வாகனங்களை இந்தியாவில் விற்பனைச செய்துள்ளது.

ஜூன் மாதம் பைக் விற்பனை ஜோர்....: சேல்ஸ் ரிப்போர்ட்

சுஸூகி மோட்டார் சைக்கிள்

சுஸூகி நிறுவனம் இந்தாண்டு 39 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. ஒவட்டு மொத்த விற்பனையாக 46,717 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்தாண்டு விற்பனையான 33,573 என்ற எண்ணிக்கையைகாட்டிலும் 39 சதவீத வளர்ச்சியாகும்.

ஜூன் மாதம் பைக் விற்பனை ஜோர்....: சேல்ஸ் ரிப்போர்ட்

இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் சுஸூகி நிறுவனம் ஒட்டு மொத்தமாக 40 சதவீத வளர்ச்சியை பெற்று நல்ல சாதகமான மார்கெட்டை பெற்று வருகிறது. இந்த நிதியாண்டிற்குள் அந்நிறுவனம் 7 லட்சம் வாகனங்களை விற்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு விற்பனை செய்து வருகிறது. கடந்த நிதியாண்டில் இந்நிறுவனம் 5 லட்சம் வாகனங்களை தான் விற்பனை செய்திருந்தது. குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
English summary
Two-Wheeler Sales: Automakers Register Good Growth In June 2018. Read in Tamil
Story first published: Tuesday, July 3, 2018, 19:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X