யுஎம் ட்யூட்டி 230 மோட்டார்சைக்கிள் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது!

அமெரிக்காவை சேர்ந்த யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம் விரைவில் புதிய க்ரூஸர் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. யுஎம் ட்யூட்டி 230 என்ற பெயரில் இந்த புதிய மாடல் வருகிறது. தற்போது 4 க்ரூஸர் மோ

By Saravana Rajan

யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம் விரைவில் புதிய க்ரூஸர் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

யுஎம் ட்யூட்டி 230 மோட்டார்சைக்கிள் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது!

அமெரிக்காவை சேர்ந்த யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவின் லோஹியா ஆட்டோ நிறுவனத்துடன் கூட்டணி வைத்து க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

யுஎம் ட்யூட்டி 230 மோட்டார்சைக்கிள் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது!

வாடிக்கையாளர்களுக்கு தோதான விலையில், அட்டாகசமான ஸ்டைலில் கிடைக்கும் யுஎம் மோட்டார்சைக்கிள் மாடல்கள் தற்போது மெல்ல மெல்ல வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க துவங்கி இருக்கிறது.

யுஎம் ட்யூட்டி 230 மோட்டார்சைக்கிள் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது!

தற்போது ரெனிகேட் கமாண்டோ கிளாசிக், கமாண்டோ மோஜாவி, கமாண்டோ மற்றும் ஸ்போர்ட்ஸ் எஸ் ஆகிய 4 மாடல்களையும், தோர் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளையும் விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், டியூட்டி 230 என்ற புதிய மாடலை விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம்.

யுஎம் ட்யூட்டி 230 மோட்டார்சைக்கிள் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது!

வரும் செப்டம்பர் மாதம் புதிய யுஎம் ட்யூட்டி 230 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 450சிசி முதல் 650 சிசி வரையிலான மாடல்களையும் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

யுஎம் ட்யூட்டி 230 மோட்டார்சைக்கிள் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது!

தற்போது உத்தரகாண்டில் உள்ள ஆலையில் யுஎம் மோட்டார்சைக்கிள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால், தென்னிந்தியாவில் மோட்டார்சைக்கிள்களை சப்ளை செய்வதற்கு கால தாமதம் ஏற்படுவதாக யுஎம்- லோஹியா கூட்டணி கருதுகிறது.

யுஎம் ட்யூட்டி 230 மோட்டார்சைக்கிள் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது!

எனவே, ஐதராபாத்தில் புதிய மோட்டார்சைக்கிள் ஆலையை அமைப்பதற்கான பணிகளில் யுஎம் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. ரூ.50 கோடி முதலீட்டில் இந்த புதிய ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ளது.

யுஎம் ட்யூட்டி 230 மோட்டார்சைக்கிள் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது!

இந்தியாவின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியின் தேவையை நிறைவு செய்யும் வகையில் இந்த ஆலை அமைக்கப்பட இருக்கிறது. விரைவாக டெலிவிரி கொடுப்பதற்காக டீலர்களுக்கு மோட்டார்சைக்கிள்களை எடுத்துச் செல்வதற்கான போக்குவரத்து செலவிற்கும் இந்த முதலீட்டுத் தொகை பயன்படுத்தப்பட இருக்கிறது.

Most Read Articles
English summary
UM Motorcycles plans to launch the Duty 230 in India, sometime in September this year. The company is working on expanding its sales network and business in the country.
Story first published: Wednesday, May 23, 2018, 16:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X