யுஎம் ரெனிகேட் கமாண்டோ கிளாசிக் மோட்டார்சைக்கிளில் புதிய வேரியண்ட் அறிமுகம்!

யுஎம் ரெனிகேட் கமாண்டோ கிளாசிக் மோட்டார்சைக்கிள் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட எஞ்சினுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது கார்புரேட்டர் எஞ்சின் மாடலிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

யுஎம் ரெனிகேட் கமாண்டோ கிளாசிக் மோட்டார்சைக்கிளின் கார்புரேட்டர் எஞ்சின் கொண்ட மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

யுஎம் ரெனிகேட் கமாண்டோ கிளாசிக் மோட்டார்சைக்கிளில் புதிய வேரியண்ட் அறிமுகம்!

அமெரிக்காவை சேர்ந்த யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம் பட்ஜெட் விலையிலான பிரிமீயம் க்ரூஸர் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. பல்வேறு ரகங்களில் இந்த க்ரூஸர் மாடல்கள் கிடைக்கின்றன. இந்த நிலையில், யுஎம் ரெனிகேட் கமாண்டோ கிளாசிக் மோட்டார்சைக்கிள் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட எஞ்சினுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது கார்புரேட்டர் எஞ்சின் மாடலிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

யுஎம் ரெனிகேட் கமாண்டோ கிளாசிக் மோட்டார்சைக்கிளில் புதிய வேரியண்ட் அறிமுகம்!

ரெனிகேட் கமாண்டோ கிளாசிக் மோட்டார்சைக்கிளின் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் மாடலுக்கும், கார்புரேட்டர் மாடலுக்கும் தோற்றத்தில் வித்தியாசங்கள் இல்லை. பெரிய விண்ட்ஸ்கிரீன் அமைப்பு, அதிக கொள்திறனும், வலிமையான தோற்றத்தை தரும் பெட்ரோல் டேங்க், பெட்டிகள், பேக் ரெஸ்ட், ஸ்போக்ஸ் சக்கரங்கள் என முழுமையான க்ரூஸர் மாடலாக தோற்றமளிக்கிறது.

யுஎம் ரெனிகேட் கமாண்டோ கிளாசிக் மோட்டார்சைக்கிளில் புதிய வேரியண்ட் அறிமுகம்!

இந்த மோட்டார்சைக்கிளில் இருக்கும் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட 279.5சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 25.15 பிஎச்பி பவரையும், 23 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் நிலையில், தற்போது வந்துள்ள கார்புரேட்டர் மாடல் 23.7 பிஎச்பி பவரையும், 23 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

யுஎம் ரெனிகேட் கமாண்டோ கிளாசிக் மோட்டார்சைக்கிளில் புதிய வேரியண்ட் அறிமுகம்!

இந்த மோட்டார்சைக்கிளில் முன்புறத்தில் 41 மிமீ ஹைட்ராலிக் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் இரட்டை ஹைட்ராலிக் ஸ்பிரிங்குகள் கொண்ட சஸ்பென்ஷனும் இடம்பெற்றுள்ளது. முன்சக்கரத்தில் 280 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 130 மிமீ டிரம் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்லன. முன்புறத்தில் 16 அங்குல ஸ்போக்ஸ் சக்கரமும், பின்புறத்தில் 15 அங்குல ஸ்போக்ஸ் சக்கரமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

யுஎம் ரெனிகேட் கமாண்டோ கிளாசிக் மோட்டார்சைக்கிளில் புதிய வேரியண்ட் அறிமுகம்!

வரும் 2019ம் ஆண்டு ஏப்ரல் முதல் 125சிசி ரகத்திற்கு மேலான பைக்குகளில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயமாக்கப்பட இருக்கிறது. ஆனால், தற்போது வந்துள்ள மாடலில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யுஎம் ரெனிகேட் கமாண்டோ கிளாசிக் மோட்டார்சைக்கிளில் புதிய வேரியண்ட் அறிமுகம்!

யுஎம் ரெனிகேட் கமான்டோ கிளாசிக் மோட்டார்சைக்கிளின் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் மாடல் ரூ.2.01 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும், கார்புரேட்டர் மாடல் ரூ.1.95 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும். ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, ஜாவா மற்றும் ஜாவா 42 ஆகிய மோட்டார்சைக்கிள் மாடல்களுடன் போட்டி போடும்.

Most Read Articles
English summary
UM Motorcycles has launched the carburettor variant of the Renegade Commando Classic in India. The motorcycle is priced at Rs 1.95 lakh, ex-showroom (Delhi). UM already offers the fuel-injected variant of the Renegade Commando Classic which is priced at a premium of Rs 6,000 at Rs 2.01 lakh, ex-showroom (Delhi).
Story first published: Thursday, December 6, 2018, 15:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X