அக்., மாதம் விற்பனைக்கு வருகிறது வெஸ்பா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

எலெக்ட்ரிக் வெஸ்பா ஸ்கூட்டாராக வெஸ்பா எலெக்டரிக்கா வரும் அக்.,மாதம் விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜில் 100 கி.மீ வரை பயணிக்கும் எனவும், 4 மணி நேரத்தில் முழு பேட்டரியும் சார்ஜ் ஆகிவிடும

By Balasubramanian

எலெக்ட்ரிக் வெஸ்பா ஸ்கூட்டாராக வெஸ்பா எலெக்டரிக்கா வரும் அக்.,மாதம் விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜில் 100 கி.மீ வரை பயணிக்கும் எனவும், 4 மணி நேரத்தில் முழு பேட்டரியும் சார்ஜ் ஆகிவிடும் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஸ்கூட்டர் குறித்த முழு தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

அக்.. மாதம் விற்பனைக்கு வருகிறது வெஸ்பா எலெக்டிரிகா

ஸ்கூட்டர்களில் தனக்கென்று தனியாக ஒரு வாடிக்கையாளர்கள் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளது பியாஜியோ நிறுவனத்தின் வெஸ்பா ஸ்கூட்டர், இதன் லுக்கில்தான் வாடிக்கையாளர்கள் மியங்கி போய்விடுகின்றனர். இந்தியாவில் விற்கும் மற்ற ஸ்கூட்டர்களை விட வெஸ்பா விலை உயர்ந்ததாக இருந்தாலும் அதை சிலர் விரும்பி வாங்குகின்றனர்.

அக்.. மாதம் விற்பனைக்கு வருகிறது வெஸ்பா எலெக்டிரிகா

இப்படி மக்களே தேடி வந்து வாங்கும் அளவிற்கு பெரும் தற்பெயரை பெற்ற வெஸ்பா பைக்க விரைவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தவுள்ளது. அதற்கு வெஸ்பா எலெக்ட்ரிகா என அந்நிறுவனம் பெயரிட்டுள்ளது. வரும் அக்., மாதம் ஐரோப்பிய நாடுகளில் இந்த ஸ்கூட்டரை முதலில் விற்பனைக்கு கொண்டு வருகிறது. இந்த ஆமெரிக்கா, மற்றும் ஆசியாவிற்கு 2019ம் ஆண்டு முதல் பாதியில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிகிறது.

அக்.. மாதம் விற்பனைக்கு வருகிறது வெஸ்பா எலெக்டிரிகா

இந்த எலெக்ட்ரிகா பைக் அதிகபட்சம் முழு சார்ஜில் 100 கி.மீ வரை பயணிக்க கூடியது. சாதாரண 50 சிசி ஸ்கூட்டரை விட அதிக பவர் உடன் இயங்கும். இந்த ஸ்கூட்டரில் உள்ள பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆக 4 மணி நேரம் ஆகும்.

அக்.. மாதம் விற்பனைக்கு வருகிறது வெஸ்பா எலெக்டிரிகா

இந்த ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் இதில் உள்ள எக்கோ டிரைவிங் மோட் இந்த பைக்கை 30கி.மீ. வேகத்தில் லிமிட் செய்கிறது. இதன் மூலம் பேட்டரியில் வாழ்நாளும் அதிகமாகும் என கூறப்படுகிறது.

அக்.. மாதம் விற்பனைக்கு வருகிறது வெஸ்பா எலெக்டிரிகா

முற்றிலும் எலெக்ட்ரிக்கில் இயங்குவதால் இந்த ஸ்கூட்டர் இயங்கும் போது சத்தம் எதுவுமே வாராது. அதே நேரத்தில் இந்த ஸ்கூட்டரில் சில ஆர்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் அம்சங்கள் இதில் அடங்கியுள்ளது.

அக்.. மாதம் விற்பனைக்கு வருகிறது வெஸ்பா எலெக்டிரிகா

சாலையை கடப்பவர்களை கண்காணிப்பது. ரோட்டில் உடன் பயணிக்கும் வாகனத்தை கண்காணிப்பது. இப்படியாக சில உயர் ரக கருவிகள் உள்ளன. மேலும் நாம் செல்லும் வழியில் உள்ள டிராபிக்கை கண்கிட்டு எந்த விழியாக சென்றால் விரைவாக செல்லலாம் என்ற தகவலை தரும்.

அக்.. மாதம் விற்பனைக்கு வருகிறது வெஸ்பா எலெக்டிரிகா

மேலும் பியாஜியோ நிறுவனம் தற்போது ஹைபிரிட் எலெட்டிக்கா எக்ஸ் என்ற ஸ்கூட்டரையும் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இது முழு சார்ஜில் 200 கி.மீ. வரை இயங்கும் திறன் கொண்டாதாக இருக்கும். இதில் உள்ள பேட்டரி சாதாரண எலெக்ட்ரிகா ஸ்கூட்டரில் உள்ள பேட்டரியை காட்டிலும் குறைந்த திறன் கொண்டது தான்.

அக்.. மாதம் விற்பனைக்கு வருகிறது வெஸ்பா எலெக்டிரிகா

இந்த பேட்டரியின் மொத்த ரேஞ்ச் 50 கி.மீ. தான். மேலும் இதில் கேஸ் பவர் ஜெனரேட்டர் பொருத்தப்பட்டிருக்கும். அதை ஆன் செய்தால் அது செயல்பட்டு பேட்டரியை குறிப்பிட்ட அளவிற்கு கீழே இறங்காமல் பார்த்துக்கொள்ளும், அல்லது தேவையான நேரம் நாம் அந்த ஜெனரேட்டரை ஆன் செய்ய முடியும். இந்த எலெக்ட்ரிகா எக்ஸ் பைக் குறைந்த தூர பயணத்திற்கு ஏற்றது. இந்த இரண்டு ஸ்கூட்டர்களின் விலையையும் அந்நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்ததில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

Most Read Articles
மேலும்... #பியாஜியோ #piaggio
English summary
Vespa's first electric scooter goes on sale in Europe this October. Read in Tamil
Story first published: Friday, August 31, 2018, 11:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X