முதல் வெஸ்பா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரெடி... ஆனால்?

By Saravana Rajan

வெஸ்பா பிராண்டில் புதிய மின்சார ஸ்கூட்டர் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு பியாஜியோ குழுமம் திட்டமிட்டுள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

முதல் வெஸ்பா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு தயார்... ஆனால்...?!

இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் வெஸ்பா எலெக்ட்ரிக்கா என்ற புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் கான்செப்ட் மாடலை பியாஜியோ குழுமம் காட்சிக்கு வைத்திருந்தது. மேலும், இந்த ஸ்கூட்டரின் தயாரிப்பு நிலை மாடலை விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரும் திட்டத்துடன் செயலாற்றி வருகிறது.

முதல் வெஸ்பா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு தயார்... ஆனால்...?!

வெஸ்பா எலெக்ட்ரிக்கா மின்சார ஸ்கூட்டரானது வெஸ்பா விஎக்ஸ் வரிசை ஸ்கூட்டரை அடிப்படையாக கொண்ட மின்சார மாடலாக வருகிறது. இந்த ஸ்கூட்டரில் 5kW திறன் கொண்ட மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் மின் மோட்டார் 5.36 பிஎச்பி பவரையும், 20 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததா இருக்கிறது.

முதல் வெஸ்பா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு தயார்... ஆனால்...?!

இந்த ஸ்கூட்டரில் 4.2kWh லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. 4 மணிநேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகும். முழுமையாக சார்ஜ் செய்யும் பட்சத்தில் 100 கிமீ தூரம் பயணிக்க முடியும்.

முதல் வெஸ்பா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு தயார்... ஆனால்...?!

அதேநேரத்தில், இதன் வெஸ்பா எக்ஸ் என்ற ஹைப்ரிட் மாடலானது 200 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறன் வாய்ந்ததாக இருக்கும். எனினும், இதில் 100சிசி பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டாரில் இயங்கும் என்பதால் முழுமையான மின்சார ஸ்கூட்டராக இருக்காது.

முதல் வெஸ்பா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு தயார்... ஆனால்...?!

மின்சார வாகனங்களுக்கான புதிய விதிமுறைகளை மத்திய அரசு அமல்படுத்திய உடன் இந்த புத்தம் புதிய மின்சார ஸ்கூட்டரை களமிறக்க பியாஜியோ நிறுவனம் தயாராக இருக்கிறது. எனவே, விற்பனைக்கு கொண்டு வருவதற்கு கால அளவு எதையும் நிர்ணயிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.

முதல் வெஸ்பா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு தயார்... ஆனால்...?!

வெஸ்பா நிறுவனத்தின் பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் நவீன தொழில்நுட்ப அம்சங்கள் கொண்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மின்சார வாகனங்களுக்கு சிறப்பு திட்டங்களை மத்திய அரசு நடைமுறைப்படுத்தும்போது, உடனடியாக இந்த மின்சார ஸ்கூட்டரை விற்பனைக்கு களமிறக்கும் முனைப்பில் பியோஜியோ குழுமம் காத்திருக்கிறது.

முதல் வெஸ்பா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு தயார்... ஆனால்...?!

இதுகுறித்து பியாஜியோ இந்தியா நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவு தலைவர் ஆசிஷ் யக்மி கூறுகையில்," எங்களிடம் பேட்டரியில் இயங்கும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான தொழில்நுட்பம் கைவசம் உள்ளது. ஆனால், மின்சார வாகனங்களுக்கான புதிய விதிமுறைகள் நடைமுறைப்படுத்துவதற்காக காத்திருக்கிறோம். மேலுலம், 2020ம் ஆண்டிற்குள் மோட்டோப்ளெக்ஸ் ஷோரூம்களை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளோம்," என்று கூறினார்.

முதல் வெஸ்பா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு தயார்... ஆனால்...?!

தற்போது பியோஜியோ நிறுவனத்திற்கு 150 மோட்டோப்ளெக்ஸ் விற்பனையகங்கள் உள்ளன. இதனை இரு மடங்காக உயர்த்துவதற்கு பியோஜியோ குழுமம் திட்டமிட்டுள்ளது. மேலும், மோட்டோப்ளெக்ஸ் ஷோரூம்கள் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கவும் முயற்சி செய்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Most Read Articles

மேலும்... #பியாஜியோ #piaggio
English summary
Piaggio Group is planning to enter the electric mobility segment in India. The company already showcased their Vespa Elettrica e-scooter concept at this year's Auto Expo. Piaggio India is now considering the launch of their Vespa Elettrica e-scooter sometime soon.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X