2 லாரிகளுக்கு இடையில் புகுந்து சர்வ சாதாரணமாக பைக் ஓட்டிய கோஹ்லி.. அதன்பின் என்ன நடந்தது தெரியுமா?

அதிக அளவிலான விபத்துக்கள் நடைபெறுவதை தூண்டும் வகையில் விராட் கோஹ்லி நடந்து கொள்கிறார் என திடுக்கிடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அதிக அளவிலான விபத்துக்கள் நடைபெறுவதை தூண்டும் வகையில் விராட் கோஹ்லி நடந்து கொள்கிறார் என திடுக்கிடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விபத்துக்களில் இளைஞர்கள் உயிரிழக்க விராட் கோஹ்லி காரணம்.. திடுக் குற்றச்சாட்டு..

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கருக்கு இணையான பேட்ஸ்மேனாக வர்ணிக்கப்படுபவர் விராட் கோஹ்லி. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோஹ்லிக்கு, இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

விபத்துக்களில் இளைஞர்கள் உயிரிழக்க விராட் கோஹ்லி காரணம்.. திடுக் குற்றச்சாட்டு..

விராட் கோஹ்லியின் உலகத்தரம் வாய்ந்த ஷாட்களே, அவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்களை தேடி கொடுத்துள்ளது எனலாம். இந்தியாவின் பரம எதிரியாக வர்ணிக்கப்படும் பாகிஸ்தானிலும் கூட விராட் கோஹ்லிக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருப்பது பெருமை கொள்ள வேண்டிய விஷயம்.

விபத்துக்களில் இளைஞர்கள் உயிரிழக்க விராட் கோஹ்லி காரணம்.. திடுக் குற்றச்சாட்டு..

இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த விராட் கோஹ்லியின் மற்றொரு அடையாளம் 'ஆக்ரோஷம்'. எப்போதும் சாந்த சொரூபியாகவே காட்சியளிக்கும் மஹேந்திர சிங் டோனிக்கு பின், இந்திய கிரிக்கெட் அணியின் தலைவனாக உருவெடுத்த ஆக்ரோஷ கேப்டன் விராட் கோஹ்லி.

விபத்துக்களில் இளைஞர்கள் உயிரிழக்க விராட் கோஹ்லி காரணம்.. திடுக் குற்றச்சாட்டு..

'கூல் கேப்டன்' என பெயரெடுத்த டோனி, சர்ச்சைகளில் சிக்குவது என்பது அரிதிலும் அரிதான ஓர் விஷயம். ஆனால் விராட் கோஹ்லியோ, தனது ஆக்ரோஷ குணத்தின் காரணமாக அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி கொள்பவர். இந்த வகையில் தற்போது புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார் விராட் கோஹ்லி.

விபத்துக்களில் இளைஞர்கள் உயிரிழக்க விராட் கோஹ்லி காரணம்.. திடுக் குற்றச்சாட்டு..

நம்பர்-1 பேட்ஸ்மேனான விராட் கோஹ்லி, நம்பர்-1 இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடராக சமீபத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். எனவே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன மோட்டார் சைக்கிள்களை, விராட் கோஹ்லிதான் ப்ரமோட் செய்கிறார்.

விபத்துக்களில் இளைஞர்கள் உயிரிழக்க விராட் கோஹ்லி காரணம்.. திடுக் குற்றச்சாட்டு..

இந்த வகையில் விராட் கோஹ்லி ப்ரமோட் செய்த ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 ஆர் மோட்டார் சைக்கிளுக்கான புதிய டிவிசி (TVC) வெளியாகியுள்ளது. ஆனால் இந்த விளம்பரமானது, ஆபத்தான ரைடிங்கை ஊக்குவிப்பது போல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விபத்துக்களில் இளைஞர்கள் உயிரிழக்க விராட் கோஹ்லி காரணம்.. திடுக் குற்றச்சாட்டு..

அபாயகரமான ஓவர் டேக்குகளை விராட் கோஹ்லி எடுப்பது போலவும், டிரக்குகளுக்கு இடையே ஆபத்தான முறையில் அவர் பயணிப்பது போலவும், இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் 'ஃபியர் கோ டு காத், ஃபியர் கோ டு மார்' (fear ko tu gaadh, fear ko tu maar) என்ற ஹிந்தி ராப் உடன் வீடியோ முடிவடைகிறது.

விபத்துக்களில் இளைஞர்கள் உயிரிழக்க விராட் கோஹ்லி காரணம்.. திடுக் குற்றச்சாட்டு..

'ஃபியர் கோ டு காத், ஃபியர் கோ டு மார்' என்றால், உங்கள் பயத்தை குழி தோண்டி புதைத்து விடுங்கள், உங்கள் பயத்தை வீழ்த்துங்கள் என பொருள்படுகிறது. துஷர் கெவாடியா என்பவர், பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள, அந்த சர்ச்சைக்குள்ளான டிவிசியை நீங்கள் கீழே காணலாம்.

இந்த வீடியோவிற்கு கமெண்ட் செய்துள்ள ஒரு நபர், ''இந்த விளம்பரம் தடை செய்யப்பட வேண்டும். ஏனெனில் உயிரிழப்புக்கு வழிவகுக்கும் மோசமான ரைடிங் ஸ்டைலை இது ஊக்குவிக்கிறது. விளம்பரம் என்றால், பாதுகாப்பாக ஷூட் செய்யப்படும். ஸ்பெஷல் எபெக்ட்ஸ் மூலம் மெருகேற்றப்படும்.

விபத்துக்களில் இளைஞர்கள் உயிரிழக்க விராட் கோஹ்லி காரணம்.. திடுக் குற்றச்சாட்டு..

ஆனால் நிஜ வாழ்க்கையில், இரண்டு டிரக்குகளுக்கு இடையே பயணிப்பது என்பது மிகவும் ஆபத்தானது'' என கூறியுள்ளார். அதே சமயத்தில் இந்த வீடியோவுக்கு ஆதரவாகவும் கமெண்ட்கள் வருகின்றன. ''இது வெறும் விளம்பரம்தான். நிபுணர்கள் மேற்பார்வையில் பாதுகாப்பாகதான் ஸ்டண்ட்கள் செய்யப்படும்.

விபத்துக்களில் இளைஞர்கள் உயிரிழக்க விராட் கோஹ்லி காரணம்.. திடுக் குற்றச்சாட்டு..

அதுமட்டுமல்லாமல், கடந்த ஒரு தசாப்தமாக பல்சர் விளம்பரங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். அதை விடுத்து விட்டு, இந்த விளம்பரம் மீது மட்டும் குற்றம் சுமத்தக்கூடாது'' என்பது அந்த ஆதரவான கமெண்ட்களில் ஒன்று.

Most Read Articles

ஹீரோ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த எக்ஸ்ட்ரீம் 200ஆர் மோட்டார் சைக்கிளின் ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

English summary
Virat Kohli’s Hero Xtreme 200 R TVC Creates Controversy. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X