வோட்காவை போட்டவுடன் சீறி பாய்ந்த யமஹா சூப்பர் பைக்!!

தலைப்பை பார்த்த உடன் தலை சுற்றுகிறதா. மேலும் சுற்றப்போகிறது . கடந்த வாரம் அமெரிக்காவில் நடைபெற்றSALT FLATS SPEED TRAILS (PLACE UTAH) எனப்படும் பந்தயத்தில் 1980 இல் தயாரிக்கப்பட்ட யமஹா XS850 வாகனம் புத

தலைப்பை பார்த்த உடன் தலை சுற்றுகிறதா. மேலும் சுற்றப்போகிறது . கடந்த வாரம் அமெரிக்காவின் உட்டா பகுதியில் நடந்த SALT FLATS SPEED TRAILS எனப்படும் பந்தயத்தில் 1980 இல் தயாரிக்கப்பட்ட யமஹா XS850 பைக் புதிய வேக சாதனையை படைத்தது.

வோட்காவை போட்டவுடன் சீறி பாய்ந்த யமஹா சூப்பர் பைக்!!

வாகனம் வேகமாய் செல்வதில் என்ன சாதனை என்ற கேள்விக்கு விடையாக இது எரிபொருள் கொண்டு இயங்காமல், அதற்கு மாறாக வோட்கா மதுபானத்தில் இயங்கி அனைவரையும் வியக்க வைத்துள்ளது. வோட்காவில் இயக்கப்பட்ட இந்த வாகனம் பந்தயத்தில் தனது அதிக வேகமாக 182கிமீ ஐ பதிவு செய்தது ஆச்சர்யம்.

வோட்காவை போட்டவுடன் சீறி பாய்ந்த யமஹா சூப்பர் பைக்!!

மாற்று எரிபொருள் வாகன பந்தயத்திற்காக உருவாக்கப்பட்ட இதன் குழு இது வெறும் 154கிமீ வேகம் தான் செல்லும் என எதிர்பார்த்தோம் என்று ஆரவாரம் செய்தனர். இருப்பினும் இந்த சாதனை இன்னும் முறையே அங்கீகரிக்கப்படவிவில்லை என்று தான் கூற வேண்டும்.

வோட்காவை போட்டவுடன் சீறி பாய்ந்த யமஹா சூப்பர் பைக்!!

மோண்ட்கோமேரி டிஸ்டில்லரி(MONTGOMERY DISTILLERY) நிறுவனத்தின் அதிபதியான, ரியான் மோண்ட்கோமேரி தான் இந்த பாராட்டிற்கும் பரிசிற்கும் உரியவர். ஆம் அவரே இந்த வாகனத்தை வெற்றிக்கு ஒட்டி சென்றார். இந்த 41 வயதான மனிதர் இதற்கு முன்பு எந்த வாகனத்தையும் பந்தயத்திற்காக தயாரித்ததும் இல்லை அதில் ஈடுபட்டதும் இல்லை என்பது நம்பத்தகா உண்மை.

வோட்காவை போட்டவுடன் சீறி பாய்ந்த யமஹா சூப்பர் பைக்!!

அவர் கூறியதாவது, "நாங்கள் எங்களால் ஆன சாதனையை செய்துவிட்டோம், இருப்பினும் இது முறையே அங்கீகரிக்கப்படவில்லை, நாங்கள் அது வரை பொறுமை காப்போம், மேலும் பழைய சாதனையான 113MPH ஐ நாங்கள் முறியடித்ததே போதும் என்றார்.

வோட்காவை போட்டவுடன் சீறி பாய்ந்த யமஹா சூப்பர் பைக்!!

பந்தயத்திற்கு முன் இந்த வாகனம் பரிட்சைக்கு உட்படுத்தப்பட்டபோது மணிக்கு 96 கிமீ மட்டுமே அதன் அதிகபட்ச வேகமாக இருந்தது என்று கூறுவது நம்பும்படியாக இல்லை. திடீரென பந்தயத்தில் இவ்வளவு வேகம் சாத்தியமற்றது. ஒரு வேலை ஒட்கா போதையில் ஓடி இருக்குமோ??

வோட்காவை போட்டவுடன் சீறி பாய்ந்த யமஹா சூப்பர் பைக்!!

இதன் என்ஜின் மற்றும் மற்ற உதிரி பாகங்கள் இதன் உரிமையாளர், அவரது மனைவி மற்றும் நண்பர்களால் அமைக்கப்பட்டது. இது நேரடியாக கடைகளில் கிடைக்கும் ஓட்காவை கொண்டு இயக்கப்பட்டதல்ல, சில சேர்ப்பான்கள் கொண்டு பலதரப்பட்ட பரிசோதனைக்கு பின் இதனை இந்த பந்தயத்தில் பயன்படுத்தியுள்ளனர். மேலும் இந்த ஓட்கா மனிதர்கள் குடிக்கும் தன்மை அற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வோட்காவை போட்டவுடன் சீறி பாய்ந்த யமஹா சூப்பர் பைக்!!

டிஸ்டில்லுடு வோட்காவில்(DISTILLED VODKA) சில சேர்ப்பான்கள் சேர்த்து பயன்படுத்தப்பட்ட இதன் பெயர் ஹெட்ஸ் "HEADS" எனப்படும். இந்த வோட்கா ஹெட்ஸ் ஆனது பல விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்டாலும் இதனை தைரியமாக வாகனத்தில் பயன்படுத்திய பெருமை இதன் உரிமையாளர் ரியானையே சாரும்.

வோட்காவை போட்டவுடன் சீறி பாய்ந்த யமஹா சூப்பர் பைக்!!

மேலும் இது தற்போது மாற்று எரிபொருளாய் முற்றிலும் அங்கீகரிக்கப்படும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. அவர் எப்படித்தான் 40 லிட்டர் வோட்கா ஹெட்ஸ் ஐ சேகரித்தாரோ பாவம். கிட்டத்தட்ட 5000 அமெரிக்கா டாலர் கணக்கீட்டை கொண்ட இந்த புதிய திட்டமானது மூன்றரை லட்சம் வரை இந்திய மதிப்பை பெறுகிறது. இந்த திட்டத்தின் பெயர் சடன் விஷ்டம்(SUDDEN WISDOM) .

வோட்காவை போட்டவுடன் சீறி பாய்ந்த யமஹா சூப்பர் பைக்!!

இதன் பெயரில் பல உள்ளர்த்தங்கள் உள்ளது என்பது இல்லை மறை காய். மேற்படி கூறியவாறு இதன் கட்டுமானம் ரியான் அவரது மனைவி மற்றும் நண்பர்களால் ஆனதும் ஒருபுறம் இருந்தாலும் வெற்றியின் பங்கு அதற்கு உதவிய கொலின் கோர்ன்பெர்க் நம்பர் 8 ஒயர் மோட்டார் சைக்கிள்(COLIN CORNBERG NO. 8 WIRE MOTORCYCLE) எனப்படும் நிறுவனத்திற்கும் சேரும்.

வோட்காவை போட்டவுடன் சீறி பாய்ந்த யமஹா சூப்பர் பைக்!!

பந்தய நாளிலிருந்து மூன்றே நாளுக்கு பின்னர் ஹோண்டா CBR750 1974 இல் உருவாக்கப்பட்ட வாகனம் இதன் அதிவேகத்தை கடந்தது. அதன் புள்ளி 230KMH ஆகும். இருப்பினும் அது வோட்காவில் இயங்கவில்லை என்பதால் வெற்றி நம்பக்கமே என பறைசாற்றுகிறது இந்த யமஹா குழு.

வோட்காவை போட்டவுடன் சீறி பாய்ந்த யமஹா சூப்பர் பைக்!!

மாற்று எரிபொருளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், அரசாங்கம் அதற்கான திட்டங்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் படைப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்து பரிசுகள் வழங்கி கொண்டு இருக்கிறது. இந்நேரத்தில் யாரும் யோசிக்காத நிலையில் வோட்காவை பயன்படுத்தி வாகனத்தை சீறி பாயவைத்தது பாராட்டவேண்டிய விஷயம்.

வோட்காவை போட்டவுடன் சீறி பாய்ந்த யமஹா சூப்பர் பைக்!!

இது பின்னாளில் அங்கீகரிக்கப்பட்ட மாற்றுப்பொருளை மாறும் என்பது முக்கியம். இதன் வேகத்தை மற்ற வாகனங்கள் முறியடித்தாலும் வோட்காவில் இவ்வளவு வேகம் செயல் திறன் என்பது திணறவைக்கும் விடயமே. தானியங்கி துறையில் இந்த வோட்கா வாகனம் நல்லதோர் வரவேற்பை பெற்று புதிய பொறியியல் மேம்பாடுகளைபெற வேண்டுமென பிரார்த்திப்போம்.

Most Read Articles

ராயல் என்பீல்டு பெகாசஸ் 500 எடிசன் பைக் ஆல்பம் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனம் மீதான கோபத்தால், புத்தம் புதிய பெகாசஸ் 500 எடிசன் பைக்குகளை, அதன் உரிமையாளர்கள் குப்பையில் வீசி வருகின்றனர். இந்த பைக்கின் விலை ரூ.2.65 லட்சம். இருந்தும் ஏன் குப்பையில் வீசுகின்றனர்? என்பதை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Last week, a 1980 Yamaha XS850 made a new speed record at the famous Bonneville Salt Flats Speed Trials in Utah, USA. However, it's not the motorcycle or its speed that has hit headlines but the fuel. The classic Yamaha runs on vodka!
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X