ஜாவா பைக்கில் உள்ள பிரேக்கிற்கு பின்னால் இவ்வளவு ரகசியங்கள் இருக்கிறதா?

70களில் ராஜாவாக வலம் வந்த ஜாவா பைக்குகள் மீண்டும் மார்கெட்டில் ஒரு கலக்கு கலக்க கடந்த சில தினங்களுக்கு முன்பு மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டது. இந்த பைக் வெளியான அன்றே இந்தியா முழுவதும் பைக் ரசிகர்கள்

70களில் ராஜாவாக வலம் வந்த ஜாவா பைக்குகள் மீண்டும் மார்கெட்டில் ஒரு கலக்கு கலக்க கடந்த சில தினங்களுக்கு முன்பு மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டது. இந்த பைக் வெளியான அன்றே இந்தியா முழுவதும் பைக் ரசிகர்கள் மத்தியில் ஒரு விதமான பரபரப்பு பற்றிக்கொண்டது.

ஜாவா பைக்கில் உள்ள பிரேக்கிற்கு பின்னால் இவ்வளவு ரகசியங்கள் இருக்கிறதா?

பலர் இந்த பைக் குறித்த தகவல்களை அறிவதற்காக ஆவலுடன் காத்திருந்தனர். இந்த பைக் வந்தவுடன் சமூக வலைதளங்களில் இந்த பைக்கின் புகைப்படங்கள் அதிக அளவில் பகிரப்பட்டது.

ஜாவா பைக்கில் உள்ள பிரேக்கிற்கு பின்னால் இவ்வளவு ரகசியங்கள் இருக்கிறதா?

அறிமுக நாளன்று மஹிந்திரா நிறுவனம் ஜாவா, ஜாவா 42 மற்றும் ஜாவா பெராக் ஆகிய பைக்குகளை அறிமுகப்படுத்தியது. இதில் ஜாவா, மற்றும் ஜாவா 42 பைக்குகள் முதலில் விற்பனைக்கு வரும், ஜாவா பெராக் பைக் கஸ்டம் ஃபேக்டரி ஃபிட்டிங்காக சில மாதங்களுக்கு பின் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.

ஜாவா பைக்கில் உள்ள பிரேக்கிற்கு பின்னால் இவ்வளவு ரகசியங்கள் இருக்கிறதா?

ஜாவா மற்றும் ஜாவா 42 பைக்குகள் முறையே ரூ.1.64 லட்சம் மற்றும் ரூ.1.55 லட்ம் என்ற விலையில் மார்கெட்டிற்கு விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஜாவா பைக்குகளை பார்த்த பலர் பெரிய குறையாக சொல்வது ஒன்றே ஒன்றுதான். இந்த பைக்கில் பின் வீலில் டிஸ்க் பிரேக் இல்லை என்பதுதான் அது.

ஜாவா பைக்கில் உள்ள பிரேக்கிற்கு பின்னால் இவ்வளவு ரகசியங்கள் இருக்கிறதா?

ஜாவா பெராக் பைகில் இரண்டு வீல்களிலும் டிஸ்க் பிரேக் மற்றும் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் உடன் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் என்ட்ரி லெவல் பைக்கான ஜாவா 42 மற்றும் ஜாவா பைக்குகளில் இந்த பிரேக்குகள் இல்லை. இது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

Recommended Video

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!
ஜாவா பைக்கில் உள்ள பிரேக்கிற்கு பின்னால் இவ்வளவு ரகசியங்கள் இருக்கிறதா?

ஜாவா பைக்குகள் 70-80களில் பெரும் பிரபலமடைந்த போது டிஸ்க் பிரேக் என்பது உலகளவிலேயே விரல் விட்டு எண்ணக்கூடிய பைக்களில்தான் இருந்தது. இன்றைய நிலைமை வேறு.

ஜாவா பைக்கில் உள்ள பிரேக்கிற்கு பின்னால் இவ்வளவு ரகசியங்கள் இருக்கிறதா?

சிறிய ரக பைக்குகள் கூட டிஸ்க் பிரேக் உடன் வருகிறது. ஆனால் தற்போது வெளியாகவுள்ள ஜாவா பைக்குகளில் முன் வீலில் மட்டுமே டிஸ்க் பிரேக் மற்றும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளது.

ஜாவா பைக்கில் உள்ள பிரேக்கிற்கு பின்னால் இவ்வளவு ரகசியங்கள் இருக்கிறதா?

தற்போது அறிமுகமாகியுள்ள இரண்டு ஜாவா பைக்குளின் பிரேக்கிங் சிஸ்டத்தை பொறுத்தவரை முன் வீலில் 280 மிமீ டிஸ்க் பிரேக் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடனும், பின் வீலில் 153 மிமீ டிரம் பிரேக் உடனும் வருகிறது. இந்த பைக்கில் பின் பகுதியில் உள்ள பாகம் பழைய மாடல் பைக்கை எந்த வித்தியாசமும் இல்லாமல் பிரதிபலிக்கிறது.

ஜாவா பைக்கில் உள்ள பிரேக்கிற்கு பின்னால் இவ்வளவு ரகசியங்கள் இருக்கிறதா?

இது குறித்து கிளாசிக் லெஜன்ட்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது : "ஜாவா பைக்குகளில் முதலாவதாக விற்பனைக்கு வரவுள்ள மாடலில் பின் வீலில் டிரம் பிரேக்குகள்தான் பொருத்தப்பட்டுள்ளது. பலர் ஏன் டிஸ்க் பிரேக் பொருத்தப்படவில்லை என கேட்கிறார்கள். டிரம் பிரேக்கை சாதாரணமாக எண்ணிவிட முடியாது.

ஜாவா பைக்கில் உள்ள பிரேக்கிற்கு பின்னால் இவ்வளவு ரகசியங்கள் இருக்கிறதா?

முன் பக்கத்தில் டிஸ்க் மற்றும் பின் பக்கத்தில் டிரம் பிரேக் தரும் பிரேக்கிங் பெர்ஃபார்மென்ஸ் நிச்சயம் நல்ல ரிசல்டை தரும். எந்த வகையிலும் அது பிரேக்கிங் பெர்ஃபார்மென்ஸை பாதிக்காது.

ஜாவா பைக்கில் உள்ள பிரேக்கிற்கு பின்னால் இவ்வளவு ரகசியங்கள் இருக்கிறதா?

டிரம் பிரேக்குகளை விட டிஸ்க் பிரேக்குகளை பொருத்துவதுதான் எங்களுக்கும் சுலபமானது. ஆனால் நாங்கள் பழைய ஜாவா பைக்கின் அதே லுக்கை வழங்க விரும்புகிறோம்.

ஜாவா பைக்கில் உள்ள பிரேக்கிற்கு பின்னால் இவ்வளவு ரகசியங்கள் இருக்கிறதா?

பின் வீலிலும் டிஸ்க் பிரேக்குகளை பொருத்துவது என்பது பைக்கின் விலையையும் அதிகரிக்கும். டிரம் பிரேக்கை பொருத்தியதன் மூலம் ஜாவா பைக் வாங்குபவர்களுக்கு சில ஆயிரம் மிச்சப்படுகிறது" என கூறினார்.

ஜாவா பைக்கில் உள்ள பிரேக்கிற்கு பின்னால் இவ்வளவு ரகசியங்கள் இருக்கிறதா?

ஜாவா பைக்கில் பின் வீலில் டிஸ்க் பிரேக் இல்லாவிட்டாலும் முன் வீலில் உள்ள டிஸ்க் பிரேக்கில் ஒரு சிறப்பு அம்சம் இருக்கிறது. இந்த டிஸ்க் பிரேக் பிரம்போ நிறுவனத்தின் பைகபிரே என்ற பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பிரேக் ஆட்டோமொபைல் துறையில் பெயர் பெற்ற பிரம்போ நிறுனத்தின் தயாரிப்பு.

ஜாவா பைக்கில் உள்ள பிரேக்கிற்கு பின்னால் இவ்வளவு ரகசியங்கள் இருக்கிறதா?

பிரம்போ நிறுவனம் 1961ம் ஆண்டு முதலே பிரேக்குகளை தயாரித்து வருகிறது. இந்நிறுவனம் சிறந்த தரத்துடனான டிஸ்க் பிரேக்குகளை தயாரிப்பில் மிகவும் பிரபலமானது.

ஜாவா பைக்கில் உள்ள பிரேக்கிற்கு பின்னால் இவ்வளவு ரகசியங்கள் இருக்கிறதா?

1961ம் ஆண்டு முதல் தனது தயாரிப்பை தொடர்ந்தாலும், 1964 முதல்தான் மார்கெட்டில் முதல் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையை மேற்கொண்டது.

ஜாவா பைக்கில் உள்ள பிரேக்கிற்கு பின்னால் இவ்வளவு ரகசியங்கள் இருக்கிறதா?

அதுவரை சிறிய கம்பெனியாக ஆஃப்டர் மார்கெட் விற்பனையைதான் மேற்கொண்டது.

1980களில் இந்த நிறுவனத்தின் பிரேக்குகள் மிகவும் பிரபலமடைந்தது. இந்நிறுவனம் பிஎம்டபிள்யூ, கிஸ்லர், ஃபெராரி, மெர்சிடிஸ் பென்ஸ், நிஸ்ஸான் மற்றும் போர்ஷே நிறுவனங்களுக்கு தங்களது பிரேக்குகளை சப்ளே செய்து வந்தது.

ஜாவா பைக்கில் உள்ள பிரேக்கிற்கு பின்னால் இவ்வளவு ரகசியங்கள் இருக்கிறதா?

இன்று இந்த நிறுவனம் பன்னாட்டு நிறுவனமாக மாறியுள்ளது. பிரேக்குகளில் மட்டும் இந்நிறுவனம் சுமார் 1300 தயாரிப்புகளை இதுவரை மேற்கொண்டுள்ளது. கேலிபர் பிரேக்குகள், டிரம் பிரேக்குகள், ரோட்டார்கள், பிரேக் லையன்கள் என பல தயாரிப்புகளும் இதில் அடங்கும்.

ஜாவா பைக்கில் உள்ள பிரேக்கிற்கு பின்னால் இவ்வளவு ரகசியங்கள் இருக்கிறதா?

இது மட்டும் அல்ல இந்நிறுவனம் ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் ஃபெராரி நிறுவன கார்களுக்கு இந்த பிரேக்குகள்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த அளவிற்கு பிரபலமாக இந்நிறுவனம் மாறியது என்றால் இந்நிறுவனம் வழங்கும் தயாரிப்புகளில் உள்ள தரம்தான் அதற்கு காரணம்.

ஜாவா பைக்கில் உள்ள பிரேக்கிற்கு பின்னால் இவ்வளவு ரகசியங்கள் இருக்கிறதா?

மேலே தலைமை செயல் அதிகாரி சொல்லியது போல் இந்த பிரம்போ பிரேக்கும் சாதாரண டிஸ்க் பிரேக்கும் இணைந்தாலே சிறப்பான பிரேக்கிங் பெர்ஃபார்மென்ஸை வழங்க முடியும். மேலும் மார்கெட்டில் பைக் அறிமுகப்படுத்தும் போதே பலர் பின் விலீல் டிஸ்க் பிரேக் இல்லை என்று குறைப்பட்டு கொண்டதை மஹிந்திரா நிறுவனம் கவனித்துள்ளது.

இது போன்ற செய்திகளை உங்கள் மொபைலில் உடனுக்குடன் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்..!

ஜாவா பைக்கில் உள்ள பிரேக்கிற்கு பின்னால் இவ்வளவு ரகசியங்கள் இருக்கிறதா?

இதனால் வரும் காலத்தில் ஜாவா பைக்ககள் பின் வீலும் டிஸ்க் பிரேக் உள்ள வேரியன்டை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்கை புக் செய்த பலர் பைக் வந்த பின்பு பின் வீலில் ஆஃப்டர் மார்கெட் டிஸ்க் பிரேக்கை பொருத்த திட்டமிட்டுள்ளனர்.

Most Read Articles
English summary
Why jawa bikes dont have rear disc brake?. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X