விலை குறைவான 200 சிசி பைக்.. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் டெலிவரி தொடங்கியது.. எக்ஸ் பல்ஸ் வருவது எப்போது

இந்தியாவில் மிகவும் குறைவான விலையில் கிடைக்கும் 200 சிசி ஸ்போர்ட்டி பைக் என்ற பெருமையை பெற்றுள்ள ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்குகளின் டெலிவரி, மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே தொடங்கியுள்ளது.

By Arun

இந்தியாவில் மிகவும் குறைவான விலையில் கிடைக்கும் 200 சிசி ஸ்போர்ட்டி பைக் என்ற பெருமையை பெற்றுள்ள ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்குகளின் டெலிவரி, மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே தொடங்கியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விலை குறைவான 200 சிசி பைக்.. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் டெலிவரி தொடங்கியது.. எக்ஸ் பல்ஸ் வருவது எப்போது?

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், எக்ஸ்ட்ரீம் 200ஆர் மோட்டார் சைக்கிள் மூலமாக, மீண்டும் 200 சிசி, என்ட்ரி லெவல் ஸ்போர்ட்ஸ் பைக் செக்மெண்டிற்கு திரும்பியுள்ளது.

விலை குறைவான 200 சிசி பைக்.. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் டெலிவரி தொடங்கியது.. எக்ஸ் பல்ஸ் வருவது எப்போது?

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக் சமீபத்தில்தான் லான்ச் செய்யப்பட்டது. இதன் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை 88 ஆயிரம் மட்டுமே. இதன்மூலம் இந்தியாவில் மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் 200 சிசி ஸ்போர்ட்டி பைக் என்ற பெருமையை ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பெற்றது.

விலை குறைவான 200 சிசி பைக்.. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் டெலிவரி தொடங்கியது.. எக்ஸ் பல்ஸ் வருவது எப்போது?

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக் ரூ.1.03 லட்சம், பஜாஜ் பல்சர் என்எஸ் 200 பைக் ரூ.1.04 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. எனவே மேற்கண்ட இரு பைக்குகளுக்கும் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் கடும் சவால் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை குறைவான 200 சிசி பைக்.. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் டெலிவரி தொடங்கியது.. எக்ஸ் பல்ஸ் வருவது எப்போது?

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக் விலை குறைவு என்றாலும், டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி மற்றும் பஜாஜ் பல்சர் என்எஸ் 200 அளவிற்கு ஸ்போர்ட்டியராக இல்லை. இது ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கின் ஒரு மைனஸாக பார்க்கப்படுகிறது.

விலை குறைவான 200 சிசி பைக்.. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் டெலிவரி தொடங்கியது.. எக்ஸ் பல்ஸ் வருவது எப்போது?

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கில், 200 சிசி, 4 ஸ்ட்ரோக் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஏர் கூல்டு மோட்டாரான இது அதிகபட்சமாக 18 பிஎச்பி பவரையும், 17 என்எம் டார்க் திறனையும் வழங்கவல்லது. 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது.

விலை குறைவான 200 சிசி பைக்.. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் டெலிவரி தொடங்கியது.. எக்ஸ் பல்ஸ் வருவது எப்போது?

அலாய் வீல்கள், டியூப்லெஸ் டயர்கள், எலக்ட்ரிக் ஸ்டார்டர், டெலிஸ்கோபிக் ப்ரண்ட் ஃபோர்க்ஸ், மோனோஷாக் ரியர் சஸ்பென்சன், அனலாக்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் உள்ளிட்ட வசதிகளையும் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக் பெற்றுள்ளது.

விலை குறைவான 200 சிசி பைக்.. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் டெலிவரி தொடங்கியது.. எக்ஸ் பல்ஸ் வருவது எப்போது?

இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 114 கிலோ மீட்டர்கள். பூஜ்ஜியத்தில் இருந்து 60 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை 4.6 வினாடிகளில், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக் எட்டும். இந்த பைக் 2,062 எம்எம் நீளமும், 778 எம்எம் அகலமும், 1,072 எம்எம் உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் வீல் பேஸ் 1,338 எம்எம்.

விலை குறைவான 200 சிசி பைக்.. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் டெலிவரி தொடங்கியது.. எக்ஸ் பல்ஸ் வருவது எப்போது?

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கின் மொத்த எடை 148 கிலோ. இந்த பைக்கில், 12.5 லிட்டர் பெட்ரோல் டேங்க் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் கிரவுண்ட் க்ளியரன்ஸ் 165 எம்எம். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த பைக்கின் டெலிவரி தற்போது தொடங்கியுள்ளது.

விலை குறைவான 200 சிசி பைக்.. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் டெலிவரி தொடங்கியது.. எக்ஸ் பல்ஸ் வருவது எப்போது?

இந்தியாவின் கிழக்கு பகுதிகளிலும், வட கிழக்கு மாநிலங்களிலும் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக் தற்போது வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்பட்டு வருகிறது. எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்குகளின் டெலிவரி தொடங்கிவிட்ட நிலையில், ஹீரோ நிறுவனத்தின் அடுத்த இலக்காக இருப்பது எக்ஸ் பல்ஸ்.

விலை குறைவான 200 சிசி பைக்.. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் டெலிவரி தொடங்கியது.. எக்ஸ் பல்ஸ் வருவது எப்போது?

ஆன்-ஆப் ரோடு பைக்கான எக்ஸ் பல்ஸ், எதிர்வரும் பண்டிகை காலத்தில் லான்ச் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக அக்டோபர் மாதம் லான்ச் ஆகலாம். இந்த பைக் எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கை காட்டிலும் விலை அதிகமானதாகவே இருக்கும்.

விலை குறைவான 200 சிசி பைக்.. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் டெலிவரி தொடங்கியது.. எக்ஸ் பல்ஸ் வருவது எப்போது?

ஆனால் எக்ஸ் பல்ஸ் பைக்கின் விலை 1 லட்ச ரூபாய்க்குள்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலமாக இந்தியாவில் மிகவும் விலை குறைவான ஆப் ரோடு மோட்டார் சைக்கிள் என்ற பெருமையை எக்ஸ் பல்ஸ் பெறும் என ஆட்டோமொபைல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஹீரோ
English summary
Xtreme 200R motorcycle deliveries begun in north east and eastern India. Read in tamil
Story first published: Monday, July 9, 2018, 13:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X