யமஹா ஆர்15 வாசிக்கும் மகுடிக்கு பெட்டி பாம்பாக மடங்கும் இளைஞர்கள்! பரிதாப நிலையில் பல்சர், ஜிக்ஸர்

பல்சர் 220, ஜிக்ஸர் 150 ஆகிய பைக்குகளை காட்டிலும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்பட்டாலும் இளைஞர்களின் ஆர்வம் எல்லாம் யமஹா ஆர்15 வி 3.0 பைக்கின் மீதுதான் உள்ளது.

பல்சர் 220, ஜிக்ஸர் 150 ஆகிய பைக்குகளை காட்டிலும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்பட்டாலும் இளைஞர்களின் ஆர்வம் எல்லாம் யமஹா ஆர்15 வி 3.0 பைக்கின் மீதுதான் உள்ளது.

இளைஞர்களை வசீகரிக்க என்ன மந்திரம் போடுகிறது யமஹா ஆர்15 வி 3.0... கதறும் பல்சர், ஜிக்ஸர்..

இந்திய இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பைக்குகளில் ஒன்றாக யமஹா ஆர்15 வி 3.0 (R15 V3.0) திகழ்கிறது. எனவே யமஹா ஆர்15 வி 3.0 பைக்கின் விற்பனை ஒவ்வொரு மாதமும் அதிகரித்து கொண்டே வருகிறது. யமஹா ஆர்15 வி 3.0 பைக்கானது ஃபுல்லி ஃபேர்டு (Fully Faired) வகையை சேர்ந்தது.

இளைஞர்களை வசீகரிக்க என்ன மந்திரம் போடுகிறது யமஹா ஆர்15 வி 3.0... கதறும் பல்சர், ஜிக்ஸர்..

இந்த சூழலில், கடந்த செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 13,054 ஆர்15 வி 3.0 பைக்குகளை யமஹா விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கையானது, யமஹா ஆர்15 வி 3.0 பைக்குகளை காட்டிலும் குறைவான விலையில் விற்பனையாகும் பஜாஜ் பல்சர் 220 பைக்குகளை காட்டிலும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இளைஞர்களை வசீகரிக்க என்ன மந்திரம் போடுகிறது யமஹா ஆர்15 வி 3.0... கதறும் பல்சர், ஜிக்ஸர்..

கடந்த செப்டம்பர் மாதத்தில் வெறும் 8,856 பல்சர் 220 பைக்குகளை மட்டுமே பஜாஜ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. பஜாஜ் பல்சர் 220 மட்டுமல்லாது, மற்றொரு ஃபுல்லி ஃபேர்டு மற்றும் மிகவும் விலை குறைவான பைக்கான சுஸுகி ஜிக்ஸர் 150 பைக்கும் குறைவான எண்ணிக்கையில்தான் விற்பனையாகியுள்ளது.

இளைஞர்களை வசீகரிக்க என்ன மந்திரம் போடுகிறது யமஹா ஆர்15 வி 3.0... கதறும் பல்சர், ஜிக்ஸர்..

அதாவது கடந்த செப்டம்பர் மாதத்தில் வெறும் 4,622 சுஸுகி ஜிக்ஸர் 150 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது யமஹா ஆர்15 வி 3.0 பைக் விற்பனையான எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இளைஞர்களை வசீகரிக்க என்ன மந்திரம் போடுகிறது யமஹா ஆர்15 வி 3.0... கதறும் பல்சர், ஜிக்ஸர்..

இதில், ஆச்சரியம் அளிக்கும் விஷயம் என்னவென்றால், பஜாஜ் பல்சர் 220 மற்றும் சுஸுகி ஜிக்ஸர் 150 ஆகிய பைக்குகளை காட்டிலும், யமஹா ஆர்15 வி 3.0 பைக்கின் விலை அதிகம். அப்படி இருந்தும் கூட யமஹா ஆர்15 வி 3.0 பைக்தான் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளது.

இளைஞர்களை வசீகரிக்க என்ன மந்திரம் போடுகிறது யமஹா ஆர்15 வி 3.0... கதறும் பல்சர், ஜிக்ஸர்..

யமஹா ஆர்15 வி 3.0 பைக்கின் விலை 1.27 லட்ச ரூபாய். பஜாஜ் பல்சர் 220 பைக்கின் விலை 97,447 ரூபாய். அதே நேரத்தில் சுஸுகி ஜிக்ஸர் 150 பைக்கின் விலை வெறும் 81,550 ரூபாய் மட்டுமே (இவை அனைத்தும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும்).

இளைஞர்களை வசீகரிக்க என்ன மந்திரம் போடுகிறது யமஹா ஆர்15 வி 3.0... கதறும் பல்சர், ஜிக்ஸர்..

முன்னதாக 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சுமார் 8,000 யமஹா ஆர் 15 வி 3.0 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் அதற்கு அடுத்த மாதத்திலேயே அதன் விற்பனை எண்ணிக்கை 13,054ஆக அதிகரித்துள்ளது.

இளைஞர்களை வசீகரிக்க என்ன மந்திரம் போடுகிறது யமஹா ஆர்15 வி 3.0... கதறும் பல்சர், ஜிக்ஸர்..

இந்த வகையில் பார்த்தால் ஒரு மாதத்திற்கு சராசரியாக 8,000-10,000 என்ற எண்ணிக்கையில் யமஹா ஆர்15 வி 3.0 பைக்குகள் விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் 1.27 லட்ச ரூபாய் விலை கொண்ட ஒரு பைக் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் விற்பனையாவது ஆச்சரியமான விஷயம்தான்.

இளைஞர்களை வசீகரிக்க என்ன மந்திரம் போடுகிறது யமஹா ஆர்15 வி 3.0... கதறும் பல்சர், ஜிக்ஸர்..

கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற 2018 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில்தான், ஆர்15 வி 3.0 பைக்கை யமஹா நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த பைக்கில் 155 சிசி, லிக்யூட் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இளைஞர்களை வசீகரிக்க என்ன மந்திரம் போடுகிறது யமஹா ஆர்15 வி 3.0... கதறும் பல்சர், ஜிக்ஸர்..

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 19.3 பிஎஸ் பவர் மற்றும் 15 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய சக்தி வாய்ந்தது. அத்துடன் யமஹா ஆர்15 வி 3.0 பைக்கில், 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது.

Most Read Articles

யமஹா ஒய்இஸட்எப் ஆர்15 வி 3.0 (YZF R15 v3-0) பைக்கின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

English summary
Yamaha R15 V3.0 Beat Bajaj Pulsar 220 & Gixxer 150 In Sales. Read in Tamil
Story first published: Wednesday, October 31, 2018, 11:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X